துருக்கியில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துருக்கியிலுள்ள ஒரு உலகப் பாரம்பரிய தளமான பாமுக்கலே

துருக்கியில் சுற்றுலா (Tourism in turkey) என்பது பெரும்பாலும் வரலாறு தளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை உணவகங்களே ஆகும். துருக்கி கலாச்சாரம், மற்றும் சுகாதரப் பாதுகாப்புக்கான பிரபலமான இடமாகவும் மாறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் துருக்கி சுமார் 51 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது [1]. துருக்கி உலகின் ஆறாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[2]2015ல் சுமார் 41 மில்லியன் சுற்றுலா பயணிகளையும், 2016ம் ஆண்டு சுமார் 30 மில்லியன் சுற்றுலா பயணிகளையும் ஈர்த்தது. எனினும்,2016இல் 30 மில்லியனாக குறைந்த இந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டு 37.9 மில்லியனாக அதிகரித்தது. 2018ம் ஆண்டு 46.1 மில்லியனாக அதிகரித்தது. [3]

முக்கிய இடங்கள்[தொகு]

இசுதான்புல்[தொகு]

தோல்மாபாகி அரண்மனை, துருக்கியில் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்
ஓர்தாகி பள்ளிவாசலும் போசுபரசு பாலமும்

துருக்கியில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் இசுதான்புல் ஒன்றாகும். இந்த நகரில் ஆயிரக்கணக்கான சுற்றுலா சார்ந்த தொழில்கள் உள்ளன. துருக்கியின் மிகப்பெரிய நகரமான இசுதான்புல் பைசாந்தியன் மற்றும் உதுமானியப் பேரரசுகளின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கொண்டுள்ளது. இதில் சுல்தான் அகமது பள்ளிவாசல், ககியா சோபியா, தாப்கபி அரண்மனை, பசிலிக்கா தொட்டி, கலாட்டா கோபுரம், கிராண்ட் பசார், மற்றும் போரா அரண்மனை உணவகம் போன்றவை அடங்கும். ஐரோப்பாவின் மிகபெரிய வணிக வளாகமாக இருக்கும் அக்மர்கெசு போன்ற வணிக வளாகங்களும் இங்கு இருக்கின்றன.

சனவரி 2013இல், துருக்கி அரசாங்கம் இசுதான்புல்லில் உலகில் மிகபெரிய விமான நிலையத்தை கட்டபோவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கைக்காக 7 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தினை நான்கு பகுதிகளாக பிரித்துள்ளது. திட்டத்தின் முதல் பகுதி 2017ல் முடிக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில் துருக்கிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன. இதன் விளைவாக இசுதான்புல்லுக்கு, வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிண் எண்ணிக்கை 2016 இல் 9.2 மில்லியனாகக் குறைந்தது. இது 2015வுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் குறைந்துள்ளது.[4]

பிற இடங்கள்[தொகு]

தியர்பாகர் ஒரு முக்கியமான வரலாற்று நகரமாகும். இருப்பினும் ஆயுத மோதல்களால் இங்கு சிறிய அளவில் சுற்றுலா நடவடிக்கையே உள்ளது.

அங்காராவும் ஒரு வரலாற்று பழமையான நகரமாகும். இது சுற்றுலா நகரமல்ல என்றாலும் வழக்கமாக கப்படோசியா செல்லும் வழியில் பயணிகளுக்கு ஒரு நிறுத்தமாகும். இந்த நகரம் ஒரு சிறந்த கலாச்சார நகரமாகத் திகழ்கிறது. மேலும் பல அருங்காட்சியகங்களையும் கொண்டுள்ளது. துருக்கிய சுதந்திரப் போரின் தலைவரும் துருக்கி குடியரசின் நிறுவனரும், முதல் குடியரசுத்தலைவருமான முஸ்தபா கெமால் அத்தாதுர்க்கின் நினைவுக் கல்லறை அங்காராவில் அமைந்துள்ளது.

சுற்றுலா வளர்ச்சி[தொகு]

2000 மற்றும் 2005க்கு இடையில் துருக்கியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்ததுள்ளது. இது 8 மில்லியனிலிருந்து 25 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் துருக்கி வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான உலகின் முதல் 10 இடமாக மாறியது. 2005 ஆம் ஆண்டு துருக்கியின் வருவாய் 20.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது துருக்கியை உலகின் முதல் 10 பெரிய வரவாய் உரிமையாளர்களில் ஒன்றாய் மாற்றியது. உலக சுற்றுலாதுறையின்படி துருக்கி உலகின் 6 வது பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், ஐரோப்பாவில் 4வது இடமாகவும் இருந்தது. 2014 ஆம் ஆண்டு அதிகபச்சமாக துருக்கி 42 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டில், சுமார் 30 மில்லியன் சுற்றுலா பயணிகள் மட்டுமே துருக்கிக்கு வருகை தந்தனர்.[5]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://www.dailysabah.com/tourism/2015/01/01/42-million-tourists-visit-turkey-in-2014 பார்வை நாள் 6 சூலை 2016
  3. . http://www.kultur.gov.tr/Eklenti/61825,decemberbullein2018xlsxlsxls.xls?0. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. . http://www.hurriyetdailynews.com/number-of-foreign-tourist-visting-isanbul-plunges-for-first-time-in-16-years.aspx. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://www.csmonitor.com/World/Middle-East/2015/0819/Violence-costing-Turkey-precious-tourism-even-far-from-the-fighting பார்வை நாள் 2015-08-19

வெளியினைப்புகள்[தொகு]