இராமபாணப் பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமபாணப் பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஜிகெண்டோமா
குடும்பம்:
லெபிஸ்மாடிடே
பேரினம்:
லெப்பிசுமா
இனம்:
லெ. சக்காரினம்
இருசொற் பெயரீடு
லெப்பிசுமா சக்காரினம்
லின்னேயசு, 1758

இராமபாணப் பூச்சி (Silver Fish) என்பது சிறிய தட்டையான உடலுடைய, இறக்கையற்ற பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். இந்தவகைப் பூச்சிகள் சைசினோட்டா வரிசையினைச் சார்ந்தவையாகும்.[1] இந்த வகைப் பூச்சிகள் உடல் வெண்மையான, வெள்ளி போன்ற பளபளக்கும் செதில்களால் மூடப்பட்டிருப்பதாலும், விரைவாக இடம் பெயர்ந்து செல்வதாலும் ,இது வெள்ளிமீன் என்று அழைக்கப்படுகிறது.[2] பூச்சி வளர்ந்தததும் சாம்பல் நிறமாகும். இரவாடி வகையினைச் சார்ந்த இந்த பூச்சிகள், ஒளிபடாத இடங்களில் ஒளிந்து கொண்டு சுவடிகள், புத்தகம் மற்றும் துணியில் உள்ள மாவுப் பொருளை மென்று தின்று சேதமாக்க துளைத்து விடுகின்றன.[3] இதனால் இவற்றை எழுத்தாணி பூச்சி என்றும் குறிப்பிடுவர். இவை இரவாடுதல் இயல்புடையவை, மேலும் இருண்ட குளிர்ச்சியான இடங்களில் காணப்படுகின்றன. ஏறத்தாழ 1 செ.மீ. உடல் நீளமுடையவை. இவற்றின் உணர் கொம்புகளும், வால் நீட்சிகளும் உடலை விட அளவில் குறைந்தவை. ஆண், பெண் பூச்சிகள் அளவில் ஒத்தவை. நாப்தலீன் உருண்டைகளை போட்டு வைத்து இந்த பூச்சியை விரட்டலாம்.[4]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான க. நா. சு. 1940 களில் புத்தகங்கள் பற்றி மதிப்புரையும் தகவல்களும் தருவதற்காக 'ராமபாணம்' என்றொரு சிறு வெளியீட்டைப் பிரசுரித்தார். பின்னர் சூறாவளி பத்திரிகையில் இவர் எழுதிய புத்தக மதிப்புரைப் பகுதியின் தலைப்பாக 'ராமபாணம்' என்ற பெயரையே பயன்படுத்தி வந்தார். பின்னர், புத்தக உலகச் செய்திகளையும் அபிப்பிராயங்களையும் கூறும் பகுதியின் பெயராக அதை வைத்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sturm, H (2009). "Zygentoma". Encyclopedia of Insects (2nd edn.).. Academic Press / Elsevier. பக். 1070–2. 
  2. Phillips, Eleanor F.; Gillett-Kaufman, Jennifer L. (2018). "Silverfish - Lepisma saccharina". Featured Creatures - Entomology and Nematology Department, University of Florida. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  3. Barnard, Peter (2011). The Royal Entomological Society Book of British Insects.. John Wiley & Sons, Inc.. 
  4. பி.வசந்தராஜ் டேவிட், தீங்கு மற்றும் பயனுள்ள பூச்சிகள்
  5. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமபாணப்_பூச்சி&oldid=3325715" இலிருந்து மீள்விக்கப்பட்டது