கமல் (இயக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமல்
பிறப்புகமாலுதீன் மொகம்மது மஜீத்
28 நவம்பர் 1957 (1957-11-28) (அகவை 64)
திருச்சூர், கேரளா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1981 முதல்
வாழ்க்கைத்
துணை
சபுராபி
பிள்ளைகள்ஜனுஸ், ஹன்னா

கமல் ஒரு மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது இயற்பெயர் கமாலுதீன் மொகம்மது மஜீத் (Kamaluddin Mohammed Majeed, பிறப்பு: நவம்பர் 28, 1957) ஆகும். இவர் கமல் எனும் பெயராலேயே பரவலாக அறியப்படுகிறார். இவர் கேரளாவின் திருச்சூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் த்ராசம் எனும் திரைப்படத்தில் இணை இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1][2] 1986 ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான மிழிநீர்ப் பூக்கள் (Mizhineer Pookkal) என்பதை இயக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் இந்துஸ்தானி மற்றும் கஜஸ் இசை பயன்படுத்தப்பட்டிருக்கும்.[3] இவர் கருத்த பஷிகள், பெருமழக்காலம் மற்றும் செல்லுலாய்ட் ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழில் பிரியாத வரம் வேண்டும் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thraasam (1981)". malayalachalachithram.com. 2007-05-12. 2013-02-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.imdb.com/name/nm0436382/bio
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-05-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_(இயக்குனர்)&oldid=3238312" இருந்து மீள்விக்கப்பட்டது