விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் பெற்ற நிதிநல்கைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இத்திட்டப்பக்கத்தில் முதலில் அறிந்ததை எழுதுவோம். பிறகு சிறப்பாக வளர்த்தெடுப்போம். நீங்கள் விண்ணப்பித்திருந்து, உங்கள் நிதிநல்கை கிடைக்கவில்லையென்றாலும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அது பின்னாளில் வரும் விக்கி நண்பர்களுக்கு உறுதுணையாக இருக்கும். --உழவன் (உரை) 02:40, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

2023 - தமிழ் விக்கிப்பீடிய விண்ணப்பம்[தொகு]

@Selvasivagurunathan mதமிழ் விக்கிப்பீடியாவிற்க்காக நீங்கள் அளித்த விண்ணப்பம் குறித்து அறிய விரும்புகிறேன். உழவன் (உரை) 14:26, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]

WMF அலுவலரின் மதிப்புரைக்காக நீண்ட நாட்கள் விண்ணப்பம் காத்திருந்தது. உரையாடல் பக்கத்தில் அவர் தனது கருத்துகளை இட்டு, வினாக்களை எழுப்பிய வேளையில் - எனது சொந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், பதிலளிக்க இயலவில்லை. அப்படியே நின்றுவிட்டது. விண்ணப்பத்தை திரும்பப் பெற எண்ணியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]
இது குறித்த உரையாடலை நாம் மூன்றாவது இந்திய விக்கி மாநாட்டில் பேசத் தொடங்கினோம். சூழல் காரணமாக விட்டு விட்டோம். நேரம் இருக்கும் போது அழையுங்கள். பிறரோடு இணையவும் விருப்பம். தொடர்வோம். பிறகு விண்ணப்பத்தினை திரும்ப பெற முடிவெடுங்கள் என்பதே எனது வேண்டுகோள். பிற இந்திய திட்டங்களோடு ஒப்பிடும் போது, நமது பங்களிப்பாளர்கள் நிதிநல்கை பெறுவது வெகு குறைவு. இதற்கு நமது பங்களிப்பாளர்கள் இன்னும் மேம்பட்ட கலந்துரையாடலைக் கற்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 02:29, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நிதிநல்கை கோரிக்கையை வைப்பதிலேயே சில சிரமங்கள் உள்ளன. அரசுப் பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக அறிகிறேன். பங்களிப்பாளர்களே குறைவாக இருக்கும் தளத்தில், திட்டங்களை நடத்துவதற்கு போதிய மனித வளம் இல்லை. மற்றபடி - முன்வரைவை தாக்கல் செய்தல், அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தல், கலந்துரையாடி திட்டத்தை முழுமைப்படுத்துதல், நிதியைப் பெற்று நடத்துதல் ஆகியவற்றை சிறப்பாகவே தமிழ் விக்கிப்பீடியர்கள் செய்துவருகிறார்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:36, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
திட்ட அலுவலரின் வினாக்களைக் கண்டேன். ம்..ம் கொஞ்சம் சிரமம் தான். இலக்குகள் பொதுவாக இருப்பதால், இச்சூழல் எழுந்துள்ளது. விண்ணப்பத்தில் என் பெயர் உட்பட பலரை பட்டியல் இட்டுள்ளீர்கள். fluxx-இல் எழுதும் போது, அவர்களுடன் நீங்கள் உரையாடி இருந்தால், மிக நன்றாக இருந்திருக்கும். ஏனெனில், நல்கை விதிப்படி நானும் அதற்கு பொறுப்பு. என்னைக் கேட்டிருந்தால், என் பெயரை நான் இணைக்க வேண்டாம் என்றே கூறியிருப்பேன். ஏனெனில், நாம் தனித்தனியே செயற்படும் போது, நல்கையை தமிழ் விக்கிமீடியாவிற்கு குவிக்க இயலும் என்றே எண்ணுகிறேன். இனிமேல் யார் பெயரையும், நல்நோக்காக இருந்தாலும், உரையாடி இணைக்கவும். அதுவே நல்ல விளைவினைத் தரும். நான் விக்கிமூலத்திற்கு விண்ணப்பித்து இருப்பது போல, வேறு சிலரும் விண்ணப்பிக்க எண்ணியிருக்கலாம். சிறப்புற செய்வோம். என்னுடைய விண்ணப்பத்திற்கான வினாக்களை நான் எதிர்நோக்கியுள்ளேன். உழவன் (உரை) 06:46, 12 சனவரி 2024 (UTC)[பதிலளி]
மற்றொன்று, சொல்ல மறந்து விட்டேன். விக்கித்தரவு அடிப்படையில் அறிக்கைகளை தருதல், நல்கை குழுவினரால் பெரிதும் விரும்பப் படுகிறது. உங்களின் முந்தைய அறிக்கைகளில் சான்று வெகு குறைவாக உள்ளது. பிற மொழியினர், நம்மை எப்படி நோக்குகின்றனர்? என்பதே முக்கியம். நல்கை குழுவினர் நமது மனநிலையில் பெரும்பாலும் இருப்பது அரிது. உழவன் (உரை) 06:53, 12 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@Info-farmer: உரிய பதிலை 4-சனவரி-2024 அன்று தந்துவிட்டதால், இந்தப் பகுதிக்கு நான் மீண்டும் வரவில்லை. உங்களின் 'முதிர்ச்சியற்ற உரை'களை, இன்று தற்செயலாக பார்க்க நேரிட்டது. கடந்து சென்று விடலாம் என்றே முதலில் நினைத்தேன். ஆனால், உரிய பதில்களைத் தராவிட்டால்... உங்களைப் போன்றவர்களால் ஒரு அறிவுத்தளம் மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தவிர, நான் சரிவர செயல்படவில்லை எனும் கருத்தும் பதிவாகும். இக்காரணங்களால் பின்வருவனவற்றை எழுதுகிறேன்.
