ஹர்தீப் சிங் நிஜ்ஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்தீப் சிங் நிஜ்ஜர்
பிறப்பு(1977-10-11)11 அக்டோபர் 1977
ஹர்சிங்பூர், ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
இறப்பு18 சூன் 2023(2023-06-18) (அகவை 45)
ர்ரே, பிரித்தானிய கொலம்பியா, கனடா
இறப்பிற்கான
காரணம்
துப்பாக்கிச் சூடு
தேசியம்கனடியர்
அரசியல் இயக்கம்காலிஸ்தான் இயக்கம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar, 11 அக்டோபர் 1977[சான்று தேவை] – 18 சூன் 2023) என்பவர் காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய இந்திய-கனடிய சீக்கிய பிரிவினைவாதி ஆவார்.[1][2][3] நிஜ்ஜார் இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டவராகவும், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும் ஆவார். நிஜ்ஜார் 18 சூன் 2023 அன்று பிரித்தானிய கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]

இந்திய அரசின் முகவர்கள் நிஜ்ஜாரை படுகொலை செய்ததுள்ளதாக கனடிய உளவுத் துறை தகவல்களைச் சுட்டிக்காடி செப்டம்பர் 18 அன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோ கூறினார். மேலும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, கனடாவில் உள்ள இந்திய உளவுத்துறை அமைப்பின் தலைவர் என்று ஒரு இந்திய தூதரக அதிகாரியைக் குறிப்பிட்டு அவரை கனடாவை விட்டு வெளியேற்றினார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தது, இது "அபத்தமானது" என்று கூறியது. அதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் கனடாவின் உயர்மட்ட தூதரக அலுவலரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அவர் இந்தியாவில் உள்ள கனேடிய புலனாய்வு முகமையின் தலைவர் என்று குறிப்பிட்டது.[5][6]

ஆரம்பகால வாழ்க்கையும் கனடாவிற்கு இடம்பெயர்தலும்[தொகு]

நிஜ்ஜார் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். இவர் 1990 களின் நடுப்பகுதியில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.[7][8] "ரவி ஷர்மா" என்ற பெயரிலான போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி 10 பிப்ரவரி 1997 அன்று கனடாவிற்கு வந்து சேர்ந்த நிஜ்ஜார், ஏதிலிக்கான கோரிக்கையை முன்வைத்தார்.[9] இவர் தன் பிரமாண வாக்குமூலத்தில், தன் சகோதரர், தந்தை, மாமா என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை காவல்துறை சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டார். இவரது கூற்று நம்பத்தகுந்தது அல்ல என்று அதிகாரிகள் கருதியதால், இவரது ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.[9]

இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, தனது குடியேற்றத்திற்கு நிதியுதவி செய்த ஒரு பெண்ணை மணந்தார். அந்தப் பெண் 1997 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்து வேறொரு ஆணை திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த திருமணமானது குடியுரிமைக்காக நடத்தபட்ட போலித் திருமணம் என்று நிராகரிக்கப்பட்டது. 2001 இல், நிஜ்ஜார் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் ஆனால் அதில் தோற்றார்.[8][9]

கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சரான மார்க் மில்லரின் கூற்றுப்படி, நிஜ்ஜார் 25 மே, 2007 அன்று கனேடிய குடியுரிமைப் பெற்றார்.[10]

கனடாவில், நிஜ்ஜார் ஒரு புழம்பராக ( குழாய் பழுது பார்ப்பவர்) பணிபுரிந்தார். மேலும் திருமணமாகி இரண்டு மகன்களுக்கு தந்தையாக இருந்தார்.[8] இவர் பிரித்தானிய கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு சீக்கிய கோயிலின் தலைவராக பணியாற்றினார் மற்றும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் கனடா கிளையின் தலைவராக இருந்தார்.[7][11]

காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளில்[தொகு]

காலிஸ்தான் சார்பு குழுவான காலிஸ்தான் புலிப்படையின் தலைவராக நிஜ்ஜார் உள்ளார் என்று இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்டார்.[11] அதனால் 14 நவம்பர், 2014 அன்று இவரைக் கைது செய்ய இந்தியா அறிவிப்பாணையை பிறப்பித்தது 2007 ஷிங்கர் திரையரங்கு குண்டுவெடிப்பில் இவரது சதி இருப்பதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[9]

