கள்ளழகர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கள்ளழகர்
இயக்கம்பாரதி
தயாரிப்புஹென்றி
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
லைலா
மணிவண்ணன்
நாசர்
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புபீட்டர் பாப்பையா
வெளியீடுபெப்ரவரி 6, 1999 (1999-02-06)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விஜயகாந்த், லைலா நடிப்பில் இயக்குநர் பாரதி இயக்கத்தில் 1999 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கள்ளழகர். நாசர்,சோனு சூத் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் துணை கதாபாத்திரம் ஏற்றிருக்க, தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். 6 பிப்ரவரி 1999 ல் வெளிவந்த இத்திரைப்படம் சராசரி விமர்சனத்தைப் பெற்றது.[1][2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

லைலா மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் பொழுது, கள்ளழகரில் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனாலும் வி.ஐ.பி படத்திலிருந்து நிராகரிக்கப்பட்டது பிரபலமானது.[3] அஜித்குமார் நடித்த உன்னை தேடி படத்திலிருந்தும் நீக்கப்பட்ட பொழுது கள்ளழகர் படம் முதல் படமாக வெளியானது.[4] கேரள மாநிலம் திரிசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட அப்பு என்ற யானை, திரிச்சூர் பூரம் விழாவில் பங்கேற்கும் யானைகளை பராமரிக்கும் இடமான பரமேக்காவு கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டது.[5]

வெளியிடு[தொகு]

இத்திரைப்படம் முதலில் தைப்பொங்கல் நாளான 14 ஜனவரி அன்று வெளியாக திட்டமிட்டு தணிக்கைத் துறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தாமதமானது. இந்திய தணிக்கை துறை இந்தத் திரைப்படத்தை நிராகரித்தது, ஏனென்றால் மதச் சண்டை உண்டாக்கும் சாதகம் இருப்பதாக -ஒரு குறிப்பிட்ட காட்சியில் சில முஸ்லீம் தீவிரவாதிகள் இந்து மத போதகர்களாக வேடமிட்டு திருவிழாக்களில் பங்கேற்பது போல் வருவதால் நிராகரித்தது. பின் படகுழுவினரும் அதை ஏற்றுக்கொண்டதால் ஒரு பகுதி நீக்கபட்டது.[3] இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இதன் தயாரிப்பாளர் ஹென்றி விஜயகாந்தின் அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமிட்டார். லைலாவும் இத்திரைப்படம் முன்னணி கதாநாயகியாக வழிவகுத்து 2000ம் ஆண்டு வெளிவந்த முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பளித்தது.[3] இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் மதுரையில் ஒவ்வொரு ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போதும் நகரம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kallazhagar
  2. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/F5A774BEE7C634D065256941003DC8CB
  3. 3.0 3.1 3.2 http://chandrag.tripod.com/feb99/
  4. http://chandrag.tripod.com/nov98/
  5. http://www.rediff.com/movies/1998/nov/10ss.htm
  6. https://www.vikatan.com/news/spirituality/155442-music-director-deva-and-vairamuthu-talks-about-the-famous-alagar-song.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளழகர்_(திரைப்படம்)&oldid=2704250" இருந்து மீள்விக்கப்பட்டது