  1. 'திட்ட அலுவலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை' எனும் கருத்தை இங்கு கட்டமைக்க முயற்சிக்க வேண்டாம்.
  2. இலக்குகள் பொதுவானவை என மதிப்பிட நீங்கள் யார்? Justification உங்களால் தர இயலுமா?
  3. உங்கள் பெயரை இட்டதற்கு உங்களின் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். மற்றவர்கள் சார்பாக பேச நீங்கள் யார்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை யாரும் தரவில்லை.
  4. இன்னொரு பயனருக்கு அறிவுரை கூற முற்படுவதற்கு முன்பு, ஒரு விசயத்தை நன்றாக படித்துப் பார்த்து, தான் தெளிந்துகொள்ளுங்கள். people related to this proposal எனும் இடத்தில் சத்திரத்தான், Sridhar G, Balu1967, TNSE Mahalingam VNR ஆகியோரின் பெயர்தான் இடப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரிடமும் அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டன. The core team consists of 5 members including me. Other 7 members will involve themselves as trainers / coordinators / facilitators at workshop events. All 12 members are Tamil Wikipedia contributors (volunteers), most of them are administrators in Tamil Wikipedia. என்பதில்தான் 9-ஆவது பெயராக உங்கள் பெயர் இருக்கிறது. எனவே, //நல்கை விதிப்படி நானும் அதற்கு பொறுப்பு// எனும் கூற்றெல்லாம் சரியானது இல்லை.
  5. //உங்களின் முந்தைய அறிக்கைகளில் சான்று வெகு குறைவாக உள்ளது// இதனைக் கூற நீங்கள் யார்? நிற்க, எந்த அறிக்கையைக் குறிப்பிடுகிறீர்கள்? எதையோ பார்த்துவிட்டு வந்து எதையோ சொல்லாதீர்கள். சரியாக குறிப்பிட்டுச் சொன்னால், அலசிப் பார்த்து உரிய பதிலைத் தர இயலும்.
  6. //பிற மொழியினர், நம்மை எப்படி நோக்குகின்றனர்? என்பதே முக்கியம்.// இந்த அறிவுரை எனக்கு எதற்காக? நிற்க, இந்த அறிவுரையை எனக்குச் சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?
  7. இன்னொரு பயனரை கீழிறக்கி கருத்துக்களை தெரிவிக்கும் நீங்கள், சூலை 2022 முதல் இங்கு எடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பரிந்துரை வழங்குதல், அத்திட்டங்களில் இணைந்து பணியாற்றுதல் ஆகிய செயல்களைச் செய்ததுண்டா?
  8. முன்னேற்றக் கருத்துக்கள் இருப்பின் அதனை எப்படித் தெரிவிக்கவேண்டும் என்பதற்கு பொதுவான நியதிகள் இருக்கின்றன. அந்த நியதிகளின்படி, என்னிடம் உரையாடுவதாக இருந்தால் உரையாடுங்கள். மேற்கொண்டு இந்த விசயத்தில் பிறழ்வுகள் ஏற்படின், தமிழ் விக்கிப்பீடியாவில் உரிய இடத்தில் முறையிடுவேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:10, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
    வணக்கம். மா. செல்வசிவகுருநாதன்.
