வெள்ளீயம்(II) அசிட்டேட்டு
![]() ![]() ![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வெள்ளீய ஈரசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
638-39-1 ![]() | |
EC number | 211-335-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 69488 |
| |
UNII | 1SKU167W8P |
பண்புகள் | |
Sn(CH3COO)2 | |
வாய்ப்பாட்டு எடை | 236.80 |
தோற்றம் | வெண்மையான படிகங்கள் |
அடர்த்தி | 2.310 கி·செ.மீ−3 |
உருகுநிலை | 182.75 °C (360.95 °F; 455.90 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீயம்(II) அசிட்டேட்டு (Tin(II) acetate) Sn(CH3COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயத்தின் அசிட்டேட்டு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 1822 ஆம் ஆண்டில் முதன் முதலாக வெள்ளீயம்(II) அசிட்டேட்டு கண்டறியப்பட்டது.[1]
தயாரிப்பு
[தொகு]வெள்ளீய்யம்(II) ஆக்சைடை உறைந்த அசிட்டிக் அமிலத்தில் கரைத்து குளிர்விக்கும் போது மஞ்சள் Sn(CH3COO)2·2CH3COOH உருவாகிறது. அசிட்டிக் அமிலத்தை குறைக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் வெப்பப்படுத்துவதன் மூலம் அகற்றலாம். மேலும் வெள்ளை நிற Sn(CH3COO)2 படிகங்களை பதங்கமாதல் மூலம் பெறலாம்.[1]
பண்புகள்
[தொகு]Sn(CH3COO)2·2CH3COOH ஆனது சாதாரண அழுத்தத்தின் கீழ் வெப்பமடையும் போது விகிதாச்சாரத்திற்கும் சிதைவிற்கும் உள்ளாகிறது. மேலும் வெள்ளீயம்(IV) ஆக்சைடு மற்றும் ஐதரசன் போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நீரற்ற Sn(CH3COO)2 இன் சிதைவு நீல-கருப்பு நிற வெள்ளீய(II) ஆக்சைடை கொடுக்கிறது.[2]
நீரற்ற Sn(CH3COO)2 நீரில் சிதைவடைகிறது. ஆனால் KSn(CH3COO2)3 மற்றும் Ba[Sn(CH3COO)3]2 போன்ற அணைவுச் சேர்மங்கள் கார உலோகம் அல்லது கார மண் உலோக அசிடேட்டுகளில் உருவாகலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Varvara S. Stafeeva, Alexander S. Mitiaev, Artem M. Abakumov, Alexander A. Tsirlin, Artem M. Makarevich, Evgeny V. Antipov (November 2007). "Crystal structure and chemical bonding in tin(II) acetate" (in en). Polyhedron 26 (18): 5365–5369. doi:10.1016/j.poly.2007.08.010. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0277538707004950. பார்த்த நாள்: 2019-04-19.
- ↑ Donaldson, J. D., Moser, W., & Simpson, W. B. (1964). 1147. Tin (II) acetates. Journal of the Chemical Society, 5942-5947.
- ↑ Donaldson, J. D., & Knifton, J. F. (1966). Complex tin (II) acetates. Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical, 332-336.