ஆதிப் அசுலாம்
ஆதிப் அசுலாம் TI | |
---|---|
Aslam at an event for Badlapur in 2015 | |
தாய்மொழியில் பெயர் | عاطف اسلم |
பிறப்பு | 12 மார்ச்சு 1983 வசிராபாத், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சாரா பர்வானா |
பிள்ளைகள் | 3 |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
aadeez |
ஆதிப் அசுலாம் (Atif Aslam), பிறப்பு 12 மார்ச் 1983) ஓர் பாக்கித்தானைச் சேர்ந்த பின்னணிப் பாடகரும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் நடிகரும் ஆவார். இவர் பாக்கித்தான் மற்றும் இந்தியா இரண்டிலும் பல பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் இவரது தனிப்பட்ட குரல் நுட்பத்திற்காக அறியப்பட்டவர். [1] [2]
ஆதிப் அசுலாம் முக்கியமாக உருது மொழியில் பாடுகிறார். ஆனால் இந்தி, பஞ்சாபி, வங்காளம் மற்றும் பஷ்தூ மொழிகளிலும் பாடியுள்ளார். [3] 2008 ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசாங்கத்தின் நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌரவ விருதான தம்கா-இ-இம்தியாஸ் கௌரவத்தைப் பெற்றார். இவர் பல லக்ஸ் ஸ்டைல் விருதுகளைப் பெற்றவர். [4] 2011 இல் போல் என்ற உருது சமூக நாடகத் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டில், பாக்கித்தானில் சிறந்த பாடகருக்கான பரிந்துரைக்குப் பிறகு , துபாய் வாக் ஆஃப் ஃபேமில் இவருக்கு நட்சத்திரத் தகுதி வழங்கப்பட்டது. [5] [6] [7] டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் இதழின் 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பெற்றார். [8] [9] இவர் தனது ரசிகர்களால் "ஆதீஸ்" என்று அழைக்கப்படுகிறார். [10]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஆதிப் அசுலாம் 12 மார்ச் 1983 அன்று, [11] [12] [13] பாக்கித்தானின் வசிராபாத்தில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். 1991 வரை இலாகூரில் உள்ள கிம்பர்லி ஹால் பள்ளிக்குச் சென்றார். பின்னர் இராவல்பிண்டிக்குச் சென்று செயின்ட் பால்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1995 இல், இலாகூர் திரும்பினார். அங்கு இவர் ஒரு பிரதேச பொதுப் பள்ளி மற்றும் கல்லூரியின் கிளையில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1999 முதல் 2001 வரை தனது உயர்க் கல்வியை முடித்தார். பின்னர்,பஞ்சாப் கணினி அறிவியல் மையத்திலிருந்து கணினியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். [14] [15] ஒரு நேர்காணலில், அசுலாம் அந்த நேரத்தில் தான் ஒரு பாடகராக மாற வேண்டும் என நினைத்ததாக கூறினார்.
தொழில்
[தொகு]2004–2008
[தொகு]அசுலாம் ஜல் என்ற இசைக்குழுவின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். அதிலிருந்து பிரிந்த பிறகு, ஜல் பாரி என்ற தனது முதல் இசைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டார். இது உடனடி வெற்றி பெற்றது. [16] [17]
இவரது மேரி கஹானி என்ற இரண்டாவது இசைத் தொகுப்பு 7வது லக்ஸ் ஸ்டைல் விருதுகளில் "சிறந்த இசைத் தொகுப்பு" பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. தொகுப்பின் பாடல் "2009 இல் எம்டிவி இசை விருதுகளில்" "சிறந்த ராக் பாடல்" பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
2008 இல், இவர் பெஹ்லி நாசர் மெய்ன் என்ற மூன்று பதிப்புகளைப் பதிவு செய்தார். இது பாலிவுட்டின் நுழைவிற்கு வித்திட்டது. மேலும் இவருக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி விருதையும் பெற்றுத்தந்தது. [18] [19]
2009 - 2015: இந்திய/பாக்கித்தான் திரைப்பட அறிமுகம்
[தொகு]2009 ஆம் ஆண்டு வெளியான அஜப் பிரேம் கி கசாப் கஹானி திரைப்படத்தில், இவர் " து ஜானே நா " மற்றும் " தேரா ஹோனே லகா ஹூன் " ஆகிய இரண்டு பாடல்களின் மறுபதிப்பு பாடல்களை பாடினார். இது இவருக்கு பல பரிந்துரைகளைப் பெற்றது. [20] [21] [22]
2011 இல், இவர் "லே ஜா து முஜே" என்ற பாடலைப் பாடினார். அதே ஆண்டில், பாக்கித்தான் திரைப்படமான போல் படத்திற்காக " ஹோனா தா பியார் " மற்றும் "கஹோ ஆஜ் போல் தோ" என்ற இரண்டு பாடல்களை ஹதிகா கியானியுடன் பாடினார். [23] [24]
இவர் 16வது லக்ஸ் ஸ்டைல் விருதுகளில் பாக்கித்தான் நாட்டுப்பண் மற்றும் "உஸ் ரஹ் பர்" ஆகியவற்றைப் பாடினார். [25] [26]
நடிப்பு வாழ்க்கை
[தொகு]அசுலாம், 2011 ஆம் ஆண்டு பாக்கித்தான் திரைப்படமான போல் மூலம் பாக்கித்தானிய நடிகை மஹிரா கானுடன் இணைந்து நடிகராக அறிமுகமானார். [27] ஜனவரி 2022 இல் அம் தொலைக்காட்சியில் வெளியான தொடரான சங்-இ-மா மூலம் தொலைக்காட்சியிலும்அறிமுகமானார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]ஆதிப் 29 மார்ச் 2013 அன்று இலாகூரில் கல்வியாளர் சாரா பர்வானா என்பவரை மணந்தார் [28] [29] [30] இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர் . [31]
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Music knows no boundaries: Atif Aslam". Hindustan Times. 12 February 2010. http://www.hindustantimes.com/Music-knows-no-boundaries-Atif-Aslam/Article1-507678.aspx.