    • //உங்களைப் போன்றவர்களால் ஒரு அறிவுத்தளம் மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.// சரி. விக்கிப்பீடியாவை விட்டு வெளியேறி விடுகிறேன். ஆனால், அதற்கு முன் எனது இறுதியுரையை கீழே தருகிறேன்.
    • //இவர்கள் நால்வரிடமும் அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டன// என்னிடமும் தெரிவித்து இருக்கலாமே அல்லது எனது பெயரை எழுதாமல் இருந்திருக்கலாம்.
    • //உங்கள் பெயரை இட்டதற்கு உங்களின் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.// முதலில் நீக்கிவிட்டு வாருங்கள். ஏனெனில் முதலில் நடந்தது அப்பதிவே, பிறகு நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன்.
    • //அத்திட்டங்களில் இணைந்து பணியாற்றுதல் ஆகிய செயல்களைச் செய்ததுண்டா?// எனது இறுதி பங்களிப்பாக கீழ்கண்ட பங்களிப்புகளைச் செய்வேன்.
      • இன்னும் ஓரிரு வாரங்களில் பகுப்பு:CS1 errors: dates இந்த துப்புரவு பணியை முடிக்கிறேன்.
      • தற்போதுள்ள தாவரவியல் கட்டுரைகளை, என்னால் இயன்றவரை மேம்படுத்த வாய்ப்பு இருப்பின், இன்னும் 100 நாட்களில் மேம்படுத்துவன்.
    • வாய்ப்பு இல்லாவிட்டால், இன்னும்10 நாட்களில் தமிழ் விக்கிப்பீடியாவை விட்டு வெளியேற எண்ணுகிறேன்.
    தன்னலமற்று பணியாற்றும் சக விக்கிப்பீடியர்களுக்கு,
    எனது வணக்கங்கள்.
    நான் விக்கிப்பீடியாவிற்க்கு வருவதற்கு முன் கூலித் தொழிலாளி. இந்த 15 வருடங்களில் தொடர்ந்து கணினி, படிப்பு, பயண உதவிகள் அளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்களால் நான் இன்று சட்ட அலுவலகத்தில் நல்ல பணியில் உள்ளேன். இதற்கு வித்திட்டவர் எனது ஆசான் பயனர்:Ravidreams. அவருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
    மேலும், கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தி கற்றுத் தந்த த. சீனிவாசன். முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியராக நான் குழப்பமான சூழலில் இருந்த போது, என்னை ஆற்றுப்படுத்தியதால் தான் விக்கிமூலம் என்ற திட்டம் என் மனதில் தோன்றியது. அதற்கு சே. இராஜாராமன் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். அதனால் தான் என்னால் விக்கிமூலத்தில் மூன்று இலட்சம் புதிய பக்கங்களை உருவாக்க முடிந்தது. என்னை முதன் முதலாக பன்னாட்டு விக்கிமீடியக் கூட்டத்தில் கலந்து கொள்ள வழிநடத்திய பாலாஜிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல சூழ்நிலைகளில் என்னை ஆற்றுப்படுத்தி, வழிநடத்திய பயனர்:கி.மூர்த்தி, பயனர்:TNSE Mahalingam VNR மிக்க நன்றி. ஒரு இலக்கை எடுத்தால் அதனை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் ஆழமாக விதைத்த பயனர்:Arularasan. G-க்கு மிக்க நன்றி.
    பல இன்னல்களோடு, எங்கு வாழ்ந்தாலும் அன்னைத் தமிழுக்கு அரும்பணிகளைச் செய்யும் இலங்கைத் தமிழர்களுக்கும் எனது நன்றி.
