தாழ்ப்பாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரத் தாழ்ப்பாள்

தாழ்ப்பாள் என்பது கதவில் அமைக்கப்படும் ஒரு கருவி. வீட்டுக்கதவு, கோட்டைக்கதவு போன்றவற்றில் இது அமைக்கப்படும். உள்ளே இருப்பவர் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டால் வெளியே இருப்பவர் கதவைத் திறக்க முடியாது. தாழ்ப்பாள் போடுதலைத் 'தாளிடுதல்' என்பர்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியர் காலத்தில் 'தாழ்' என்னும் பூட்டை உணர்த்திற்று. இக்காலத்தில் இதனைத் 'தாள்' எனவும் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் 'பூட்டுக்குச்சி' என வழங்கும் சொல்லைத் தொல்காப்பியம் 'தாழக்கோல்' எனச் சொல்லிக்காட்டுகிறது.[1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தாள் என் கிளவி கோலொடு புணரின்
    அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும் - தொல்காப்பியம், புள்ளி மயங்கஅயல் 89
    தாழ் + அக்கு + கோல் = தாழக்கோல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழ்ப்பாள்&oldid=1851052" இருந்து மீள்விக்கப்பட்டது