அபிசேக் சர்மா
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 4 செப்டம்பர் 2000 அமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா |
மட்டையாட்ட நடை | இடது கை |
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் |
பங்கு | பன்முக வீரர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2017–தற்போது | பஞ்சாப் |
2018 | டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 4) |
2019–தற்போது | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 18) |
மூலம்: கிரிக்கெட் ஆர்க்கைவ், 19 ஏப்ரல் 2023 |
அபிசேக் சர்மா (பிறப்பு 4 செப்டம்பர் 2000) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் . [1] அவர் 25 பிப்ரவரி 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே கோப்பைத்தொடரில் பஞ்சாப் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [2] அவர் 6 அக்டோபர் 2017 அன்று 2017-18 ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [3]
டிசம்பர் 2017 இல், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2018 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். [4]
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]ஜனவரி 2018 இல், அவர் 2018 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸால் ரூ 5.5 மில்லியனுக்கு வாங்கப்பட்டார். [5] [6] [7] 12 மே 2018 அன்று, அவர் தனது இருபது20 அறிமுகப் போட்டியில் 2018 இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி 19 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்தார். [8] 28 பிப்ரவரி 2021 அன்று மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக பஞ்சாப் அணிக்காக விளையாடி, பட்டியல் அ துடுப்பாட்டத்தில் 42 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் இந்திய வீரர்களில் பட்டியல் அ போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற வீரர் ஆனார். [9] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். [10] [11] 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில், அவர் 14 போட்டிகளில் விளையாடி மொத்தம் 426 ஓட்டங்கள் எடுத்தார் [12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Abhishek Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
- ↑ "Vijay Hazare Trophy, Group A: Punjab vs Vidharbha at Delhi, Feb 25, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
- ↑ "Group D, Ranji Trophy at Dharamsala, Oct 6-9 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
- ↑ "Prithvi Shaw to lead India in Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
- ↑ "IPL Auction 2018 - Abhishek Sharma| Cricbuzz.com". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "U19 World Cup stars snapped up in IPL auction". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
- ↑ "45th match (N), Indian Premier League at Delhi, May 12 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ "The ACS – The ACS" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
- ↑ Jha, Yash (24 March 2022). "The uncapped ones: Shahrukh Khan, Umran Malik and more". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ "Mens Team | IPLT20". www.iplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.