இந்தியா 2016 இல் மற்றொரு பன்னாட்டுக் காவலக அறிவிப்பாணையைப் பிறப்பித்தது.[9] குடையூர்த்தி மூலம் வெடிமருந்துகளை இந்தியாவிற்கு கடத்தும் சதியில் நிஜ்ஜார் ஈடுபட்டதாக கூறப்பட்டது.[12] இவை "புனையப்பட்ட" குற்றச்சாட்டுகள் என்று மறுத்த நிஜ்ஜார் பிரதமர் ஜஸ்டின் துரூடோவுக்கு உதவி கேட்டு ஒரு கடிதம் எழுதினார்.[13] மிஷன், பி.சி.க்கு அருகில் காலிஸ்தான் சார்பு தீவிரவாதிகள் உள்ளது குறித்து இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்ததாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க கனேடிய அரசாங்கம் மறுத்துவிட்டது.[14]

நிஜ்ஜார் 2018 இல் குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரானார்.[9][15]

நிஜ்ஜார் 2018 ஆம் ஆண்டில், இலக்குவைத்து இந்தியாவில் பல கொலைகளைச் செய்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரிகள் தன்னை பொய்யாக குற்றவியல் வழக்குகளில் சிக்க வைக்கிறார்கள் என்று நிஜ்ஜார் கூறினார். கனடியப் பிரதமர் ஜஸ்டின் துரூடோவிடம், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், நிஜ்ஜாரின் பெயர் அடங்கிய மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலை பெப்ரவரியில், கொடுத்தார். ஏப்ரல் 13 அன்று, ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையின் (RCMP) சர்ரே பிரிவு, நிஜ்ஜாரை விசாரணைக்காக தடுத்து காவலில் வைத்து, பின்னர் எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல் 24 மணி நேரத்திற்குள் விடுவித்தது.

மார்ச் 2019 இல், அவர் சர்ரேயில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் வழக்கு நிறுத்திவைக்கப்பட்டது.[9]

2020 சூலையில், ஹர்தீப் சிங் நிஜாரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியா பயங்கரவாதியாக அறிவித்தது. மேலும் 2020 செப்டம்பரில், தேசிய புலனாய்வு முகமை (தே.பு.மு.) இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது.[16] பஞ்சாபில் இந்து சாமியாரைக் கொலை செய்ய சதி செய்ததாக தே.பு.மு. நிஜார் மீது சாட்டியுள்ளது. 2022 இல், தே.பு.மு. இவரைப் பிடிக்க உதவும் எந்தத் தகவலுக்கும் ₹10 லட்சம் (தோராயமாக CA$ 16,200 ) பரிசாக அறிவித்தது. தே.பு.மு.வின் கூற்றின் படி, அவர்களின் விசாரணையில், "அமைதியை குலைப்பதற்கும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காகவும்" இந்து சாமியாரைக் கொல்ல சதி தீட்டப்பட்டதாக தெரியவந்தது என்றது.[17]

2022 இல் குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக நிஜ்ஜார் மீண்டும் தேர்வானார்.[18]

இறப்பு[தொகு]

குருநானக் குருத்வாரா, அதற்கு வெளியே நிஜ்ஜார் கொல்லப்பட்டார்

நிஜ்ஜாரை படுகொலை செய்ய சதி நப்பதாக 2022 ஆம் ஆண்டின் கோடையில், கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை அதிகாரிகளால் எச்சரிக்கை செய்யபட்டார்.[19] 18 சூன் 2023 அன்று, கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்த இரண்டு துப்பாக்கிதாரிகளால் நிஜ்ஜார் அவரது சரக்குந்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.[20][21][22] ஆர்.சி.எம்.பி.யின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவின் (IHIT) புலனாய்வாளர்கள், "தடிமனான முகமூடி அணிந்த ஆண்கள்" என்று விவரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், நிகழ்விடத்திலிருந்து நடத்தே தப்பிச் சென்றதாகவும், அவர்களுக்காக அருகில் ஒரு ஊர்தி காத்திருந்ததாகவும் கூறினார். பின்னர் மூன்றாவதாக ஒரு சந்தேக நபரும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.[1]

2023 செப்டம்பர் வரை, நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனேடிய அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லை.[23] நிஜ்ஜாரின் கொலை குறித்து ஐஎச்ஐடி விசாரணை நடத்தி வருகிறது.[4]

கொலை விசாரணையும் பின்விளைவுகளும்[தொகு]

