கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: vep:Pähkim
சி r2.7.3) (Robot: Modifying war:Liso (bunga) to war:Nuwes (bunga)
வரிசை 144: வரிசை 144:
[[vep:Pähkim]]
[[vep:Pähkim]]
[[vi:Hạch (quả)]]
[[vi:Hạch (quả)]]
[[war:Liso (bunga)]]
[[war:Nuwes (bunga)]]
[[yi:נוס]]
[[yi:נוס]]
[[zh:坚果]]
[[zh:坚果]]

06:33, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஏசுல்நட்
செசுநட்
Acorn

கொட்டை அல்லது பழக்கொட்டை (Nut) என்பது சில வகையான தாவர இனங்களில் காணப்படும், தாமாக உடையாத, கடினமான ஓட்டினால் சூழப்பட்ட பழத்தைக் குறிக்கும். ஒரு பலக்கிய சூலகத்தில் இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும்.
Hazelnut, செசுநட், Acorn போன்றன சில எடுத்துக்காட்டுகளாகும்.

பொது வழக்கில் பல வகையான வறண்ட விதைகளும், பழங்களும் கூடக் கொட்டைகள் என்று அழைக்கப்பட்டாலும், தாவரவியல் அடிப்படையில் அவை கொட்டைகள் அல்ல. தாவரவியலாளர்கள் பொது வழக்கில் கொட்டைகள் என அழைக்கப்படுபவை அனைத்தையும் உண்மையான கொட்டைகளாக ஏற்றுக் கொள்வதில்லை. பல தாவரங்களில், பழங்கள் வெடிக்கும்போது, விதைகள் சிதறி தாமாகவே வெளிப்பட்டுவிடும் எனினும் கொட்டைகளில் அவ்வாறு நிகழ்வதில்லை. பொது வழக்கில், கடின ஓட்டையும், உண்ணக்கூடிய மையப் பகுதியையும் கொண்ட எதனையும் கொட்டை என வழங்கும் வழக்கம் உள்ளது. [1] உணவு மற்றும் சமையல் குறித்த வழக்கில் பொதுவாக பிரேசில் கொட்டை, பிசுத்தா கொட்டை போன்றவற்றையும் கொட்டைகள்[2] என்று அழைக்கப்பட்டாலும், அவை தாவரவியல் அடிப்படையில் கொட்டைகள் அல்ல.


சில வகையான தாவரக் கொட்டைகள் மனித மற்றும் விலங்குகளுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து வளங்கும் சத்துணவாக அமைந்திருக்கின்றன.


தாவரவியல் வரையறை

தாவரவியல் அடிப்படையில் ஒரு கொட்டை என்பது பெரும்பாலும் ஒற்றை விதையைக் (அரிதாக இரண்டு விதையைக்) கொண்ட காய்ந்த பழத்தைக் குறிக்கும். இதில் சூலகப் பகுதி முதிர்ச்சி அடையும் போது மிகவும் கடினத்தன்மையைப் பெறுகிறது. அதோடு விதையானது சூலகச் சுவற்றோடு (ஓட்டோடு) ஒட்டிக் கொண்டோ, இணைந்தோ அமைந்து விடுகிறது. பொதுவாக கீழான சூலகத்தையும் (inferior ovary), வெடிக்காத பழங்களையும் (indehiscent fruit) கொண்ட தாவரங்களிலேயே இந்தக் கொட்டைகள் காணப்படுகின்றன.

சமையல்சார் அல்லது பொது வரையறை

சமையலில் கொட்டை என்னும் சொல்லானது அதிகளவில் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகின்றது. சமையலில் பயன்படுத்தக்கூடிய, கடினமான உறையொன்றினுள் இருக்கும், எண்ணெய்த் தன்மை கொண்ட, பெரிய உண்ணப்படக்கூடிய மையப்பகுதியுடைய அனைத்தும் கொட்டை என அழைக்கப்படுகின்றது.

தாவரவியல் அடிப்படையில் அல்லாமல் பொதுவாகக் கொட்டைகள் என வழங்கப்பெறும் சில கொட்டைகள்:

பயன்பாடுகள்

கொட்டைகள், எண்ணெய் கொண்ட விதைகளின் ஊட்டச்சத்து இயல்புகளைக் காட்டும் வரிப்படம்.

எண்ணெய் பதார்த்தத்தைக் கொண்டிருப்பதனால், ஆற்றல் தரும் மூலமாக உள்ளது. இவை சமைக்கப்படாமலோ, சமைக்கப்பட்டோ, அல்லது நொறுக்குத்தீனியாக பதப்படுத்தப்பட்டோ மனிதரால் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இவற்றிலுள்ள எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, சமையலிலோ, அல்லது ஒப்பனைப் பொருட்களாகவோ பயன்படுத்தப்படுகின்றது.

பல வகையான கொட்டைகள் விலங்கு உணவாகவும் அமைகின்றது.

உண்மையான கொட்டைகளாக இருந்தாலும் சரி, பொதுவாக கொட்டை என அழைக்கப்படுவனவாக இருந்தாலும் சரி, பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளில் பொதுவானவையாக உள்ளன.