    தமிழ் விக்கிப்பீடியா திட்டத்திற்கு அடித்தளம் இட்ட பயனர்:Mayooranathan ஐயாவையும் வணங்கி விடைபெறுகிறேன் உழவன் (உரை) 04:13, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@Info-farmer: பேசுபொருளுக்கு சம்பந்தமில்லாத பல கருத்துக்களை இட்டிருக்கிறீர்கள். அது உங்களின் விருப்பம். அவை குறித்து நானும் பேசி, மடைமாற்றம் செய்ய விரும்பவில்லை. இருக்கட்டும்; நான் குறிப்பிட்ட விசயங்கள் 1, 2, 5, 6, 8 ஆகியவற்றிற்கு உங்களிடமிருந்து பதில் ஏதும் இல்லை. பதில் கிடைத்தால், மேற்கொண்டு விளக்குவேன். பதில் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
பதில் கிடைத்த விசயங்களுக்கு, மற்ற பயனர்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, கூடுதல் விளக்கங்களைத் தருகிறேன்:
# விசயம் 3: 'நிதி கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யும்போது, உங்களின் அனுமதியைப் பெறாது விண்ணப்பத்தில் உங்களின் பெயரை இட்டது' எனது மேலாண்மைத் தவறு என்பதனை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், முன்னதாக தொடர்-தொகுப்பு 2023 எனும் திட்டத்தை உருவாக்கி, உரையாடிய போது, இந்த உரையாடல் பகுதியில் 'பயிற்சியாளராக கலந்துகொள்ள' உங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளீர்கள். இத்திட்டமே பின்னர் பயிலரங்குகள் 2023 என வடிவம் பெற்று, நிதி வேண்டி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. உங்களின் அனுமதியைப் பெறாது விண்ணப்பத்தில் பெயரை இட்டது மேலாண்மைத் தவறு என்றாலும், அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதனை விசயம் 4 எனும் விளக்கத்தில் அடுத்துத் தந்துள்ளேன்.
# விசயம் 4: விண்ணப்பத்தில் நான் தந்த விவரங்கள்
(1) Please provide your main Wikimedia Username. Selvasivagurunathan m
(2) Please provide the Usernames of people related to this proposal. சத்திரத்தான், Sridhar G, Balu1967, TNSE Mahalingam VNR
(3) Do you have the team that is needed to implement this proposal?
The core team consists of 5 members including me. Other 7 members will involve themselves as trainers / coordinators / facilitators at workshop events. All 12 members are Tamil Wikipedia contributors (volunteers), most of them are administrators in Tamil Wikipedia.
Team List:
1. Selvasivagurunathan Madasamy (User:Selvasivagurunathan m)
2. Pitchaimuthu Mariappan (User:சத்திரத்தான்)
3. Sridhar G (User:Sridhar G)
4. S. Balasubramanian (User:Balu1967)
5. N. R. Mahalingam (User:TNSE Mahalingam VNR)
6. K. Murthy (User:கி.மூர்த்தி)
7. Arularasan. G (User:Arularasan. G)
8. BALA. R (User:Balurbala)
9. LOGANATHAN.R (User:Info-farmer)
10. Parvathisri (User:Parvathisri) 11. Abirami Narayanan (User:அபிராமி நாராயணன்) 12. Neechalkaran (User:Neechalkaran)
(1) விண்ணப்பிப்பவர்: மா. செல்வசிவகுருநாதன். இவரால், ஓராண்டிற்கு USD 10,000 வரை நிதியைப் பெற இயலும் [Rapid Fund rule: The total fund amount an individual can access per fiscal year (e.g. July 1, 2023 - June 30, 2024) is up to USD 10,000]
(2) திட்ட முன்மொழிவோடு தொடர்புடையவர்கள்: சத்திரத்தான், ஸ்ரீதர். ஞா, எஸ். பாலசுப்ரமணியன், மகாலிங்கம் ஆகியோர் (அதாவது core team உறுப்பினர்கள்)
(3) நிகழ்விடத்தில் பயிற்றுநர்கள் / ஒருங்கிணைப்பாளர்கள் / வழிநடத்துபவர்கள்: கி.மூர்த்தி, அருளரசன், பாலா ஆர், லோகநாதன் ஆர், பார்வதிஸ்ரீ, அபிராமி நாராயணன், நீச்சல்காரன்
ஆக, உங்களின் பெயரானது 'நிகழ்விடத்தில் பயிற்றுநர்கள் / ஒருங்கிணைப்பாளர்கள் / வழிநடத்துபவர்கள்' எனும் வகையில் தான் இடப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் இப்பணிகளைச் செய்வோருக்கு, 'நிதி வழங்கும் அமைப்பிற்கு பதில் சொல்ல வேண்டிய அளவிற்கு பொறுப்பு இல்லை' என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. அத்தோடு, இப்பணிகளைச் செய்வோர்... ஆண்டிற்கு USD 10,000 வரை மற்ற திட்டங்களுக்காக நிதியைப் பெற இயலும். ஏனெனில் நிதியைப் பெறுபவர் மற்ற திட்டங்களில் தனது உழைப்பைத் தரக்கூடாது என Rapid Fund rule இல்லை. எனவே, விக்கிமூலத்திற்காக நீங்கள் விண்ணப்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழ் விக்கிப்பீடியாவில் திட்டங்களை இயக்கும் அணி அதிகபட்சமாக 10 பேரை உள்ளடக்கியது. அனைவரிடமும் தெரிவித்த பிறகே நிதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.
