ரியான்ஏர் வானூர்தி 4978

ஆள்கூறுகள்: 53°52′57″N 28°01′57″E / 53.88250°N 28.03250°E / 53.88250; 28.03250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரியான்ஏர் வானூர்தி 4978
Ryanair Flight 4978
சம்பவத்தில் தொடர்புடைய வானூர்தியின் (SP-RSM) 2019ல் எடுக்கப்பட்ட புகைப்படம்
நிகழ்வு சுருக்கம்
நாள்மே 23, 2021 (2021-05-23)
சுருக்கம்பொய்யான பாதுகாப்பு எச்சரிக்கைக்குப் பிறகு விமானம் மோசடியாக திருப்பி விடப்படல்
இடம்மின்சிக் தேசிய வானூர்தி நிலையம்
53°52′57″N 28°01′57″E / 53.88250°N 28.03250°E / 53.88250; 28.03250
பயணிகள்171
ஊழியர்6
வானூர்தி வகைபோயிங் 737-8AS அடுத்த தலைமுறை
இயக்கம்ரியான்ஏர் சன்
வானூர்தி பதிவுSP-RSM
பறப்பு புறப்பாடுஏதென்ஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சேருமிடம்வில்னியஸ் வானூர்தி நிலையம்

ரியான்ஏர் விமானம் 4978 என்பது 23 மே 2021 அன்று ஒரு சர்வதேச திட்டமிடப்பட்ட பயணம் மேற்கொண்ட பயணிகள் விமானமாகும். இது பெலருசியா வான்வெளியில் இருந்தபோதும், பெலருசிய அரசாங்கத்தால் மின்சிக் தேசிய வானூர்தி நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு விமானத்தில் பயணம் செய்த, எதிர்க்கட்சி ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிச் மற்றும் அவரது காதலி சோபியா சபேகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கிரேக்கத்தின் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லித்துவேனியாவின் வில்னியசு விமான நிலையத்திற்கு பயணித்த விமானம் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் உத்தரவின் பேரில் வெடிகுண்டு மிரட்டல் என்ற பாசாங்கின் பேரில் பெலருசிய போர் விமானம் ஒன்றின் மூலம் தடுத்து, மின்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டித்துள்ளது.

விமானம் பயணம்[தொகு]

Map
விமானத்தின் பயணப்பாதையும் மாற்றப்பட்ட பயணமும்.
பெலகுசியாவின் மிக்-29 இராணுவ விமானம், விமான இடைமறிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது

23 மே 2021 அன்று, ரியான்ஏர் வானூர்தி 4978 ( ஏதென்ஸ் - வில்னியஸ்) தென்வில்னியசிலிருந்து 83 கி.மீ. (45 விமானப் பயணத்தூரம்) தூரத்திலும் மேற்கு மின்சிக்கிலிருந்து 170 கி.மீ. தூரத்திலும், (90 விமான பயணத்தூரத்திலும்), பெலருசியன் வான் வெளியில் இருந்தபோது தவறான வெடிகுண்டு அச்சுறுத்தலுக்குப் பின்னர் மின்சிக் தேசிய வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.[1][2][3] விமான நிறுவனத்தின் கூற்றுப்படி, விமானிகளுக்கு பெலருசிய அதிகாரிகள் "விமானத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்" இருப்பதாக தெரிவித்து விமானத்தை மின்சிக்கில் தரையிறக்கச் சொன்னார்கள் என்பதாகும்.[4][5] இந்த விமானத்தில் 171 பயணிகள் அப்போது பயணித்துக்கொண்டிருந்தனர்.[5] மின்சிகில், பெலருசிய அரசாங்கத்தால் பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பெலருசிய எதிர்க்கட்சி ஆர்வலர் ரோமன் புரோட்டாசெவிச் விமானத்திலிருந்து கைது செய்யப்பட்டார்[1][6] அவரது காதலி சோபியா சபேகாவும் பெலருசிய அதிகாரிகளால் விமானத்திலிருந்து அகற்றப்பட்டார்.[7] விமானம் வில்னியசுக்கு அருகில் வான்வெளியில் பயணித்தபோதிலும் பெலருசிய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தனது பத்திரிகை சேவையின்படி, விமானத்தை மின்சுக்கு திருப்பி விடுமாறு தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டு, பெலருசிய விமானப்படைக்குச் சொந்தமான மிக் -29 போர் விமானத்தை அனுப்பினார்.[1][8][9] விமானிகள் மின்சிகில் தரையிறங்க அனுமதிக்குமாறு கேட்டதாக பெலருசிய அரசாங்க செய்தி நிறுவனம் (பெல்ட்) தெரிவித்தது.[10][11] ரியான்ஏர்மற்றும் பெலருசிய சட்ட அமலாக்க பிரிவும் விமானத்திலிருந்து எவ்வித வெடிகுண்டுகளை கண்டெடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.[4][5]

