2021 துருக்கிய காட்டுத்தீ
2021 துருக்கிய காட்டுத்தீ | |
---|---|
ஆந்தாலியா, மெர்சின் மற்றும் முக்லா மாகாணங்களில் சூலை 30 அன்று காணப்பட்ட காட்டுத்தீயின் புகை | |
அமைவிடம் | பெரும்பாலும் துருக்கியின் மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் சில இதர பகுதிகள் |
புள்ளிவிவரங்கள் | |
மொத்த பரப்பு | 95 ஆயிரம் ஏக்கர் [1] |
நாள்(கள்) | 28 சூலை 2021 – தற்போது வரை |
காயங்கள் | 800+[2] |
உயிரிழப்புகள் | 8[3] |
← 2020 துருக்கிய காட்டுத்தீ |
2021 துருக்கிய காட்டுத்தீ (2021 Turkish Wildfires) பெரும்பாலும் துருக்கியின் தெற்கு மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுத்தீ பரவலைக் குறிப்பது ஆகும். [4] இந்தக் காட்டுத்தீ குறைந்தபட்சம் ஒரு பதின்ம ஆண்டு காலத்தில் நாட்டில் மிக மோசமானதாகும். [5] இந்தக் காட்டுத்தீ நிகழ்வானது மனவாட்கட், ஆந்தாலியாவில் 28 சூலை 2021 அன்று தொடங்கியது. இதன் ஆரம்ப வெப்பநிலை சுமார் 37°செல்சியசு (99°பாரன்கீட்டு) ஆக இருந்தது. 2021 சூலை 30 அன்றைய நிலையில், மிலாசு, அதனா, உஸ்மானியே, மெர்சின் மற்றும் கெய்சேரி உள்ளிட்ட மொத்தம் 17 மாகாணங்கள் ஒரே நேரத்தில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருந்தன.[6]
பின்னணி
[தொகு]2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் நாடுகளுக்கிடையேயான காலநிலை மாற்றக் குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கை "வெப்பமான, வறண்ட நிலைமைகள் அடிக்கடி மற்றும் நீடித்த வறட்சிக்கு வழிவகுக்கும், அத்துடன் நீண்ட தீப்பருவம் மற்றும் தீ ஆபத்து அதிகரிக்கும், குறிப்பாக இவை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகமாக காணப்படும்." என்று குறிப்பிட்டிருந்தது. [7]
மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கோடையில் துருக்கியில் உள்ள காட்டுத் தீ பொதுவானது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் மே மாதமானது கடந்த 50 வருடங்களுக்கும் மேலான வெப்பமான மே மாதமாக இருந்தது. துருக்கியின் கடுமையான வறட்சியைத் தொடர்ந்து, துருக்கியின் காலநிலை மாற்றத்தால் இக்காட்டுத்தீ பரவலுக்கான அதிக வாய்ப்பிருந்தது. [8] சூன் 26 மற்றும் 27 ஆம் நாள்களில் காஸ், டார்சஸ் மற்றும் மார்மரிஸ் ஆகிய இடங்களில் இதற்கு முன்னதாக காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன.[9] 60 ஆண்டுகளாக இல்லாத அதிகபட்ச வெப்பநிலை சிசிரில் 49°செல்சியசு (120°பாரன்கீட்டு) ஏற்பட்டது. 2021 இல் உலகம் முழுவதும் ஏற்பட்ட தீவிரமான வானிலையைத் தொடர்ந்து இக்காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீ நிகழ்வுகள்
[தொகு]காட்டுத்தீயில் எட்டு பேர் இறந்தனர். அவர்களில் சிலர் தீயணைப்பு வீரர்கள் ஆவர். ஆந்தாலியாவில் 18 கிராமங்கள், அதானா மற்றும் மெர்சினில் 16 கிராமங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். புகை உள்ளிழுத்தலால் பெரும்பாலான காயங்கள் ஏற்பட்டன. போட்ரமில் உள்ள 2 உணவக விடுதிகளில் தங்கியிருந்த 4000-இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடல் வழியாக வெளியேற்றப்பட்டனர். துருக்கிய கடலோர காவல்படை தனியார் படகுகள் இந்த வெளியேற்றத்திற்கு உதவியது.
