உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்சின் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்சின் மாகாணம்
Mersin ili
Location of Mersin Province in Turkey
Location of Mersin Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்Mediterranean
துணைப்பிராந்தியம்Adana
அரசு
 • Electoral districtMersin
பரப்பளவு
 • Total15,853 km2 (6,121 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • Total18,14,468
 • அடர்த்தி110/km2 (300/sq mi)
இடக் குறியீடு0324
வாகனப் பதிவு33

மெர்சின் மாகாணம் (Mersin Province, துருக்கியம்: Mersin ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தெற்கில் மத்திய தரைக்கடல் பகுதிதியில் அந்தால்யா மாகாணம் மற்றும் அதனா மாகாணம் ஆகியவற்றுக்கு இடையே கடற்கரைப் பகுதியியல் அமைந்துள்ளது. மாகாண தலைநகரமாக மெர்சின் நகரம் உள்ளது. மற்ற பிற முக்கிய நகரமாக புனித பால் பிறந்த இடமான டார்சஸ் ஆகும் . இந்த மாகாணம் புவியியல், பொருளாதார மற்றும் கலாச்சார பிராந்தியமான சுகுரோவாவின் ஒரு பகுதியாகும், இது மெர்சின், அதானா, உஸ்மானியே மற்றும் கத்தே ஆகிய மாகாணங்களை உள்ளடக்கியது.

ஐசில் மற்றும் மெர்சின்

[தொகு]

1933 ஆம் ஆண்டு நிலவரப்படி, இன்றைய மெர்சின் மாகாணத்தின் எல்லையில் ஐசில் மற்றும் மெரிசின் என இரண்டு தனித்தனி மாகாணங்கள் இருந்தன. பின்னர் மெர்சின் மாகாணம் ஒழிக்கப்பட்டு ஐசில் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மாகாணத்தின் தலைநகரானது சிலிஃப்கேவிலிருந்து மெர்சினுக்கு மாற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு, மாகாணத்தின் பெயரானது ஐசில் என்பதில் இருந்து மெர்சின் என்று மாற்றப்பட்டது. ஆனால் மாகாணத்தின் வாகன பலகை எண்ணான 33 என்பது மாற்றப்படாமல் பழைய எண்ணே தொடர்கிறது.   துருக்கிய மாகாண பெயர்களின் அகர வரிசைப்படி இந்த மாகாணம் 33 வது இடத்தில் உள்ளது..

நிலவியல்

[தொகு]

மாகாணத்தின் நிலப்பரப்பில் 87% மலைப் பகுதிகளாகும். இது மத்திய தாரசு மலைத்தொடர்களின் பாறை உயரத்திற்கு இட்டுச் செல்கிறது. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரம் போல்கர் மலைத்தொடரில் உள்ள மெடெடிஸிஸ் (3,584 மீ) ஆகும், மேலும் மத்திய அனத்தோலியாவுக்கு பல முக்கியமான கணவாய்கள் உள்ளன. 700 முதல் 1500 மீ வரை பல உயரமான புல்வெளிகளும் சிறிய சமவெளிகளும் உள்ளன.

கடலோரப் பகுதியில் பல பெரிய சமவெளி நிலப்பரப்புகள் உள்ளன, அவை ஆறுகள் மற்றும் மலைகளிலிருந்து ஓடும் நீரோடைகளால் கொண்டு வரப்பட்ட மண்ணிலிருந்து உருவானவை. இது வளமான நிலப்பகுதியாகும், இதில் மிகப்பெரிய பகுதி. டார்சஸின் சமவெளி ஆகும். மிகப்பெரிய ஆறுகள் கோக்ஸு மற்றும் பெர்டன் (அக்கா டார்சஸ், பழங்காலத்தின் சிட்னஸ் ) ஆகும். ஆனால் ஏரிகள், நீர்த்தேக்கங்கள் அல்லது மத்திய தரைக்கடலில் சென்று சேரும் பல சிறிய நீரோடைகளும் உள்ளன. மெர்சின் மாகாணமானது 321 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது, அதில் பெரும்பகுதி மணல் கடற்கரை. இங்கு நிலவும் காலநிலையானது மத்தியதரைக் கடல் காலநிலையை ஒத்தது. கோடையில் மிகவும் வெப்பமான மற்றும் மிகவும் ஈரப்பதமான காலநிலையும், குளிர்காலத்தில் சூடான மற்றும் ஈரமான காலநிலை கொண்டது. குளிர்கால மழை மிகவும் பலமாக இருக்கும். இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. உயர்ந்த மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு உள்ளது. ஆனால் கடற்கரையில் ஒருபோதும் பனிப்பொழிவு என்பது இல்லை.

இந்த பகுதியின் பொருளாதார செயல்பாடு காரணமாக, மெர்சின் நகரம் துருக்கியின் பரபரப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஜிஏபி திட்டத்தால் உருவாக்கப்பட்ட மெர்சின் துறைமுகமானது துருக்கியின் மிகப்பெரிய மத்திய தரைக்கடல் துறைமுகமாகும். இப்போது இங்கு ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஒரு சுதந்திர வர்த்தக மண்டலம் உள்ளது. மெர்சின் மற்றும் அதனா இடையேயான சாலைப்பகுதியை ஒட்டி கண்ணாடி உற்பத்தி, சவர்க்காரம், உரங்கள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.   இந்த அனைத்து செயல்பாடுகளின் விளைவாக அதானா பல்கலைக்கழகம் மற்றும் பிற முக்கிய வசதிகளுடன் ஒரு நவீன நகரமாக வளர்ந்துள்ளது.

மாகாணத்தின் மக்கள் தொகையில் சுமார் 50% பேர் 24 வயதுக்கும் குறைவானவர்கள். 68% பேர் மெர்சினில் பிறந்தவர்கள். கல்வியறிவு விகிதம் 89% என உள்ளது. ஆண்களில் சுமார் 43% பேரும் மற்றும் பெண்களில் சுமார் 27% பேரும் நடுநிலைப் பள்ளிவரை பயின்றவர்கள். குழந்தை இறப்பு விகிதமானது 0.48%. என உள்ளது. நகர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.42%. மக்கள் தொகை அடர்த்தி 117 ஆகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Population of provinces by years - 2000-2018". Archived from the original on 27 ஏப்பிரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்சின்_மாகாணம்&oldid=3766023" இலிருந்து மீள்விக்கப்பட்டது