பேச்சு:வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறு அகவையிலிருந்தே வாண்டுமாமாவின் வெகு தீவிர விசிறி நான். அவர் கதைகள் என்றால் எனக்கு உயிர். இன்றும் அவரது கதைகளைக் கருவூலமாய்ப் பாதுகாத்து வருபவன் நான். என்னைப் போல் பல தமிழ்ச் சிறுவர்களின் உள்ளத்தில் ஒருகாலத்தில் முடிசூடா மன்னனாய்த் திகழ்ந்தவர் அவர். ஆனால் அவரைப் பற்றி இன்று பலருக்கு நினைவில்லாததால் அவர் பற்றிய கட்டுரையை விக்கிபீடியாவில் நான்தான் எழுத வேண்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால் எனக்கு முன்பே இங்கு ஒருவர் எழுதியிருப்பது கண்டு, இன்னும் அவரை நினைவில் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தக் கட்டுரையைப் படைத்த அந்த விக்கியக் கிளைஞருக்கு நன்றிகள்!--இ.பு.ஞானப்பிரகாசன் 15:28, 6 ஜூன் 2010 (UTC)