உள்ளடக்கத்துக்குச் செல்

ருத்ரா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுவினி அல்லது அசுவினி நம்பியார் என்றும் அழைக்கப்படும் ருத்ரா, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்.[1] இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ருத்ரா. இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த கெளரவர் என்ற மலையாளத் திரைப்படத்தில் சிறீதேவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். மணிச்சித்ரதாழ் (1993), கிழக்குச் சீமையிலே (1993), துருவம் (1993), பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு (1994), குடும்பக் கோடதி (1996) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ருத்ரா
பிறப்புஅசுவினி நம்பியார்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஆர்.வி. அசுவினி
பணிநடிகை,
நடனக் கலைஞர்

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அசுவினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது, ஒரு மலையாளப் பத்திரிக்கைக்காக, தனது வகுப்பு தோழர்களுடன் ஆடை விளம்பரங்களில் தோன்றினார். பத்திரிகையைப் விளம்பத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பளித்தார். திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் சென்ற இவர் தற்போது சிங்கப்பூரில் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

தொழில்

[தொகு]

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் ருத்ரா தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.[1] இவர் சுமார் 16 மலையாளப் திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிச்சித்ரதாழ் (1993) திரைப்படத்தில் அல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹிட்லர் (1997) என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவியின் சகோதரியாக நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்இயக்குநர்மொழிகதாபாத்திரம்குறிப்பு
1991புது நெல்லு புது நாத்துபாரதிராஜா தமிழ் மரிக்கொழுந்து
போஸ்ட் பாக்ஸ் நம்பர்:27 பி.அணில் மலையாளம் விஜி [2]
1992தூரத்து சொந்தம் கே. எஸ். அதியமான் தமிழ் தனலெட்சுமி
ஆயுசு காலம் கமல் மலையாளம் சுஜாதா
கௌரவர் ஜோஷி மலையாளம் சிறீதேவி
1993 மணிச்சித்ரதாழ் ஃபாசில் மலையாளம் அல்லி
கிழக்குச் சீமையிலே பாரதிராஜா தமிழ் பேச்சி
பட்டர்ஃப்ளை ராஜீவ் அஞ்சல் மலையாளம் மாயாதாசு
துருவம் ஜோஷி மலையாளம் மாயா
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு விஜி தம்பி மலையாளம் வசுந்தரா
1994

பவித்ரம்

டி.கே.ராஜீவ்குமார் மலையாளம் ரீத்தா
புதுப்பட்டி பொன்னுத்தாயி என். கே. விசுவநாதன் தமிழ் ருக்கு
முதல் பயணம் ஏ.கே.ரவிவர்மா மலையாளம் ராதா
1995

சசினாஸ்

தேஜூஸ் பெருமான் மலையாளம் ஆனந்தி
ஆண்டி மெளலி தெலுங்கு கனி
1996மலையாள மாசம் சிங்கம் ஒன்னு நிஸ்ஸார் மலையாளம் ரேணு
குடும்ப கோடதி விஜி தம்பி மலையாளம் பௌர்ணமி நாயர்
1997ராமன் அப்துல்லா பாலு மகேந்திரா தமிழ் ஆயிசா
பெரியதம்பி சித்ரா லெட்சுமணன் தமிழ் மீனா
ஹிட்லர் முத்யாலா சுப்பையா தெலுங்கு சாரதா
பெல்லி சேசுகுண்டாம் முத்யாலா சுப்பையா தெலுங்கு ராதிகா
நசர் ராஜேஷ் பட் ஹிந்தி பிங்கி
1999

கள்ளழகர்

பாரதி தமிழ் சைரா
போலீஸ் தெலுங்கு சுஜாதா
2000என்னவளே ஜே. சுரேஷ் தமிழ் சீதா
2007ஓரம் போ புஷ்கர்-காயத்ரி தமிழ் பிஜிலியின் மனைவி
2021எழுத்தாளர் அலமேலு மங்கை ஆர்.சிவா தமிழ் அலமேலு மங்கை
ஏஞ்சல் காலனி தமிழ் சாந்தாராய்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]

தமிழ்

[தொகு]
ஆண்டுதொடர்கதாபாத்திரம்தொலைக்காட்சிகுறிப்பு
சந்திரிகையின் கதை முத்தம்மா டெலிஃபில்ம்

