உள்ளடக்கத்துக்குச் செல்

விதிசா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°32′N 77°49′E / 23.53°N 77.82°E / 23.53; 77.82
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதிஷா
மக்களவைத் தொகுதி
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மக்களவைத் தொகுதியின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
தற்போதுரமாகாந்த் பார்கவா
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுபொதுத் தொகுதி
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்விதிஷா சட்டமன்றத் தொகுதி
போஜ்பூர் சட்டமன்றத் தொகுதி
சாஞ்சி சட்டமன்றத் தொகுதி
சில்வானி சட்டமன்றத் தொகுதி
பசோடா சட்டமன்றத் தொகுதி
புத்னி சட்டமன்றத் தொகுதி
இச்சாவர் சட்டமன்றத் தொகுதி
கதேகான் சட்டமன்றத் தொகுதி

விதிஷா மக்களவைத் தொகுதி (Vidisha Lok Sabha constituency) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்த 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 1967 முதல் உள்ளது. இத்தொகுதி விதிஷா மாவட்டம், ராய்சேன் மாவட்டம் மற்றும் செஹோர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. இந்த மக்களவைத் தொகுதி 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அவைகள்: விதிஷா சட்டமன்றத் தொகுதி, போஜ்பூர் சட்டமன்றத் தொகுதி, சாஞ்சி சட்டமன்றத் தொகுதி, சில்வானி சட்டமன்றத் தொகுதி, பசோடா சட்டமன்றத் தொகுதி, புத்னி சட்டமன்றத் தொகுதி, இச்சாவர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கதேகான் சட்டமன்றத் தொகுதி ஆகும்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணி & இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் நிறுவனரான ராம்நாத் கோயங்கா இத்தொகுதிலிருந்து வெற்றி பெற்றவர் ஆவார்.

விதிஷா மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் அரசியல் கட்சி
1967 பண்டிட் சிவ சர்மா ஜன சங்கம்
1971 ராம்நாத் கோயங்கா
1977 ராகவ்ஜி ஜனதா கட்சி
1980 பிரதாப் பானு சர்மா இந்திரா காங்கிரஸ்
1984
1989 ராகவ்ஜி பாரதிய ஜனதா கட்சி
1991 அடல் பிகாரி வாச்பாய் (லக்னோ தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்)
1991* சிவராஜ் சிங் சௌகான்
1996
1998
1999
2004
2006* ராம்பால் சிங்
2009 சுஷ்மா சுவராஜ்
2014
2019 இரமாகாந்த் பார்கவா[1]
  • 1991 & 2006 ஆண்டுகளில் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிசா_மக்களவைத்_தொகுதி&oldid=3676262" இலிருந்து மீள்விக்கப்பட்டது