வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. கிருஷ்ணமூர்த்தி
Vaandumaamaa.jpg
பிறப்புஏப்ரல் 21, 1925(1925-04-21)
இறப்புசூன் 12, 2014(2014-06-12) (அகவை 89)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி, கௌசிகன்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுகுழந்தை எழுத்தாளர்

வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014)[1] சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் அந்தணக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வாண்டுமாமா. இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கௌசிகன் என்ற புனைபெயரில் பெரியவர்களுக்கு எழுதி வந்தார். ஆனந்த விகடன் இதழின் ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகளை எழுதத் தூண்டினார். வாண்டுமாமா என்ற புனைபெயரை இவருக்கு சூட்டியவரும் இவர் தான். ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்னர் திருச்சியில் இருந்து வெளிவந்த சிவாஜி என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார். அவ்விதழின் சிறுவர் மலர் பகுதியில் சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.

பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள் இதழிலும் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் குழந்தைகளிடையே புகழ் பெறத் தொடங்கியது. கோகுலம் பத்திரிகை வெளியீடு நிறுத்தப்பட்ட பின்னர் 1984 ஆம் ஆண்டில் பூந்தளிர், "பூந்தளிர் அமர் சித்திரக் கதைகள்" ஆகிய குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. பூந்தளிர் மீண்டும் 1990 இல் வாண்டுமாமாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

வாண்டுமாமா 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ஓநாய்க்கோட்டை போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.

படைப்புகள்[தொகு]

 • மூன்று விரல்கள் (1991)
 • பைபிள் பாத்திரங்கள் (1989)
 • அதிசய நாய் (1988)
 • அழிந்த உலகம் (1988)
 • நெருப்புக் கோட்டை (1988)
 • நீலப்போர்வை (1987)
 • மூன்று வீரர்கள் (1983)
 • வரலாறு படைத்த வல்லுநர்கள் (2003)
 • ஷீலாவைக் காணோம்
 • கனவா நிஜமா
 • அவள் எங்கே?
 • வீர விஜயன்
 • கழுகு மனிதன் ஜடாயு
 • ரத்தினபுரி ரகசியம்
 • தங்கச் சிலை
 • மரகதச்சிலை
 • சூரியக் குடும்பம்
 • தோன்றியது எப்படி? (நான்கு பாகங்கள்)
 • விண்வெளி வாழ்க்கை
 • தெரிந்து கொள்ளுங்கள்
 • இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
 • இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்
 • மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
 • உலகத்தின் கதை
 • உலோகங்களின் கதை
 • மருத்துவம் பிறந்த கதை
 • மூளைக்கு வேலை (இரண்டு பாகங்கள்)
 • கதைக் களஞ்சியம்
 • பல தேசத்துப் பண்பாட்டுக் கதைகள்
 • அதிசயப் பிராணிகளின் அற்புதக் கதைகள்
 • ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள்
 • ஹோமரின் இலியத் - கிரேக்க புராணக் கதைகள்
 • நிலாக்குதிரை
 • புதையல் வேட்டை
 • உலகம் சுற்றும் குழந்தைகள் (இரண்டு பாகங்கள்)
 • மர்ம மனிதன்
 • சி.ஐ.டி சிங்காரம்
 • ஆடுவோமே! விளையாடுவோமே!
 • மலைக்குகை மர்மம்
 • குள்ளன் ஜக்கு
 • மாய மோதிரம்
 • மாயச் சுவர்
 • தவளை இளவரசி
 • அரசகுமாரி ஆயிஷா
 • மந்திரச் சலங்கை
 • துப்பறியும் புலிகள்
 • கண்ணாடி மனிதன்
 • தேதியும் சேதியும்
 • பலே பாலுவும் பறக்கும் டிராயரும்
 • மர்ம மாளிகையில் பலே பாலு
 • விந்தை விநோதம் விசித்திரம்
 • நீதிநெறி நூல்கள்
 • ஔவையார் அருளிய ஆத்திசூடி விளக்கம்
 • ஔவையார் அருளிய கொன்றை வேந்தன் விளக்கம்
 • சதுரநீதி நூல்கள் (மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவை பற்றி)
 • புலி வளர்த்த பிள்ளை
 • முன்னேற்றத்தின் முன்னோடிகள் (முதல் தொகுதி)
 • நாய் வளர்ப்பு
 • பூனை வளர்ப்பு
 • மீன் வளர்ப்பு
 • இயந்திரங்கள் இயங்குவது எப்படி?
 • தகவல் புதையல் (இரண்டு பாகங்கள்)
 • கடலோடிகள்
 • சரித்திரச் சம்பவங்கள்
 • நீங்களே செய்யலாம் (இரண்டு பாகங்கள்)
 • நீங்களும் மந்திரவாதி ஆகலாம்
 • க்விஸ் க்விஸ் க்விஸ் (இரண்டு பாகங்கள்)
 • பச்சைப் புகை
 • மான்கள்
 • யானைகள்
 • கானகத்தினுள்ளே குரங்குகள்
 • கானகத்தினுள்ளே மான்கள்
 • கானகத்தினுள்ளே விலங்குகள்
 • குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் (இரண்டு பாகங்கள்)
 • உலகின் பழங்குடி மக்கள்
 • விளையாட்டு விநோதங்கள்
 • சித்திரக் கதைகள் (இரண்டு பாகங்கள்)
 • அதிசய நாய் ராஜாவின் சாகசங்கள்
 • தப்பியோடியவர்கள்
 • குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் (ஐந்து பாகங்கள்)
 • வரலாறு படைத்த வல்லுநர்கள்
 • பாட்டி பாட்டி கதை சொல்லு
 • தாத்தா தாத்தா கதை சொல்லு
 • அம்மா அம்மா கதை சொல்லு
 • அப்பா அப்பா கதை சொல்லு
 • கதை கதையாம் காரணமாம்
 • பெண் சக்தி
 • கடல்களும் கண்டங்களும்
 • நிலம் நீர் காற்று
 • அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டு பாகங்கள்)
 • தெரியுமா தெரியுமே
 • வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம்
 • அறிவியல் தகவல்கள் (மூன்று பாகங்கள்)
 • நமது உடலின் மர்மங்கள்
 • முதலுதவி
 • இயற்கை அற்புதங்கள்
 • அன்றும் இன்றும்
 • உலக அதிசயங்கள்
 • பரவசமூட்டும் பறவைகள்
 • வாண்டுமாமாவின் வரலாற்றுக் கதைகள்
 • அழகி
 • ஜுலேகா (இரண்டு பாகங்கள்)
 • பாமினிப் பாவை
 • அடிமையின் தியாகம்
 • சுழிக்காற்று
 • சந்திரனே சாட்சி
 • மெழுகு மாளிகை
 • புலிக்குகை
 • ஒற்று உளவு சதி
 • டாக்டர் ராதாகிருஷ்ணன்
 • ராஜாஜி
 • ஸ்ரீமத் பாகவதம்
 • முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி)
 • யோகா
 • எதிர்நீச்சல்
 • மாயாவி இளவரசன்
 • மேஜிக் மாலினி
 • மாதர்குல திலகங்கள்
 • பாரதப் பண்டிகைகள்
 • அதிசயப் பேனா
 • வயலின் வசந்தா

சிறுகதைகள்[தொகு]

 • நூறு கண் ராட்சதன்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்[தொகு]

இவர் எழுதிய பல நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "எழுத்தாளர் வாண்டு மாமா காலமானார்". தினகரன் (14 சூன் 2014). பார்த்த நாள் 14 சூன் 2014.

வெளி இணைப்புகள்[தொகு]