ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஷி
பிறப்பு18 சூலை 1952 (1952-07-18) (அகவை 71)
வர்க்கலை, திருவனந்தபுரம் மாவட்டம்,கேரள மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1978 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிந்து ஜோசி
பிள்ளைகள்2

ஜோஷி ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், வர்க்கலை எனும் ஊரில் பிறந்தார். முக்கியமாக இவர் மலையாள சினிமாவில் பணியாற்றியவர்.[1]

இவர் 1978 ம் ஆண்டு வெளியான டைகர் சலீம் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியதின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் 80 திற்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் சில இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

ஆரம்பகாலத்தில், இவரது திரைத்துறை வாழ்க்கையில், ராஜேஷ் கன்னா மற்றும் தர்மேந்திரா நடித்து 1984 ல் வெளியான தர்ம் அவ்ர் கானூன் எனும் திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இவர் தேசிய அளவில் புகழ்பெற தொடங்கினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜோஷி சிந்து என்பவரை மணந்தார். தம்பதியருக்கு அபிலாஷ் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் ஆவர், இதில் மகள் ஐஸ்வர்யா ஜூலை 2011 இல் சென்னையில் நடந்த ஓர் கார் விபத்தில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷி&oldid=3741811" இருந்து மீள்விக்கப்பட்டது