ஊட்டச்சத்து

பல நோய்ப் பரவல் இயல் அடிப்படையிலான ஆய்வுகள் கொட்டைகளை உணவாக எடுத்து வரும் மனிதர்களில் Coronary Heart Disease (CHD) வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக அறிவிக்கின்றன[4]. 1993 இல் முதன் முதலாக CHD யிலிருந்து பாதுகாப்பு தொடர்பில் கொட்டைகள் தொடர்புபடுத்தப்பட்டு கூறப்பட்டது[5]. அதன் பின்னர் பல மருந்தியக்கச் சோதனைகள் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதுபோல் வெளிவந்துள்ளன. கொட்டைகளில் உள்ள பல பதார்த்தங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனினும், முக்கியமாக அவற்றிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்னும் பதார்த்தமே காரணம் என மருந்தியக்கச் சோதனைகள் காட்டுகின்றன[6].

அத்துடன் கொட்டைகளில் மிகக் குறந்தளவிலேயே glycemic index (GI) இருப்பதனால்[7], இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை கொண்ட, நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) நோயுள்ள நோயாளிகளின் உணவில் இவ்வகை கொட்டைகள் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகின்றது[8].

கொட்டைகளை உண்ணும் மனிதர்கள் ஓரிரு ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது[9]. ஆனால் இதற்குக் காரணம் கொட்டைகள் உண்ணப்படும்போது வேண்டாத உணவுகளை உண்ணுதல் குறைவதாகவும் இருக்கலாம்[10].

கொட்டைகளில் சில அத்தியாவசியமானக் கொழுப்பு அமிலங்கள் மற்றும் நிறைவுறா கொழுப்பு என்பன காணப்படுகின்றன. மேலும் நெகிழ்வுத் தன்மையும், குருதி உறைகட்டிகள் உருவாதலுக்கு எதிரான தன்மையும் கொண்ட சுவர்களைக் கொண்ட தமனிகள் உருவாக உதவக் கூடிய ஆர்ஜினின் (Arginine) என்னும் அமினோ அமிலத்தையும் கொட்டைகக் கொண்டிருக்கின்றன[11].

பல கொட்டைகளும் உயிர்ச்சத்து ஈ, உயிர்ச்சத்து பி (B2, B9) என்பவற்றை அதிகளவில் கொண்டனவாகவும், புரதம், நார்ச்சத்து, மற்றும் பொசுபரசு, மக்னீசியம், பொட்டாசியம், செப்பு, செலீனியம் போன்ற அத்தியாவசிய கனிமங்களைக் கொண்டனவாகவும் உள்ளன[12].

பொதுவாக சமைக்கப்படாத கொட்டைகளே ஆரோக்கியமானவையாக உள்ளன[13]. காரணம் வறுக்கப்படும்போது, அவற்றிலுள்ள 15%ஆரோக்கியம் தரும் எண்ணெய்கள் அழிந்துவிடுகின்றன. வறுக்கப்படும்போது வயது அதிகரிப்பை விரைவாக்கும் சில வேதிப்பொருட்கள் உருவாவதாகவும் கருத்துண்டு[சான்று தேவை].

References

  1. Black, Michael H.; Halmer, Peter (2006). The encyclopedia of seeds: science, technology and uses. Wallingford, UK: CABI. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85199-723-0.
  2. Alasalvar, Cesarettin; Shahidi, Fereidoon. Tree Nuts: Composition, Phytochemicals, and Health Effects (Nutraceutical Science and Technology). CRC. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-3735-2.
  3. Lina Sequeira. Certificate Biology 3. East African Publishers. pp. 130–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789966253316. பார்க்கப்பட்ட நாள் 29 July 2010.
  4. Kelly JH, Sabaté J (2006). "Nuts and coronary heart disease: an epidemiological perspective". Br J Nutr 96: S61–S67. doi:10.1017/BJN20061865. பப்மெட்:17125535. 
  5. Sabaté J, Fraser GE, Burke K, Knutsen SF, Bennett H, Linsted KD (1993). "Effects of walnuts on serum lipid levels and blood pressure in normal men". Engl J Med 328 (9): 603–607. doi:10.1056/NEJM199303043280902. 
  6. Rajaram S, Hasso Haddad E, Mejia A, Sabaté J (2009) Walnuts and fatty fish influence different serum lipid fractions in normal to mildly hyperlipidemic individuals: a randomized controlled study. Am J Clin Nutr 2009, 89, 1657S-1663S.
  7. David Mendosa (2002). "Revised International Table of Glycemic Index (GI) and Glycemic Load (GL) Values". பார்க்கப்பட்ட நாள் 2007-11-23.
  8. Josse AR, Kendall CWC, Augustin LSA, Ellis PR, Jenkins DJA (2007). "Almonds and postprandial glycemia — a dose response study". Metabolism 56 (3): 400–404. doi:10.1016/j.metabol.2006.10.024. பப்மெட்:17292730. 
  9. Fraser GE, Shavlik DJ (2001). "Ten years of life: Is it a matter of choice?". Arch Int Med 161 (13): 1645–1652. doi:10.1001/archinte.161.13.1645. பப்மெட்:11434797. 
  10. "ABC News: The Places Where People Live Longest". Retrieved January 18, 2007.
  11. "Eating Nuts: A Healthy Way to Lower Cholesterol". CholesterolAdvice.net.
  12. Kris-Etherton PM, Yu-Poth S, Sabaté J, Ratcliffe HE, Zhao G, Etherton TD (1999). "Nuts and their bioactive constituents: effects on serum lipids and other factors that affect disease risk". Am J Clin Nutr 70 (3 Suppl): 504S–511S. பப்மெட்:10479223. 
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bbc என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டை&oldid=1288184" இலிருந்து மீள்விக்கப்பட்டது