குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் குலோத்துங்கனைச் சிறப்பித்து அவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகும். இது பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த கி.பி 12ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.[1] இரண்டாம் குலோத்துங்கன் மீது அவர் பாடிய முதல் நூல் குலோத்துங்கன் உலா ஆகும்.

நூல் அமைப்பு[தொகு]

103 பாடல்களைக் கொண்ட இந்நூலில் 16 பாடல்கள் மட்டும் முழுமையாகக் கிடைக்காமல் சிதைந்துள்ளன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாக கூறப்படுவதால் திருமாலுடைய அவதாரச் செயல்கள் பலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.[2]

முன்னவர் வரலாறு[தொகு]

பிற்காலச் சோழ மன்னர்களான இராசராசன், இராசேந்திரன், இராசாதிராசன், முதற்குலோத்துஙகன், விக்கிரமன் ஆகிய இவனது முன்னவர்களின் வரலாற்றை நிரல்பட விளக்கியுள்ளார்.[2]

பருவங்கள்[தொகு]

இரண்டாம் குலோத்துங்கனின் வீரச் செயல்களையும், ஏனைய செய்திகளையும் சுவைபடத் தொகுத்து ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனைப் பிள்ளையாகப் பாவித்து காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், வாரானைப்பருவம், அம்புலிப்பருவம், சிறுபறைப்பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப்பருவம் எனப் பத்துப் பருவங்களின் வாயிலாக அவன் புகழ் உரைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிள்ளைத்தமிழ் நூல்கள்
  2. 2.0 2.1 2.2 குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013