வசிராபாத்

ஆள்கூறுகள்: 32°26′7″N 74°6′51″E / 32.43528°N 74.11417°E / 32.43528; 74.11417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசிராபாத்
وزِيرآباد
நகரம்
முலானா ஜாபர் அலிகானின் கல்லறை Gateway to Wazirabad
முலானா ஜாபர் அலிகானின் கல்லறை Gateway to Wazirabad
வசிராபாத் is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
வசிராபாத்
வசிராபாத்
வஜிராபாத்தின் இடம்
வசிராபாத் is located in பாக்கித்தான்
வசிராபாத்
வசிராபாத்
வசிராபாத் (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 32°26′7″N 74°6′51″E / 32.43528°N 74.11417°E / 32.43528; 74.11417
நாடுபாக்கித்தான்
பாகிஸ்தானின் துணைப்பிரிவுகள்பஞ்சாப்
மாவட்டம்குஜ்ரன்வாலா மாவட்டம்
வட்டம்வசிராபாத் வட்டம்
ஒன்றியக்குழுக்களின் எண்ணிக்கை12
நகராட்சி1867
பரப்பளவு
 • நகரம்53 km2 (20 sq mi)
ஏற்றம்215 m (705 ft)
மக்கள்தொகை
 • நகர்ப்புறம்299,751
நேர வலயம்பாகிஸ்தான் சீர்மிகு நேரம் (ஒசநே+5)
 • கோடை (பசேநே)பாசீநே (ஒசநே+6)
அஞ்சல் குறியீட்டு எண்52000

வசிராபாத் (ஆங்கிலம் : Wazirabad ) ( உருது / பஞ்சாபி: وزِيرآباد ) என்பது பாக்கிததானின் பஞ்சாபில் உள்ள குஜ்ரான்வாலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை நகரம் ஆகும்.

வசிராபாத் லாகூருக்கு வடக்கே கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் செனாப் ஆற்றின் கரையில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது சியால்கோட்டிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்ட தலைநகர் குஜ்ரான்வாலாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மாவட்டத்தின் நிர்வாக துணைப்பிரிவான வசிராபாத் வட்டத்தின் தலைமையகமாக வசிராபாத் நகரம் உள்ளது, இந்த நகரம் 12 ஒன்றியக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. [1]

வரலாறு[தொகு]

இந்த நகரத்தை முதன்முதலில் 1760 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் பிற நகரங்களுடன் சரத் சிங் என்பவர் கையகப்படுத்தியுள்ளார். [2] 1809 ஆம் ஆண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் நகரத்தை ஆக்கிரமித்து அவிதாபில் என்பவரை நகரத்தின் ஆளுநராக நியமித்தார். அவர் முற்றிலும் ஒரு புதிய நகரத்தை கட்டியெழுப்பினார். நேராகவும் அகலமானதாகவும் கொண்டுள்ள கடைகளையும், பக்கத்தெருக்களையும் சரியான கோணங்களில் வடிவமைத்தார்.

பிரித்தானிய ஆட்சி[தொகு]

பிரித்தானிய ஆட்சியின் போது வசிராபாத் பழைய வசிராபாத் மாவட்டத்தின் தலைமையகமாக இருந்தது. இது 1851- இல் பிரிக்கப்பட்டது. பின்னர் 1855 ஆம் ஆண்டில் சியால்கோட்டிற்கு அகற்றப்பட்ட ஒரு பாசறையின் தளமாக இருந்தது.

இந்த நகராட்சி 1867 இல் உருவாக்கப்பட்டது. 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 18,069 பேர் ஆகும். 1902 உடன் முடிவடைந்த பத்து ஆண்டுகளில் இதன் வருமானம் சராசரியாக ரூ. 20,800 ம், செலவு ரூ. 21.400 ஆகும். 1903 ல் வருமானம் ரூ. 20,800, முக்கியமாக நகரத்தின் சுங்க வரியிலிருந்து மற்றும் செலவு ரூ. 19.200ஆகும். இந்த நகரம் மரக்கட்டை வர்த்தகத்தைக் கணிசமானக் கொண்டிருந்தது. மரக்கட்டைகள் சம்மு பிரதேசத்திலிருந்து செனாப் ஆற்றிலிருந்து கீழிறங்குகிறது. [2] வசிராபாத் சிறிய வெட்டுக்கருவிகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்றது. மேலும் நகரத்தின் ஒரு மைல் தூரத்திற்குள் உள்ள நிசாமாபாத் கிராமம் அதன் ஆயுதங்களுக்கு புகழ் பெற்றது. வட-மேற்கு இரயில்வேயில் வசிராபாத் ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கிறது. ஏனெனில் சியால்கோட்-சம்மு மற்றும் இலியால்பூர் வழித்தடங்கள் இரண்டும் இங்கிருந்து கிளம்புகின்றன. [3]

