ஏ. ஆர். முருகதாஸ்
ஏ. ஆர். முருகதாஸ் | |
---|---|
2009 ஆம் ஆண்டில் கஜினி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது முருகதாஸ் | |
பிறப்பு | முருகதாஸ் 25 செப்டம்பர் 1977 கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001– தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ரம்யா |
ஏ. ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தொடக்ககால வாழ்க்கை
[தொகு]முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.[2]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.[3]
பங்காற்றிய திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்கம் | தயாரிப்பு | கதை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2001 | தீனா | ஆம் | ஆம் | முதல் திரைப்படம் | |
2002 | ரமணா | ஆம் | ஆம் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர் 2003 இல் தாகூர் என தெலுங்கில் மறுஆக்கம் 2005 இல் விஷ்ணு சேனா என கன்னடத்தில் மறுஆக்கம் 2015 இல் கேப்பர் என இந்தியில் வெளிவர இருக்கிறது. | |
2005 | கஜினி | ஆம் | ஆம் | 2008 இல் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் | |
2006 | ஸ்டாலின் | ஆம் | ஆம் | தெலுங்குத் திரைப்படம் | |
2008 | கஜினி | ஆம் | ஆம் | இந்தித் திரைப்படம் ஸ்டார்டஸ்ட் விருது-பேசப்படும் புதிய இயக்குநர் அப்சரா விருது-சிறந்த இயக்குநர் பரிந்துரை—பிலிம்பேர் விருதுகள் - | |
2011 | ஏழாம் அறிவு | ஆம் | ஆம் | பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பரிந்துரை—விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர் | |
2012 | துப்பாக்கி | ஆம் | ஆம் | விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர் பரிந்துரை—விஜய் விருதுகள் - சிறந்த இயக்குநர் பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் பரிந்துரை—தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த இயக்குநர் பரிந்துரை—எடிசன் விருது சிறந்த இயக்குநர் கூகுள் பாடல் ஒரு கவுரவத் தோற்றத்தில் | |
2014 | ஹாலிடே | ஆம் | ஆம் | இந்தித் திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம் | |
2014 | கத்தி | ஆம் | ஆம் |
அகிரா | |
2016 | அகிரா | ஆம் | ஆம் | ஆம் | மௌனகுரு திரைப்படத்தின் மறுஆக்கம் |
2017 | ஸ்பைடர் | ஆம் | ஆம் | ||
2018 | சர்கார் | ஆம் | ஆம் | ||
2018 | விஜய் 62 | ஆம் | ஆம் | ||
2020 | தர்பார் (திரைப்படம்) | ஆம் |