# விசயம் 7: விக்கிப்பீடியா:மேம்பாடு எனும் பெருந்திட்டத்தை தமிழ் விக்கிப்பீடியர்கள் சூலை 2022 முதல் இயக்கி வருகிறார்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்கு என்ன என்பதனை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். குறை சொல்வது எளிது; இயக்குவதுவே சவால்!
constructive criticism (Criticism intended to provide suggestions for improvement without insulting the recipient) தராது, destructive criticism (Criticism performed with the intention to harm someone, derogate and destroy someone’s creation, prestige, reputation and self-esteem) செய்ததால், 'முதிர்ச்சியற்ற உரைகள்' என்பதாக குறிப்பிடவேண்டியதாயிற்று. இவற்றைக் கடந்து சென்றால், என்னைப் போல இன்னொருவர் பாதிக்கப்படுவார். இதைக் குறிப்பிடவே //அறிவுத்தளம் மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்// என எழுதினேன்.
அந்த விண்ணப்பத்தில் இப்போது சென்று உங்களின் பெயரை நீக்க இயலாது. இந்தத் தலைப்பின் கீழ் உரையாடல் ஆரம்பிக்கப்பட்டபோது, நான் அளித்த பதிலுரையின்படி... அந்த விண்ணப்பத்தையே திரும்பப் பெறப் போகிறேன். ஏனெனில் அந்தத் திட்டத்தை ஒரு சோதனைத் திட்டத்தின் வாயிலாக இயக்கிப் பார்த்தாகிவிட்டது! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:28, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நிதி தொடர்புபட்ட உதவிகள்[தொகு]

தமிழ் விக்கிமீடியா என்பதன் பொருள் விக்கிமீடியாவின் அணைத்து தமிழ் திட்டங்களுமா? அவ்வாறாயின் விக்சனரி உட்பட்டவையும் உள்ளடங்கும் அல்லவா? இங்குள்ள குறிப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது: நிதிநல்கை வாங்கியவர் இத்திட்டப்பக்கத்தினை வளர்த்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆகவே மற்றவர்கள் தொகுக்க முடியாதா? ஏனென்றால், விக்கிப்பீடியா:தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் பெற்ற நிதிநல்கைகள் என்பது விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புருவுடன் உள்ளது. மேலும், நிதிநல்கைகள் மாத்திரம்தான் இங்கு உள்வாங்கப்படுமா? அல்லது வேறு நிதி தொடர்புபட்ட உதவிகளும் உள்ளடக்கப்படுமா? நிதிநல்கைகளில் இதுவரை நான் தொடர்புபடவில்லை. ஆனால். 2011 முதல் நிதிநல்கை திட்டங்களைக் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். இவை தொடர்பில் சில ஒத்தாசைகள் செய்ய இயலும். அத்துடன் சில கேள்விகளும் உள்ளன.

சில குறிப்புகள்:

--AntanO (பேச்சு) 08:23, 12 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@AntanO சில சமயம் ஒருங்கிணைந்த பங்களிப்புகளுக்கு/திட்டங்களுக்கு உதவி செய்திருப்பார்கள். உதாரணமாக விக்கிமேனியா நிதிநல்கை அவ்வாறு கொள்ளலாம். விக்கிப்பயனர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள், உறைவிட விக்கிப்பீடியருக்கான மதிப்பூதியம் போன்றவைகூட ஒரு திட்டத்தை மட்டும் கணக்கில் கொண்டவையல்ல. எனவே பொதுவான சேகரிப்பாகக் கொள்வதில் பிழையில்லை என நினைக்கிறேன். @Info-farmer அன்ரன் குறிப்பிட்டது போல இதர உதவிகளையும் தொகுக்கலாம். மடிக்கணினி, இணையத் தரவு அட்டை, இதர வன்பொருட்கள் போன்றவற்றையும் உங்களைப் போல விருப்பமுள்ளவர்கள் வெளியிடலாம். தனியுரிமையின் பொருட்டு அனைவரையும் வெளியிடக் கோரமுடியாவிட்டாலும் விரும்பியவர்கள் இணைப்புகளைத் தந்து எதிர்காலத்தில் ஒருங்கிணைக்க உதவலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:00, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]

குறிப்பு: மேலேயுள்ள பகுதி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) என்ற பகுதியில் இருந்து ஆவணப்படுத்தலுக்காக இங்கு பதிவிடப்படுகிறது. தொடர்ந்து உரையாடலாம். AntanO (பேச்சு) 08:33, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]