செப்டம்பர் 18 அன்று, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் துரூடோ இந்தக் கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே நம்பகமான தொடர்பு உள்ளதை கனேடிய உளவுத்துறை கண்டறிந்துள்ளதாகவும், கொலையை விசாரிப்பதில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்குமாறு அழைப்பு விடுத்து, 2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததாகவும் கூறினார்.[24] இந்த கொலையின் எதிரொலியாக, இந்தியாவின் உளவு நிறுவனமான ராவின் செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கிய கனடாவில் உள்ள உயர்மட்ட இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உத்தரவிட்டார்.[25]

கனடாவின் கொலைக் குற்றச்சாட்டை இந்தியா "அபத்தமானது" என்று மறுத்ததோடு, இந்தியாவில் உள்ள கனேடிய உளவுத்துறை அலுவலகத்தின் தலைவரான ஒலிவியர் சில்வெஸ்டரை அடுத்த நாள் வெளியேற்றியது.[6][5][24]

குளோபல் நியூஸ் தொலைக்காட்சியின் கூற்றின்படி, கொலை விசாரணை மற்றும் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக செப்டம்பர் 1 அன்று கனடா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.[26] நாடுகளுக்கிடையிலான "பிளவு" காரணமாக 21 செப்டம்பர் 2023 அன்று கனேடிய குடிமக்களுக்கான விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.[27]