மூன்று விமானங்கள், 38 உலங்கூர்திகள் மற்றும் சுமார் 4,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாக விவசாய மற்றும் வனத்துறை அமைச்சர் பெக்கீர் பக்தெமிர்லி ஜூலை மாதம் கூறினார். 2000 க்கும் மேற்பட்ட பண்ணை விலங்குகள் இறந்துவிட்டதாக அவர் கூறினார். ஆளில்லா இயங்கு உலங்கூர்திகளும் பயன்படுத்தப்பட்டன. 485 நீர் தெளிப்பான்கள், மற்றும் 660 இடிப்புந்துகளும் பயன்படுத்தப்பட்டன. [10] பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் சூலை 29 அன்று 58 பேர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறியது. ஒய்மாபினர் அணையில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர். [11] 37°செல்சியசு (99°பாரன்கீட்டு) வெப்பநிலை, ஈரப்பதம் 14%, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று ஆகியவை தீப்பிழம்புகள் பரவ காரணங்களாக அமைந்தன.[12] தீயணைப்பு விமானங்கள் பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையும், விழுந்த மரங்களில் சில சாலை வழியான அணுகலைத் தடுத்ததும் தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தின.
100 க்கும் மேற்பட்ட கலை அருங்காட்சியகங்களை இடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் முரத் குரும் கூறினார். கோப்பர்நிக்கஸ் செயற்கைக்கோள்கள் அதிகபட்ச தினசரி வெப்ப தீவிரத்தை சுமார் 20 ஜிகாவாட்டில் அளந்தறிவித்தது. இது முந்தைய பதிவுகளை விட நான்கு மடங்கு அதிகமானதாகும். [13] போசாசி பல்கலைக்கழக காலநிலை நிபுணர் லெவென்ட் குர்னாஸ் கூறுகையில், மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை காட்டுத்தீ தொடங்க உதவியது என்றார். [13] துருக்கிய அதிபர் 5 தென் மாகாணங்களின் சில பகுதிகளை பேரிடர் மண்டலங்களாக அறிவித்தார்.
சர்வதேச எதிர்வினைகள்
[தொகு]அசர்பைஜான், ரஷ்யா, உக்ரைன், ஈரான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நீர்தெளிப்பு விமானம் உட்பட விமானங்களை அனுப்பியது. அஜர்பைஜான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 53 தீயணைப்பு வாகனங்கள், பல அவசர வாகனங்கள் மற்றும் 500 தீயணைப்பு வீரர்களை அனுப்பியது. கிரீஸ் உதவி வழங்கியது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. [14] ஐந்து டன்களுக்கும் குறைவான தண்ணீரை எடுத்துச் செல்லக்கூடிய விமானங்களின் உதவிகளை மட்டுமே அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று பக்டெமிர்லி கூறினார். [15] பல நாடுகள் உதவி வழங்கின. [16]
பேரிடர் நிகழ்வின் பின்விளைவு
[தொகு]காயமடைந்தவர்களுக்கு அரசாங்கக் கடன் திருப்பிச் செலுத்துதல் தள்ளிவைக்கப்பட்டது, மேலும் சேதக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டன. [17] மேலும், சிறு வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. [18] இலையுதிர் காலம் வரை பல்வேறு காடுகளுக்கு பொதுமக்கள் செல்வது தடைசெய்யப்பட்டது. [17] எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சித் தலைவர் கெமல் கோலதரோலோ, அதிக விமானங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது இன்றியமையாதது, ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து காடுகளும் செங்குத்தான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால், நிலத்தில் பயணிக்கும் தீயணைப்பு வாகனங்கள் இந்தத் தீயணைப்புப் பணியை செய்வது சவாலானதாக இருக்கும் என்றார். மற்ற எதிர்க்கட்சிகளும் அமைச்சகத்தை விமர்சித்தன. மக்கள் ஜனநாயகக் கட்சியின் செகால்ட்டின் டெமிர்டாஸ் அரசாங்கத்தின் தகுதியின்மையை சுட்டிக்காட்டினார். மெரல் அக்செனர் முந்தைய வருடமே விமானங்கள் பற்றாக்குறையைப் பற்றி அமைச்சகத்திற்கு எச்சரித்ததாகக் கூறினார். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமைச்சகம் தீயணைப்பு விமானங்களை வாங்கும் என்று பக்டெமிர்லி கூறினார். ஆகத்து மாதத்தில் அதிபர் பேரழிவு பகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஒரு மாதத்திற்குள் புனரமைப்பு தொடங்கும் என்று கூறினார். [19] மிக சமீபத்திய சூலை -ஆகஸ்ட் 2021 காட்டுத்தீ நிகழ்வானது தீ வைப்பு அல்லது மனித அலட்சியத்தால் தொடங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆகஸ்ட் 2021 வரை பரவலான தீவிபத்துக்கான மூல காரணம் பற்றிய விசாரணை நடந்து வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Turkey appeals for help to fight wildfires as heatwave continues". தி கார்டியன். 2021-08-02. http://www.theguardian.com/world/2021/aug/02/turkey-appeals-for-help-to-fight-wildfires-as-heatwave-continues.