செனாப் நதி வசிராபாத்திற்கு எதிரே அலெக்சாண்த்ரா இரயில்வே பாலத்தின் கீழ் பரவியுள்ளது. இது இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் பணிகளில் ஒன்றாகும். இது 1876 ஆம் ஆண்டில் ஏழாம் எட்வர்ட் பேரரசர் வேல்ஸ் இளவரசராக இருந்தபோது திறக்கப்பட்டது. இந்த நகரத்தில் இரண்டு ஆங்கிலோ-வடமொழி உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று எசுகாத்லாந்து தேவாலய மிஷனரிகளால் பராமரிக்கப்படுகிறது. மேலும் ஒரு அரசு மருந்தகமும் உள்ளது. [3]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

 • பஞ்சாப் கல்லூரிகளின் குழு
 • சுப்பிரீயர் குழுக்களின் கல்லூரிகள்
 • அல்லையிடு பள்ளிகள்
 • கல்வியாளர்கள்

நகரமைப்பு[தொகு]

கட்டிடக்கலை[தொகு]

1878 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, அலெக்சாண்த்ரா ரயில்வே பாலம் வேல்ஸ் இளவரசரால் திறக்கப்பட்டது.

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் பஞ்சாப் வடக்கு மாநில இரயில்வேயை செனாப் ஆற்றின் மீது கொண்டு செல்ல கட்டப்பட்டது. தொடங்கப்பட்டு 1876 இல் முடிக்கப்பட்டது. பின்னர் 1878 இல் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன.

போக்குவரத்து[தொகு]

வசிராபாத் தேசிய நெடுஞ்சாலை என் 5 என்பதில் அமைந்துள்ளது, இது வடக்கே அருகிலுள்ள நகரமான குஜராத் மற்றும் மாவட்ட தலைநகர் குஜ்ரான்வாலா மற்றும் தெற்கில் மாகாண தலைநகர் லாகூர் ஆகியவற்றுடன் இணைகிறது. இரட்டை இரயில் பாதை நகரத்தை குஜராத், சியால்கோட், தஸ்கா மற்றும் குஜ்ரான்வாலாவுடன் இணைக்கிறது.

இ 3 அதிவேக நெடுஞ்சாலை[தொகு]

E3 அதிவேக நெடுஞ்சாலை அல்லது கோட் சர்வார்-ஹபீசாபாத்-வஜிராபாத் அதிவேக நெடுஞ்சாலை என்பது கட்டுப்படுத்தப்பட்ட-அணுகல் அதிவேக நெடுஞ்சாலை ஆகும், இது வஜிராபாத்தில் உள்ள N-5 தேசிய நெடுஞ்சாலையை பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கோட் சர்வருக்கு அருகிலுள்ள M-2 / M-4 சந்திப்புடன் இணைக்கிறது. E3 நகரத்தை அருகிலுள்ள பகுதிகளில் உள்ள தெஹ்ஸில் யூனியன் கவுன்சில்களுடன் இணைக்கிறது.

குறிப்பிடத்தக்க குடியிருப்பாளர்கள்[தொகு]

 • இப்திகர் சீமா, ஓய்வு பெற்ற நீதி மற்றும் தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினர்( 3 தடவை பதவிக்காலம்)
 • நிசார் அகமது சீமா, முன்னாள் தலவைர், பஞ்சாப் சுகாதாரம் மற்றும் உறுப்பினர் தேசிய சட்டமன்றம்
 • அதிஃப் அஸ்லம், பாடகர்
 • ஷேக் நஸ்ருல் பாக்கர், அரசு ஊழியர்
 • முன்னு பாய், எழுத்தாளர்
 • ரசியா பட், எழுத்தாளர்
 • கிருஷன் சந்தர், எழுத்தாளர்
 • பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஹமீத் நசீர் சத்தா
 • ஹபீஸ் ஓமர் பாரூக், எழுத்தாளர்
 • ஜாபர் அலிகான், எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர்
 • ஜாவத் எஸ். கவாஜா, பாகிஸ்தானின் 23 வது தலைமை நீதிபதி
 • ஷைஸ்டா நுஜாத், கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் அதிகாரத்துவம்
 • முகமது அப்துல் கபூர் ஹசார்வி : முஸ்லீம் இறையியலாளர், சொற்பொழிவாளர் மற்றும் மறுமலர்ச்சித் தலைவர்
 • மஜார் உல் இஸ்லாம், எழுத்தாளர்
 • எஸ்.ஏ.ரஹ்மான், பாகிஸ்தானின் ஐந்தாவது தலைமை நீதிபதி
 • டாக்டர் ஓசைர் கவாஜா, விண்வெளி விஞ்ஞானி, அறிஞர், சனியின் வாழ்க்கையின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. [4] [5]

குறிப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிராபாத்&oldid=3570472" இருந்து மீள்விக்கப்பட்டது