செல்லம்

இயக்குநர்

ட்ரீம்ஸ்

1996

சின்ன சின்ன ஆசை: நிறங்கள்

காஞ்சனா சன் தொலைக்காட்சி
சங்கமம் டிவி12
2001

டேக் இட் ஈசி வாழ்க்கை

துர்கா சன் தொலைக்காட்சி
நிம்மதி உங்கள் சாய்ஸ் நிர்மலா சன் தொலைக்காட்சி
2002

மீரா

மீரா தூர்தர்சன்
2006ராஜ ராஜேஸ்வரி மகேசுவரி சன் தொலைக்காட்சி
2008கெட்டிமேளம் லெட்சுமி ஜெயா தொலைக்காட்சி
2014நினைவுகள் மீடியாகார்ப் வசந்தம்
2017அத்தியாயம் நந்தினி வசந்தம் தொலைக்காட்சி
மசாலா விசாலாட்சி வசந்தம் தொலைக்காட்சி
முதல் வணக்கம் மாயா வசந்தம் தொலைக்காட்சி
2019மகராசி கோமதி சன் தொலைக்காட்சி
தர்பார் வசந்தம் தொலைக்காட்சி
மூன்றாவது கண் வசந்தம் தொலைக்காட்சி
128 சர்க்கிள் ராணி மீடியாகார்ப் சேனல் 5
2020உயிரே சாரு சீ தமிழ்
லிங்கம் ஸ்டோர்ஸ் வசந்தம் தொலைக்காட்சி
புகைப்படம் மலர்விழி வசந்த் தொலைக்காட்சி
காலம் கங்கா வசந்தம் தொலைக்காட்சி
சுவாசமே கவுன்சிலர் வசந்தம் தொலைக்காட்சி
2021நாம் வசந்தம் தொலைக்காட்சி
எனக்காக மலர் வசந்தம் தொலைக்காட்சி
இரண்டு டாக்டர் வசுந்தரா வசந்தம் தொலைக்காட்சி
மன்மதன் அம்பு ரூபா வசந்தம் தொலைக்காட்சி
முகவரி பானுமதி வசந்தம் தொலைக்காட்சி
பட்டாசு ப்ரடக்ஸன் ஹரிணி வசந்தம் தொலைக்காட்சி
2022மார்ஸ் போயி சேர்ந்துட்டோம் வசந்தம் தொலைக்காட்சி
வசந்தம் முதல் பார்வை: வீழ்வேன் என்று நினைத்தாய் ராஜி சுபாஷ் வசந்தம் தொலைக்காட்சி
128 சர்க்கஸில் சீசன் 2 ராணி வசந்தம் தொலைக்காட்சி
மையம் காயத்திரி வசந்தம் தொலைக்காட்சி
கற்றது காதல் ஹன்னா வசந்தம் தொலைக்காட்சி
2023ஆத்மான் சைலஜா மீடிகார்ப்

மலையாளம்

[தொகு]
ஆண்டுதொடர்கதாபாத்திரம்தொலைக்காட்சிகுறிப்பு
2005 மைதிலி ஆசியாநெட்

தெலுங்கு

[தொகு]
ஆண்டுதொடர்கதாபாத்திரம்தொலைக்காட்சிகுறிப்பு
அம்மகானிகி ஆந்திர பிரதேஷ் [3]
அந்தர்நேத்ரா
களங்கிதா
தொலிரோஜிலு
1998அந்தரங்காளு பத்மினி ஈ தொலைக்காட்சி
2001அக்கா செல்லலு ஈ தொலைக்காட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "ഭർത്താവും മകളും ആവശ്യപ്പെട്ടത് ഒരേ കാര്യം! മണിച്ചിത്രത്താഴിലെ അല്ലിയുടെ ഇപ്പോഴത്തെ വിശേഷങ്ങൾ ഇങ്ങനെ". Samayam Malayalam (in மலையாளம்). Retrieved 2024-06-28.
  2. "Post Box No. 27", Google Reviews (in ஆங்கிலம்), 2024-06-28, retrieved 2024-06-28
  3. "R. Narayana Murthy's 'Ammakaniki Andhra Pradesh'", 123telugu (in ஆங்கிலம்), 2024-07-01, retrieved 2024-07-01
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்ரா_(நடிகை)&oldid=4394763" இலிருந்து மீள்விக்கப்பட்டது