விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையம் ஊடாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டால், அதில் கலந்து கொள்ள விருப்பம். --Natkeeran (பேச்சு) 14:14, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பல நாட்களாக எப்படி வரைவது என்பது குறித்து எண்ணியிருக்கிறேன். பல நல்ல வரைபடங்களை உயிர்வேதியல் மற்றும் மருத்துவ கட்டுரைகளில் தமிழில் சேர்க்கலாம். இணையம் ஊடாக கலந்துகொண்டு பயிற்சி பெற நானும் விரும்புகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 07:17, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


இரியல் டிரோ கணினி வரைய மென்பொருள் பயன்படுத்திப் பலவகை வெக்டர் வரையங்களை உருவாக்கலாம்.
விவரங்களுக்கு: இரியல் டிரோ கணினி வரைய மென்பொருள்

எடுத்துக்காட்டாக, நான் உருவாக்கிய நகத்தின் படம்:

--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 20:00, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
படம் நன்று, மரு.செந்தி. இதுதொடர்பில் உங்கள் வழிகாட்டல்கள் பயன் தரும். நற்கீரன், கட்டற்ற மென்பொருள் கழகத்தினரிடம் இணையவழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரலாம். -- சுந்தர் \பேச்சு 06:02, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இணையவழிப் பயிற்சிக்கு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு உதவ தயாராக உள்ளது. --Commons sibi (பேச்சு) 00:37, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இணையவழிப் பயிற்சியில் பங்குபெற எனக்கும் விருப்பமுண்டு. ஆனால் பயிற்சியைப் புரிந்து கொள்ளுமளவிற்கு எனக்கு தொழில்நுட்ப அறிவுள்ளதா தெரியவில்லை :(. (லிங்சுகேப், அது இதுன்னு என்னென்னமோ சொல்லுறீங்க :), ஒண்ணுமே புரியலை). பார்க்கலாம்.--கலை (பேச்சு) 10:53, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இங்க்ஸ்கேப் en:Inkscape, en:Notepad++.--Kanags \உரையாடுக 10:44, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஓ, அது இங்சுகேப்பா?--கலை (பேச்சு) 10:58, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பயிற்சி பெற விருப்பம். தொழில்நுட்ப அறிவு எனக்கும் மட்டுதான். ஆனால் தெரிஞ்சுக்கலாம் என்ற நம்ம்பிக்கை உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:48, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையில் இருந்து எங்களால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வோம் .இங்க்ஸ்கேப் சுலபமானதே--Commons sibi (பேச்சு) 11:15, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கப்படம் / விளக்க வரைபடம்[தொகு]

நான் உருவாக்கிய சில... தேவையெனில் பகுப்பில் சேர்த்து விடுங்கள். பொதுவாக, முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த தயாரானதும் தமிழ்ப்படுத்தி விடுவேன். SVG (விரியும் திசையன் படங்கள்) யில் தரமான படங்கள் உருவாக்க Adobe Illustrator சிறப்பானது. --Anton ·٠•●♥Talk♥●•٠· 06:25, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் Anton . SVG (விரியும் திசையன் படங்கள்) யில் தரமான படங்கள் உருவாக்க Adobe Illustrator விட "inkscape" சிறப்பானது . மேலும் இது கட்டற்ற மென்பொருள் ஆகும் .--Commons sibi (பேச்சு) 00:29, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அருமை அன்ரன். இவ்வளவு திறமை நம்மிடையே இருக்கும்போது என்ன கவலை? வெற்றிநடை போடுவோம். -- சுந்தர் \பேச்சு 06:29, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:31, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி அன்ரன், நீங்கள் பொதுவகத்தில் தரவேற்றும் தமிழ்ப் படிமங்களை Category:Diagrams_in_Tamil என்ற பகுப்புக்குள்ளும் சேர்த்து விட்டால் தேடலுக்கு வசதியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 06:32, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சேர்த்து விடுகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:35, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதனையும் கவனியுங்கள்: Category:Maps_in_Tamil --Anton·٠•●♥Talk♥●•٠· 06:44, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அருமை அன்ரன். எங்களுக்கும் பயிற்சி தர முடியுமா? இதற்காகவாவது விடுகை எடுத்துக் கொண்டு உங்களைச் சந்திக்க வருகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:51, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம் குறித்து[தொகு]