- ↑ "So you think you can act?". The Express Tribune. 17 May 2010. http://tribune.com.pk/story/13896/so-you-think-you-can-act/.
- ↑ Sabeeh, Maheen. "Atif Aslam is touring the United Kingdom, confirms the pop legend" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 May 2020.
- ↑ Sameen Hassan. "Arjit and Ankit are good but not good enough to replace me: Atif Aslam". https://tribune.com.pk/story/857711/arjit-and-ankit-are-good-but-not-good-enough-to-replace-me-atif-aslam/.
- ↑ Tribune.com.pk. "Atif Aslam gets his own Dubai star at the new walk of fame" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
- ↑ Light, David. "Dubai Stars open; Sonam Kapoor, Atif Aslam, Balqees and more honoured". பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
- ↑ "Dubai Walk of Fame: everyone who has been awarded a Dubai Star so far" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
- ↑ Team, Cutacut Editorial. "Atif Aslam, Mahira Khan, Aiman Khan amongst Forbes Asia's 100 Digital Stars". பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
- ↑ Watson, Rana Wehbe. "Forbes Asia's 100 Digital Stars". பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
- ↑ ((Staff writers)). "Up in the sky with Atif Aslam". https://www.weeklyblitz.net/entertainment/up-in-the-sky-with-atif-aslam/.
- ↑ "Atif Aslam may unveil new song on his birthday" (in ஆங்கிலம்). 23 February 2015. பார்க்கப்பட்ட நாள் 17 August 2020.
- ↑ "Latest News, India News, India-China Border, Coronavirus Latest News, Live Breaking News" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2020.
- ↑ "Atif Aslam recently released a new single 'Yohi' on his birthday" (in ஆங்கிலம்). 13 March 2017. பார்க்கப்பட்ட நாள் 17 August 2020.
- ↑ "Atif Aslam Great Pakistani Pop Singer". பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
- ↑ "Atif Aslam Biography". பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.
- ↑ "Atif's magic". ecentral.my. 30 October 2012.
- ↑ "Atif Aslam: Music for my ears". 2 June 2012.
- ↑ Tips Official. "Pehli Nazar Mein – Race – Saif Ali Khan, Katrina Kaif, Bipasha Basu & Akshaye Khanna – Atif Aslam".
- ↑ "Music Hits 2000–2009 (Figures in Units)".
- ↑ "Tu Jaane Na".
- ↑ "Filmfare Awards 2010 Nominations – 55th Filmfare Award Nominations List".
- ↑ Ahmad, Onusha. "Atif Aslam Top 15 Songs of All Time".
- ↑ Tips Official (14 September 2011). "Kaho Aaj Bol Do – Bol – Atif Aslam & Hadiqa Kiani – Atif Aslam – Ayub Khawar". பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.
- ↑ Tips Official (26 May 2011). "Hona Tha Pyar – Bol – Atif Aslam & Mahira Khan – Atif Aslam & Hadiqa Kiani". பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.
- ↑ Rahul Aijaz (21 April 2017). "LSA 2017: Did HSY deliver under pressure?". தி எக்சுபிரசு திரிப்யூன். https://tribune.com.pk/story/1389748/lsa-2017-hsy-deliver-pressure/.
- ↑ Eesha Omer (22 April 2017). "Atif Aslam sings a heart-melting tribute to Junaid Jamshed at LSA 2017". The Daily Pakistan. https://en.dailypakistan.com.pk/lifestyle/atif-aslam-sings-a-heart-melting-tribute-to-junaid-jamshed-at-lsa-2017-watch-video/.
- ↑ "Atif Aslam debut in Bol". mmail.com.my. 22 October 2012.
- ↑ "Singer Atif Aslam welcomes second baby with wife Sara Bharwana". 23 December 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
- ↑ "Pictures from Pakistani singer Atif Aslam's wedding and reception". 3 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
- ↑ "Atif Aslam hitched". http://www.dawn.com/news/800873/atif-aslam-hitched.
- ↑ "Atif Aslam welcomes baby girl, names her Halima; here's what it means. See pic". 2023-03-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.