த. சீனிவாசன்
த. சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | காஞ்சிபுரம் |
வலைத்தளம் | |
https://github.com/tshrinivasan |
த. சீனிவாசன் (ஆங்கில மொழி: T. Shrinivasan) என்பவர் 2016 ஆம் ஆண்டு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதினைப் பெற்ற கணித்தமிழ் ஆர்வலராவர்.[1][2] கட்டற்ற இணைய வளங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். ப்ரீ தமிழ் ஈபுக்ஸ் என்ற தன்னார்வக் குழுவினை நிறுவி படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமையில் பல மின்னூல்களை வெளியிட்டுவருகிறார். உத்தமத்தின் இந்தியப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இவர் உருவாக்கிய பைத்தான் வழி கூகிள் எழுத்துணரி இடைமுகம் வழியாக விக்கிமூலம் திட்டத்தில் இந்திய மொழிப் பக்கங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன.
கணியம் அறக்கட்டளை
[தொகு]2018 ஆம் ஆண்டு கணியம் அறக்கட்டளையை சீனிவாசன் நிறுவினார். இதன் மூலம் கட்டற்ற உரிமையில் பல்வேறு தொழிற்நுட்பக் கருவிகளும், தமிழ் மெய்நிகர் வளங்களும் உருவாக்கப்பட்டுவருகின்றன.[3][4] இந்த அறக்கட்டளை மூலம் 2019 மார்ச் மாதம் பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கு ஒர் கைபேசி செயலியை வெளியிடப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது". தென்றல் இதழ். http://tamilonline.com/thendral/article.aspx?aid=11620. பார்த்த நாள்: 17 June 2019.
- ↑ "விருது அழைப்பிதழ்" (PDF). தமிழ் இலக்கியத் தோட்டம். பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
- ↑ "விழுப்புரத்தில் இ புத்தகம் தமிழ் செயலி வெளியீடு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2274895. பார்த்த நாள்: 17 June 2019.
- ↑ "கணியம் அறக்கட்டளை". kaniyam.com. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
- ↑ "அரிய தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்க செல்போன் செயலி அறிமுகம்". இந்து தமிழ். https://tamil.thehindu.com/tamilnadu/article26616914.ece. பார்த்த நாள்: 17 June 2019.