விடிவி கணேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடிவி கணேஷ்
பிறப்புகணேஷ் ஜனார்தனன்
பணிதிரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002-தற்போது வரை

விடிவி கணேஷ் என்றறியப்படும் கணேஷ் ஜனார்தனன், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் சிலம்பரசனுடன் நடித்த திரைப்படங்களில் நன்கு அறியப்படுகிறார்.[1]

தான் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். காக்க காக்க திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தோற்றத்தில் தோன்றிய அவருக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தனது தயாரிப்பு நிறுவனமான விடிவி என்பதை பெயரின் அடைமொழியாக இணைத்துக் கொண்டார். வானம் திரைப்படம் வழியாக பஜனை கணேஷ் என்னும் பாத்திரத்தில் சிலம்பரசனுடன் மீண்டும் இணைந்தார்.[2] கணேஷ், சிம்புவின் ஒஸ்தி திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2013-ம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[3]

திரைத்துறை[தொகு]

நடிகராக[தொகு]

குறிப்புகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2002 ரெட் மாவட்ட ஆட்சியாளர்
2006 வேட்டையாடு விளையாடு தர்மா
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் சுந்தர்
2008 வாரணம் ஆயிரம் அந்தோனி
2010 விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் விஜய் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்
யே மாய சேசாவே தெலுங்கு திரைப்படம்
2011 வானம் "பஜனை" கணேஷ்
ஒஸ்தி நெடுவாளியின் தந்தையாக
2012 போடா போடி அர்சுனனின் மாமாவாக SIIMA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்
நீ தானே என் பொன்வசந்தம் கணேஷ் சிறப்புத் தோற்றம்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா கிருஷ்ணமூர்த்தி
நவீன சரஸ்வதி சபதம் கணேஷ்
2014 இங்க என்ன சொல்லுது கணேஷ் எழுத்தும் இயக்கமும்
தலைவன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தீர்க்கதர்சி
கப்பல் நெல்சன்
2015 வாலு
வாலிப ராஜா
ரோமியோ ஜூலியட்
வேட்டை மன்னன்
இனிமே இப்படித்தான்
திரிஷா இல்லனா நயன்தாரா
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடிவி_கணேஷ்&oldid=3571611" இருந்து மீள்விக்கப்பட்டது