உள்ளடக்கத்துக்குச் செல்

தக்கயாகப் பரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்கயாகப் பரணி (தக்கன் + யாகம் + பரணி) ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந் நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.

ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணியில் 814 தாழிசைகள் உள்ளன. அவற்றுள் 516 தாழிசைகளுக்கு மட்டும் 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை உள்ளது. ஏனையவற்றைக் ‘கவிச்சக்கரவர்த்தியின் வாக்கு அல்ல’ என அந்த உரை குறிப்பிடுகிறது. இவை பிற்காலத்தவரின் இடைச்செருகல்கள்

தக்கயாகப்பரணி உரை இந்த நூலின் சிறப்பைக் காட்டுகிறது.

கருவிநூல்

[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கயாகப்_பரணி&oldid=3278498" இலிருந்து மீள்விக்கப்பட்டது