- ↑ "Turkey: Death toll rises as wildfires rage along coastal resorts". Deutsche Welle. 2021-08-01. https://www.dw.com/en/turkey-death-toll-rises-as-wildfires-rage-along-coastal-resorts/a-58726207.
- ↑ "Turkey wildfires death toll rises to eight". www.thenews.com.pk. August 1, 2021. https://www.thenews.com.pk/latest/871823-turkey-wildfires-death-toll-rises-to-eight.
- ↑ "Turkish wildfire leaves charred home and ashes, as blazes spread". Reuters. 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "EU sends firefighting planes to Turkey as wildfire death toll rises". euronews (in ஆங்கிலம்). 2021-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.
- ↑ Fahim, Kareem; Karatas, Zeynep (29 July 2021). "Under a rust brown sky: Lethal wildfires menace Turkish resorts".
- ↑ Alcamo, J; Moreno, JM; Nováky, B; Bindi, M; Corobov, R; Devoy, RJN; Giannakopoulos, C; Martin, E; Olesen, JE (2007). "Europe" (PDF). In Parry, ML; Canziani, OF; Palutikof, JP; van der Linden, PJ (eds.). AR4 Climate Change 2007: Impacts, Adaptation and Vulnerability. Contribution of Working Group II to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. pp. 541–580.
- ↑ "91 of 101 forest fires under control in Turkey: Minister". பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "Forest fires break out as Turkey experiences hottest days - Turkey News". https://www.hurriyetdailynews.com/forest-fires-break-out-as-turkey-experiences-hottest-days-165854.
- ↑ "Forest fires mostly under control as Turkey strives to recover". Daily Sabah. 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ "Turkey fights forest fires raging through country's south". www.aa.com.tr. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ CNN, Gul Tuysuz and Arwa Damon. "'The animals are on fire,' say devastated farmers as wildfires sweep Turkey". CNN. பார்க்கப்பட்ட நாள் 1 August 2021.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ 13.0 13.1 "Turkish fires sweeping through tourist areas are the hottest on record". தி கார்டியன். 30 July 2021.
- ↑ "Greece says its offer to help Turkey extinguish fires still in place despite rejection". Duvar English. 2 August 2021. பார்க்கப்பட்ட நாள் 3 August 2021.
- ↑ "Turkey battles wildfires for 6th day; 10,000 are evacuated". AP NEWS (in ஆங்கிலம்). 2021-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.
- ↑ "Turkey brings 107 massive forest fires under control - Turkey News". Hürriyet Daily News. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ 17.0 17.1 "Turkey battles wildfires for 3rd day in a row, 88 under control". Daily Sabah. 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "Turkey battles wildfires for 3rd day in a row, 88 under control". Daily Sabah. 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "Country is on fire, ravaged by floods, but the President throws tea at people". Bianet.