புரோட்டசெவிச் மற்றும் அவரது காதலி தவிர, பெலாரஷ்யன் கேஜிபி முகவர்கள் என்று கருதப்படும் நான்கு பேர் விமானத்துடன் லித்துவேனியாவுக்கு பயணத்தினைத் தொடரவில்லை.[12][13] இந்த சம்பவம் குறித்து பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) விசாரிக்க பெலருசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வியட்லானா சிகானஸ்காயா அழைப்பு விடுத்தார்.[14] அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முந்தைய ஆண்டுகளில் பங்களிப்பிற்காக "பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட தனிநபர்கள்" பட்டியலில் புரோட்டசெவிச் வைக்கப்பட்டிருந்தார். பெலருசில் புரோட்டசெவிச் "மரண தண்டனையை எதிர்கொள்கிறார்" என்று சிகானுஸ்காயா கூறினார்.[15] விமானத்தை விட்டு வெளியேறும்போது, ​​புரோட்டசெவிச் மற்றொரு பயணியிடம் "மரண தண்டனை இங்கே எனக்கு காத்திருக்கிறது" என்று கூறினார்.[16] புரோட்டசெவிச் பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக மற்றொரு ஆதாரம் தெரிவிக்கின்றது.[7]

சிகானஸ்காயாவுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, புரோட்டாசெவிக் ஏதென்ஸ் விமான நிலையத்தில் கண்காணிப்பில் இருப்பதைக் கவனித்துள்ளார். தனது செய்திகளில், தனக்கு அடுத்ததாக இருந்த ஒரு நபர் தனது பயண ஆவணங்களைப் புகைப்படம் எடுக்க முயன்றதாகக் கூறினார்.[17] கூடுதலாக, முன்னர் புரோட்டாசெவிச் திருத்திய நெக்ஸ்டா டெலிகிராம் சேனலின் உறுப்பினரான ததேயுஸ் கிக்சன், பெலாரசியன் கேஜிபியின் அதிகாரிகள் விமானத்திலிருந்ததாகவும், அவர்கள் "ரியன்ஏர்” குழுவினருடன் கைவினை வெடி குண்டு விமானத்தில் இருப்பதாகச் சண்டையிட்டுள்ளனர்.[18][3] லிதுவேனியன் விமான நிலைய மாநில நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் லினா பெய்சின், பிரான்சு செய்தி குழுவின் செய்திப்படி "விமானப் பயணி ஒருவருக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இடையே மோதல் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டதாக” மின்சிக் வானூர்தி நிலையத் தகவல் தெரிவித்ததாகக் கூறினார்.[18]

மே 23 அன்று பெலருசு மீதான எப்ஆர் 4978 விமானப் பயணத் பாதை அசாதாரணமானது என்றும்; விமான கதிரலைக் கும்பா மூல தரவுகளின் அடிப்படையில், விமானம் பெலருசுக்கு மேலே இறங்கத் தொடங்கவில்லை என்றும் விமானமானது, வில்னியசில் தரையிறங்குவதற்கான தயாரிப்பிலில் இருந்தது. அசாதாரண பாதையின் படி, விமானத்தின் விமானிகள் விரைவில் லிதுவேனியன் வான்வெளியில் செல்ல அசல் திசையை வைத்திருந்ததையும், ஆனால் பெலருசிய ஜெட் போர் விமானத்தின் குறுக்கீட்டிற்குப் பிறகு திசை திருப்ப வேண்டிய கட்டாயம் விமானிகளுக்கு ஏற்பட்டது..[19][20]

விமானம் மின்ஸ்கில் தரையிரங்கிய ஏழு மணி நேரம் கழித்து புறப்பட அனுமதிக்கப்பட்ட விமானம், வில்னியசை எட்டரை மணி நேரம் தாமதமாக அடைந்தது. வில்னீயசில் தரையிறங்கும் போது பொட்டாசெவிச், சபேகா மற்றும் மூன்று ரஷ்ய குடிமக்கள்[தெளிவுபடுத்துக] விமானத்தில் இல்லை.[21] தண்ணீர், கழிப்பறை வசதி அல்லது தொலைபேசி அழைப்புகள் இல்லாமல் 2.5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக பயணிகள் குறிப்பிட்டனர், அதே நேரத்தில் மின்சிக் விமான நிலையத்தில் 50 முதல் 60 பெலருசிய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.[22]

