வெள்ளீயம் முப்பாசுபைடு
இனங்காட்டிகள் | |
---|---|
37367-13-8 | |
பண்புகள் | |
P3Sn | |
வாய்ப்பாட்டு எடை | 211.63 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 4.05 கி/செ.மீ3 |
உருகுநிலை | 580 °C (1,076 °F; 853 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீயம் முப்பாசுபைடு (Tin triphosphide) என்பது SnP3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]விகிதாச்சார அளவில் வெள்ளீயத்தையும் பாசுபரசையும் சேர்த்து 580 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து வெள்ளீயம் முப்பாசுபைடு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
[தொகு]வெள்ளீயம் முப்பாசுபைடு முக்கோணப் படிக அமைப்பில் படிகமாக்குகிறது. R3m என்ற இடக்குழுவில் a = 7.378Å மற்றும் c = 10.512Å என்ற அலகு செல் பரிமாணங்கள் கொண்ட ஆறு வாய்பாட்டு அலகுகள் கொண்ட படிகக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[2][3]
H2O மற்றும் HCl ஆகிய கரைப்பான்களில் வெள்ளீயம் முப்பாசுபைடு கரையாது. ஆனால் HNO3 அமிலத்தில் கரையும்.[4]
பயன்கள்
[தொகு]SnP3 உயர் செயல்திறன் ஆற்றல் சேமிப்பு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jacobson, Carl Alfred; Hampel, Clifford A. (1946). Encyclopedia of Chemical Reactions (in ஆங்கிலம்). Reinhold Publishing Corporation. p. 15. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Gullman, Jan; Olofsson, Olle (1 November 1972). "The crystal structure of SnP3 and a note on the crystal structure of GeP3". Journal of Solid State Chemistry 5 (3): 441–445. doi:10.1016/0022-4596(72)90091-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022459672900916. பார்த்த நாள்: 28 March 2024.
- ↑ "mp-7541: SnP3 (trigonal, R-3m, 166)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Sangeeta, D. (25 June 1997). Inorganic Materials Chemistry Desk Reference (in ஆங்கிலம்). CRC Press. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8900-9. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Yan, Miaomiao; Yang, Bingchao; Sun, Xiujie; Wang, Zhixiu; Jiang, Xingang; Yi, Wencai; Sun, Hairui; Yang, Ruilong et al. (1 January 2024). "High-Quality 2D SnP 3 Nanosheets: Novel Flexible Electrode for Energy Storage Device Application with Wide Temperature Adaptivity" (in en). ACS Materials Letters 6 (1): 194–202. doi:10.1021/acsmaterialslett.3c01438. பன்னாட்டுத் தர தொடர் எண்:2639-4979. https://pubs.acs.org/doi/abs/10.1021/acsmaterialslett.3c01438. பார்த்த நாள்: 28 March 2024.
- ↑ Zhang, Ningxia; Li, Xiaodan; Ruan, Shihao; Chen, Xiong; Li, Shenghao; Hu, Taotao (27 March 2022). "First-Principles Study of Electronic Properties of Substitutionally Doped Monolayer SnP3". Materials 15 (7): 2462. doi:10.3390/ma15072462. பப்மெட்:35407794.