பிற தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களின் பெயர்களைப்போலவே இத்திட்டத்திற்கும் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல் என பெயர் மாற்ற பரிந்துரைக்கின்றேன். இது விக்கி துப்புரவு பணிகளுக்கு உதவியாய் இருக்கும். நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:06, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மாற்ற ஆதரவு. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:22, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மற்ற திட்டங்களைப்போலவே மாற்றலாம். ஆனால், ஒரு கருத்து அனைத்து விக்கித்திட்டங்களிலுமே திட்டம் என்பது பின்னால் வந்தால்தான் படிக்கும்படி இருக்கும். (தமிழில் பெயர்ச்சொல் கடைசியில் தான் வரும். Tamil is a consistently head-final language.) எனக்கும் இப்போதுதான் தோன்றுகிறது. அனைத்து விக்கித்திட்டங்களையும் பெயர் மாற்ற முடியுமா? பெரிய சிக்கல் என்றால் விட்டுவிடலாம். -- சுந்தர் \பேச்சு 07:33, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், திட்டம் என்பதை தலைப்போடு சேர்த்து பார்க்காமல், எல்லா திட்டங்களையும் பகுப்பிடும் நுட்ப முறையாக காணவும். அதாவது விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் <திட்டத்தின் பெயர்> என் எடுத்து கொள்ளலாம். எ.கா சைவ வலைவாசல் என்பதே சரியானதாக இருப்பினும், நாம் நுட்ப பகுத்தலுக்காக வலைவாசல்:சைவம் என வைத்திருப்பது போன்று இங்கும் வைப்பதில் தவறில்லை என நினைக்கின்றேன். மேலும் எல்லா விக்கித்திட்டங்களிலுமே திட்டம் என்பது பின்னால் வரவேண்டுமாயின், எல்லா திட்டப்பக்கதிலும் வேண்டுகோள்விடுத்து, தொடர்புடைய கட்டுரைகள், வார்ப்புருக்கள், பயனர் பெட்டிகள், பகுப்புகள் முதலியனவற்றை மாற்ற வேண்டும். மேலும் சில திட்டங்கள் நிறைவடந்த ஒன்றாகவும் இருப்பதால் வரலாற்றிக்காக அப்படியே அதனை விட்டு வைப்பது நலம் என்பது என் கருத்து. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:08, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 09:41, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அப்படியென்றால் சரி, செயரத்தினா. இந்தத் திட்டத்தின் பெயரையும் அதேபோல மாற்றிவிடுங்கள். நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:47, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:41, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ரியல் டிரா மென்பொருள் தொடர்பாக[தொகு]

ரியல் டிரா மென்பொருளை 4Shared தளத்திலிருந்து பதிவிறக்கினேன். ஆனால், அது பிரிபடுவதற்கு (to extract) கடவுச்சொல் கேட்கிறது. யாரேனும் உதவவும். ரியல் டிராவில் எவ்வாறு SVG-ஐத் தொகுப்பது? -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:47, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

inkscape பயன் படுதலாமே . --Commons sibi (பேச்சு) 11:29, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பரிந்துரைப்புக்கு நன்றி சிபி :) தரவிறக்குகிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:40, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பில் மாற்றம் வேண்டின் இங்கேயே சொல்லலாமா?[தொகு]

ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு பதிவேற்றப்பட்ட படிமத்தில் மாற்றம் வேண்டின், அதனை இங்கேயே சொல்லலாமா? எ.கா. படிமம்:Simple photosynthesis overview-ta.svg இல் சூரிய ஒளி என்பதற்குப் பதிலாக ஒளி என்று மாற்றலாம் என நினைக்கின்றேன். காரணம் ஒளித்தாக்கங்கள் (அப்படித்தான் படித்த நினைவு) / ஒளி வினைகள் (light reactions) பொதுவாக சூரிய ஒளியினால் நிகழ்ந்தாலும், சூரிய ஒளிதான் அவசியம் என்பதில்லை. மேலும், அதே படிமத்தில் ஒளிக்கிரியை என்பதை ஒளித்தாக்கங்கள் அல்லது ஒளிவினைகள் என மாற்றலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 08:41, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக செய்துவிடலாம். நானே மாற்றவா , அல்லது தாங்கள் மாற்ற விரும்புகிறீர்களா ? --Commons sibi (பேச்சு) 08:48, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இப்போதைக்கு நீங்களே மாற்றுங்கள். சரியான பயிற்சி பெற்ற பின்னர் நானும் செய்யலாம். நான் ஏற்கனவே செய்த படிமங்கள் எல்லாம் Paint இல் வெட்டி ஒட்டி, பிறமொழி எழுத்துக்களை அகற்றி, பின்னர் தமிழ் எழுத்துக்களைப் புகுத்திச் செய்தவை. அது நேரம் அதிகம் எடுப்பதாலேயே நான் பல தடவைகள் பல படிமங்களில் மாற்றம் செய்ய விரும்பினும், அவற்றைச் செய்யாமல் அப்படியே இணைப்புக் கொடுத்திருக்கின்றேன். தற்போது நான் அவ்வாறு செய்த படிமங்களை கனக்ஸ் மேலே கூறியிருக்கும் Category:Diagrams_in_Tamil பகுப்பிலும் இணைத்துள்ளேன். அவற்றை இன்னும் அழகாக மேம்படுத்தத் தேவையிருப்பினும் செய்யலாம். --கலை (பேச்சு) 09:23, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 17:26, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
க(லை|ளை) கட்டுகிறது கண்டு மகிழ்ச்சி. :) சிபி, நீங்கள் படங்களை ஏற்றியும் பலவாறும் பணிபுரிவதைப் பார்த்து மகிழ்ந்தேன். -- சுந்தர் \பேச்சு 10:03, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், நன்றி.--Commons sibi (பேச்சு) 17:26, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//க(லை|ளை) கட்டுகிறது கண்டு மகிழ்ச்சி.// :)--கலை (பேச்சு) 10:35, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உதவிப் பக்கம்[தொகு]

