லெபிசுமா
லெபிசுமா புதைப்படிவ காலம்: | |
---|---|
வெள்ளிமீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைஜென்டோமா
|
குடும்பம்: | லெபிசுமாடிடே
|
பேரினம்: | லெபிசுமா
|
சிற்றினங்கள் | |
|
லெபிசுமா (Lepisma) என்பது சைஜென்டோமா வரிசையில் லெபிசுமாடிடே குடும்பத்தினைச் சார்ந்த பழமையான பூச்சி பேரினமாகும்.
லெபிசுமா (Lepisma) பேரினத்தின் மிகவும் பரிச்சயமான சிற்றினம் இராமபாணப் பூச்சி (லெ. சாக்கரினம்) ஆகும். இது ஈரமான வாழிடங்களை விரும்பும். அனைத்து பகுதிகளிலும் காணப்படும் சிற்றினமாகும். இவை பொதுவாக மனித வாழ்விடங்களில் காணப்படும் கீறல்கள் மற்றும் பிளவுகளுக்கிடையே மறைந்து வாழ்கிறது. குறிப்பிட்ட சூழலில் இவை வீட்டுப் பூச்சிகளாக மாறுகிறது. சைஜென்டோமா பூச்சிகளின் பொதுவான பெயராக வெள்ளிமீன் என உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்கா பூச்சியியல் சமூகம் வெள்ளி பூச்சி என்னும் சொல்லை முற்றிலும் லெபிசுமா சாக்கரினம் எனும் சிற்றினத்திற்குப் பயன்படுத்த வரையறுக்கின்றது.[2]
பெயரிடல்
[தொகு]பெரும்பாலான ஆய்வாளர்கள் வரலாற்று ரீதியாக லெபிசுமாவினை பெண்பால் என்று கருதுகின்றனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் விலங்கியல் பெயரிடலுக்கான பன்னாட்டு ஆணையம் லெபிசுமாவின் பாலினம் குறித்த நடுநிலையானது என்று முறையான முடிவினை (ICZN கருத்து 2427) வெளியிட்டது. இதன் மூலம் நன்கு அறியப்பட்ட சிற்றின பெயர்களின் எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது.[3]
சிற்றினங்கள்
[தொகு]லெபிசுமா பேரினத்தின் கீழ் கீழ்க்கண்ட சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[4]
- லெபிசுமா அல்போமாகுலேடம்[1]
- லெபிசுமா பேடிகம்[1]
- லெபிசுமா பாக்டானோவி[1]
- லெபிசுமா குளோரோசோமா[1]
- லெபிசுமா தேவதாசி[1]
- லெபிசுமா எலிகன்சு[1]
- லெபிசுமா இண்டிகம்[1]
- லெபிசுமா இண்டர்மீடியம்[1]
- லெபிசுமா லுகேசி[1]
- லெபிசுமா புளுசெரி[1]
- லெபிசுமா சக்காரினம்[1] - வெள்ளிமீன்
- லெபிசுமா செசோதோ[1]
- லெபிசுமா சைமுலேட்ரிக்சு[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 Lepisma- IRMNG
- ↑ Phillips, Eleanor F.; Gillett-Kaufman, Jennifer L. (2018). "Silverfish - Lepisma saccharina". Featured Creatures - Entomology and Nematology Department, University of Florida. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
- ↑ ICZN (2018) Opinion 2427 (Case 3704) – Lepisma Linnaeus, 1758 (Insecta, Zygentoma, Lepismatidae): Direction 71 (1957) reversed. The Bulletin of Zoological Nomenclature, 75(1):290-294
- ↑ https://eol.org/pages/102208