இந்தக் கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பான எந்த ஆதாரத்தையும் கனடிய அரசாங்கம் 21 செப்டம்பர் 2023 வரை, கனேடிய அரசாங்கம் வெளியிடவில்லை.[28]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Singh, Kanishka (2023-09-19). "What is known about the murder of Sikh separatist leader in Canada?". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  2. Singh, Kanishka (2023-09-19). "Hardeep Singh Nijjar death: a timeline of recent India-Canada tensions". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  3. "Who was Hardeep Singh Nijjar, the Khalistani separatist that Canada's PM Trudeau says India may have got killed". indianexpress.com. 19 September 2023. பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.
  4. 4.0 4.1 "Who is Hardeep Singh Nijjar, the Sikh leader Indian agents allegedly killed? | Globalnews.ca". Global News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
  5. 5.0 5.1 Mogul, Rhea; Newton, Paula (18 September 2023). "India expels Canadian diplomat in tit-for-tat move as row over assassinated Sikh activist deepens". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.Mogul, Rhea; Newton, Paula (18 September 2023). "India expels Canadian diplomat in tit-for-tat move as row over assassinated Sikh activist deepens". CNN. Retrieved 19 September 2023.
  6. 6.0 6.1 "Expelled diplomat headed Canadian intelligence in India: Sources". 19 September 2023."Expelled diplomat headed Canadian intelligence in India: Sources". 19 September 2023.
  7. 7.0 7.1 "Khalistan Tiger Force chief Hardeep Singh Nijjar shot dead in Canada". https://timesofindia.indiatimes.com/india/khalistan-tiger-force-chief-hardeep-singh-nijjar-shot-dead-in-canada/articleshow/101116451.cms. Jain, Bharti; Rana, Yudhvir (20 June 2023). "Khalistan Tiger Force chief Hardeep Singh Nijjar shot dead in Canada". The Times of India.
  8. 8.0 8.1 8.2 "Who Was the Man Whose Killing Canada Says India Instigated?". https://www.nytimes.com/2023/09/19/world/canada/who-is-hardeep-singh-nijjar-india.html. பார்த்த நாள்: 2023-09-20. Raj, Suhasini (19 September 2023). "Who Was the Man Whose Killing Canada Says India Instigated?". The New York Times. ISSN 0362-4331. Retrieved 20 September 2023.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 Bell, Stewart (2023-06-22). "Murder at the temple: The conflicting legacies of a B.C. Sikh leader". Global News. https://globalnews.ca/news/9784316/hardeep-singh-nijjar-death-surrey-b-c/. 
  10. MarcMillerVM. "Mr. Nijjar became a Canadian citizen on May 25, 2007, earlier than I stated below. The error in dates is my responsibility to assume. Again, nothing justifies the killing of Mr. Nijjar" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) Missing or empty |date= (help)
  11. 11.0 11.1 "Punjab police busts two ISI-backed terror modules operating from Canada". The Indian Express (in ஆங்கிலம்). 2022-10-04. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  12. "Surrey man accused of running 'terror camp' near Mission". https://vancouversun.com/news/local-news/surrey-man-accused-on-running-terror-camp-near-mission. பார்த்த நாள்: 2023-09-20. 
  13. "Surrey, B.C., man accused of running terrorist training camp seeks PM's help". https://www.cbc.ca/news/canada/british-columbia/bc-man-accused-terrorist-training-camp-1.3612078. பார்த்த நாள்: 2023-09-20. 
  14. "Feds mum on Indian media report of Sikh terrorist camp in B.C.". https://www.cbc.ca/news/canada/british-columbia/extremist-allegations-bc-1.3608111. பார்த்த நாள்: 2023-09-20. 
  15. Monika Gul and Denise Wong (2019-01-11). "Man under investigation by India elected president of Surrey Sikh temple". City News Vancouver. https://vancouver.citynews.ca/2019/01/11/surrey-sikh-temple-president-investigation/. 
  16. "India rejects "absurd," "motivated" claims on killing of most wanted terrorist Hardeep Nijjar". ANI News. 2023-09-19. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  17. The Hindu Bureau (2022-07-22). "NIA declares ₹10 lakh reward for information on Khalistan Tiger Force chief". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  18. Team Link (2022-10-08). "Hardeep Singh Nijjar acclaimed as President of the Guru Nanak Sikh Gurdwara Society". Link Paper. https://thelinkpaper.ca/hardeep-singh-nijjar-acclaimed-as-president-of-the-guru-nanak-sikh-gurdwara-society/. 
  19. "Trudeau says intelligence shows India was behind slaying of Sikh leader in Surrey, B.C.". 18 September 2023. https://www.theglobeandmail.com/politics/article-canadian-authorities-have-intelligence-that-india-was-behind-slaying/. Fife, Robert (18 September 2023). "Trudeau says intelligence shows India was behind slaying of Sikh leader in Surrey, B.C." The Globe and Mail. Retrieved 18 September 2023. Mr. Nijjar, a Canadian citizen and leader in Surrey's Sikh community
  20. "Khalistan Tiger Force chief Hardeep Nijjar shot dead in Canada". Economic Times. 19 June 2023. https://economictimes.com/news/india/khalistan-tiger-force-chief-hardeep-nijjar-shot-dead-in-canada/amp_articleshow/101116050.cms. 
  21. "Wanted Khalistan Tiger Force chief Hardeep Singh Nijjar gunned down in Canadian city Surrey". The Hindu. 19 June 2023. https://www.thehindu.com/news/national/khalistani-terrorist-shot-dead-by-two-youths-in-canada/article66985023.ece. 
  22. "India expels Canadian diplomat, says concerned about 'anti-India activities'". Reuters. 2023-09-19. https://www.reuters.com/world/india/india-dismisses-absurd-canadas-accusation-sikh-leaders-murder-2023-09-19/. 
  23. Paula Newton, Rhea Mogul (2023-09-18). "India expels Canadian diplomat in tit-for-tat move as spat over assassinated Sikh activist deepens". CNN. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  24. 24.0 24.1 Yousif, Nadine (18 September 2023). "India could be behind killing of Canadian Sikh – Trudeau". BBC News. https://www.bbc.co.uk/news/uk-66848041. 
  25. Tasker, John Paul (18 September 2023). "Trudeau accuses India's government of involvement in killing of Canadian Sikh leader". Canadian Broadcasting Corporation. https://www.cbc.ca/news/politics/trudeau-indian-government-nijjar-1.6970498. 
  26. Fife, Robert (18 September 2023). "Trudeau says intelligence shows India was behind slaying of Sikh leader in Surrey, B.C.". The Globe and Mail. https://www.theglobeandmail.com/politics/article-canadian-authorities-have-intelligence-that-india-was-behind-slaying/. 
  27. ASHOK SHARMA AND KRUTIKA PATHI (September 21, 2023). "India suspends visa services for citizens of Canada and tells it to cut its diplomats". https://apnews.com/article/india-canada-visas-sikh-activist-killing-381e973e84f8d0c10b0bd53b03ccbdf2. 
  28. Pathi, Krutika (2023-09-19). "India expels Canadian diplomat, escalating tensions after Trudeau accuses India in Sikh's killing". AP News. https://apnews.com/article/canada-india-sikh-diplomat-trudeau-modi-3c5572d9027769ea6adbd047ec6f462a. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்தீப்_சிங்_நிஜ்ஜர்&oldid=3924403" இலிருந்து மீள்விக்கப்பட்டது