கோ. கொ. அனந்தசுரேசு
கோ.கொ. அனந்தசுரேசு Gondi Kondaiah Ananthasuresh | |
---|---|
பிறப்பு | 30 மே 1967 சிங்கனமலை, அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர். |
துறை | இயந்திரப் பொறியியல். |
ஆய்வு நெறியாளர் | சிறீதர் கோட்டா |
விருதுகள் | சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது |
கோந்தி கொண்டையா அனந்தசுரேசு (Gondi Kondaiah Ananthasuresh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இயந்திரப் பொறியாளர் ஆவார். பெங்களுரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பேராசிரியராக இவர் பணிபுரிகிறார்.[1] இடவியல் தேர்வுமுறை, இணக்கப் பொறிமுறை மற்றும் மீநுண்-மின்-இயந்திர திட்டங்கள் ஆகிய துறைகளில் இவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானார்.
தற்போது இந்திய அறிவியல் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக இக்கழகத்தில் உயிரியல் அமைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தின் தலைவராகவும் இருந்தார்.[2]
2010 ஆம் ஆண்டு பொறியியல் அறிவியல் துறைக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது அனந்தசுரேசுக்கு வழங்கப்பட்டது.[3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அனந்தசுரேசு சென்னையிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் டோலிதோ பல்கலைக்கழகத்தில் 1991 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்பு அவர் 1996 முதல் 2004 வரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டமேற்படிப்பு ஆய்வறிஞராகவும் அனந்தசுரேசு இருந்தார். இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தற்போது அனந்தசுரேசு பெங்களுருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் பல்துறை மற்றும் பல்லளவிலான சாதன வடிவமைப்பு ஆய்வகத்தின் தலைவராக உள்ளார்.[4][5] இதுவரை 18 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 30 முதுகலை மாணவர்களுக்கும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "G. K. Ananthasuresh | Department of Mechanical Engineering". Mecheng.iisc.ernet.in. Archived from the original on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
- ↑ "Bhatnagar award for 3 B'lore scientists". Deccanherald.com. 2010-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
- ↑ "M2D2 lab, IISc Bangalore". Archived from the original on 21 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
- ↑ "Ananthasuresh". Mecheng.iisc.ernet.in. Archived from the original on 21 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.