ஆங்கில விக்கியில் இதற்கான உதவிப் பக்கம் (திட்டப் பக்கம்) உள்ளது. பார்க்க: en:Wikipedia:SVG help.--Kanags \உரையாடுக 10:16, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இணையவழி படமெழுதி[தொகு]

Image Scribbler இணையத்தில் இருந்தவாறே பொதுவகப் படங்களை மொழிபெயர்த்துத் தரவிறக்க(வேறு மென்பொருள் தேவையின்றி) யாரேனும் விரும்பினால் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். அனைத்து மொழிகளும் ஏற்கிறது. குரோம், ஃபயர் பாக்ஸ் உலாவிகளில் வேலை செய்யும். இச்செயலி தற்போதைக்குச் சோதனைப் பதிப்பாகவே வெளியிட்டப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு கருதி மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். --நீச்சல்காரன் (பேச்சு) 08:46, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சில ஆலோசனைகள்[தொகு]

மூலப் படங்களை ஆங்கிலம் அல்லது வேறு மொழி விக்கிகளில் இருந்து எடுத்து தமிழாக்கும் போது மூலப் படத்தைத் தயாரித்தவர் பெயர் மூலப் படத்துக்கான இணைப்பு ஆகியவற்றைத் தருவது நல்லது. எடுத்துக்காட்டாக: File:Status iucn3.1 CR-ta.svg என்ற படிமத்தில்

Source: File:Status iucn3.1 CR.svg
Author: *[[:File:Status_iucn3.1_CR.svg|Status_iucn3.1_CR.svg]]: [[User:Pengo|Pengo]] *derivative work: [[User:Commons sibi|Commons sibi]])

எனத் தரலாம். உதாரணத்திற்கு இந்தப் படிமத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:54, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

  1. சுந்தர்
  2. Kanags
  3. Commons sibi
  4. Natkeeran
  5. செந்தி
  6. நந்தகுமார்
  7. Suthir
  8. கலை

தமிழில் விளக்க வரைபடம் என்றால் தமிழில் பெயரிடலாமே. ஏன் எனில் வேறு மொழிகளில் அதை பயன்படுத்த மாட்டார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:14, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

எனது யோசனையைத் தான் நான் சொன்னேன். தலைப்பு எப்படி இருந்தாலும், வேறு மொழிகளில் இருந்து எடுத்த படங்களுக்கு Source, Author, derivative work ஆகியன அவசியம் தரப்பட வேண்டும். மேலும், தமிழில் தலைப்பிடுவதாக இருந்தால் எழுத்துப்பிழை இல்லாமல் தாருங்கள். இங்கு பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:23, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆம், தலைப்பு தமிழில் இருக்கலாம். ஆனால் மூலக்கோப்பு குறித்த தகவல்களும் இணைப்பும் வேண்டும். -- சுந்தர் \பேச்சு 13:44, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
//தலைப்பு தமிழில் இருக்கலாம்//- பொதுவாக derivative works "name-language" என்கிற மரபு wikicommonsல் பயன்படுத்தப் படுகிறது . நாம் தலைப்பை தமிழில் இடாமல் , descriptionல் தமிழ் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. --Commons sibi (பேச்சு) 17:12, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
தற்போது‍ நமக்கு‍ தேவைப்படும் படங்களை பட்டியிலிட்டால் அதை விரைவாக மொழியாக்கம் செய்யலாம். பின்னர் மற்ற படங்களை மொழியாக்கம் செய்யலாம் என்பது‍ என் கருத்து.... --Suthir