அமர்நாத்
அமர்நாத் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அமர்நாத்ஜி குடைவரை கோயில் |
அமைவிடம் | |
அமைவு: | அமர்நாத், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அமர்நாத் (சிவன்) |
வரலாறு | |
அமைத்தவர்: | அமர்நாத் பாபா |
அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.[1]
அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது.[2] இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது.[3]
இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.[4] பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.
இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்,[2] ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது.[5] எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.
இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.
படத்தொகுப்பு
[தொகு]-
அமர்நாத் யாத்திரை
-
யாத்ரிகர்களுக்கு உணவு வழங்கும் முகாம்கள்
-
லித்தர் ஆறு மேலுள்ள பனி, அமர்நாத் செல்லும் வழியிலுள்ள சந்தன்வாரி பகுதி
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New shrine on Amarnath route". The Hindu. 2005-05-30 இம் மூலத்தில் இருந்து 2007-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070618193352/http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm.
- ↑ 2.0 2.1 "Amarnathji Yatra - a journey into faith". Official Web Site of Jammu and Kashmir Tourism. Archived from the original on 2006-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- ↑ Ortner, Jon. On the road again பரணிடப்பட்டது 2006-10-17 at the வந்தவழி இயந்திரம். PDN Gallery.
- ↑ "Amarnath Cave - The legend". Bhole Bhandari Charitable Trust.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm
வெளி இணைப்புகள்
[தொகு]- 'அமர்நாத் கோயிலை 500 ஆண்டுக்கு முன்பு அடையாளம் கண்ட இஸ்லாமியர்'
- அமர்நாத் யாத்திரை... வழி, வசதிகள்
- அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு 7 விடயங்கள்
- அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பி.எஸ்.என்.எல் வழங்கும் சிறப்பு சிம் கார்டுகள்
- Virtual Lord Shiva Darshan and pilgrimage with videos and images
- The temple's homepage managed by the temple trust
- Amarnath Virtual Tours with Gallery
- Jammu and Kashmir tourism page பரணிடப்பட்டது 2006-06-16 at the வந்தவழி இயந்திரம்
- Amarnath Yatra Route பரணிடப்பட்டது 2008-07-25 at the வந்தவழி இயந்திரம்
- Amarnath Cave Yatra Temple Jammu Kashmir பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்