எதிர்வினைகள்[தொகு]

பெலருசிய அரசாங்க நிலைப்பாடு[தொகு]

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டாய தரையிறக்கம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவினை அமைத்ததாக பெலருசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஐ.சி.ஏ.ஓ மற்றும் ஐ.ஏ.டி.ஏ-க்கு அறிவிப்பதாகவும், விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவதாகவும் கூறியது[23][24]

மே 24, 2021 அன்று, பெலரசு போக்குவரத்து அமைச்சின் விமானத் துறை இயக்குநர் ஆர்ட்டியம் சிகோர்ஸ்கி, மே 23 அன்று மின்சிக் விமான நிலையத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தார். இந்த செய்தியில் "ஹமாஸ் வீரர்கள்" கையெழுத்திட்டிருந்ததாகவும், "காசா பகுதியில் தாக்குதலை நிறுத்தவும்" இஸ்ரேலுக்கு இசுரேலின் ஆதரவை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கோரிக்கைகளை உள்ளடக்கியது எனத் தெரிவித்தார். இந்த கடிதத்தின்படி, வில்னியசு மீது விமானத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தப்பட்டது.[25] ஜெர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் பெலாரஷ்ய விளக்கத்தை "முற்றிலும் நம்பமுடியாதது" என்று தெரிவித்தார்.[26] இந்த சம்பவத்துடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது.[27]

தடைகள்[தொகு]

மே 24 அன்று, பெருசிய வான்வெளியில் லித்துவேனியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் தடை செய்ய லிதுவேனியன் அமைச்சரவை முடிவு செய்தது, இது 00:00 GMT, 25 மே (03:00 EEST) முதல் அமலுக்கு வந்தது.[28] பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு பிரிட்டிஷ் விமான நிறுவனங்கள் பெலருசிய வான்வெளியைத் தவிர்க்க கோருமாறு அறிவுறுத்தினார். இங்கிலாந்து வான்வெளியில் இயங்க பெலவியாவின் அனுமதி இடைநிறுத்தப்பட்டது.[29] உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பெலருசுடான விமான போக்குவரத்தை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.[30]

சாத்தியமான தடைகள்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியம் மே 24 அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் தலைவர்களின் கூட்டத்தை நடத்த உள்ளது. கூட்டத்திற்கு முன், லிதுவேனியன் ஜனாதிபதி கீதனாஸ் நசாடா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெலருசு மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அழைப்பு விடுத்தார். எட்டு நாடுகளின் விமானங்கள் பெலருசுக்குச் செல்லவும் தடை விதிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. மற்றொரு பரிந்துரை பெலருசிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு தரைவழி போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.[31][32] கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை அடிப்படையாகக் கொண்ட விமான நிறுவனங்கள் பெலருசிய வான்வெளி வழியாக பறப்பதைத் தடைசெய்வதற்கும், பெலருசிய விமானங்களை ஐரோப்பிய ஒன்றிய வான்வெளியில் பறப்பதைத் தடை செய்வதற்கும், புதிய சுற்றுத் தடைகளை அமல்படுத்துவதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது..[33]

சர்வதேச[தொகு]

 • விமானத்தின் "வெளிப்படையான கட்டாய தரையிறக்கம்" குறித்து பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. ஐ.சி.ஏ.ஓ சுட்டின்படி கட்டாயமாக விமானத்தினைத் தரையிறக்குவது சிகாகோ உடன்படிக்கையினை மீறுவதாக உள்ளது என்று கூறியது[34]
 • நேட்டோ நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ட்வீட் செய்துள்ளார். இதில் இந்த விமானத்தை தரையிறக்குவது "தீவிரமான மற்றும் ஆபத்தான சம்பவமாகும், இதில் சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது[35]
 • ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த சம்பவத்தை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விவரித்தார், "சர்வதேச விமான போக்குவரத்து விதிகளை மீறுவது விளைவுகளை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.[13]

தேசிய[தொகு]

 • ஆத்திரேலியா ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி மரைஸ் பெய்ன் ஒரு பயணிகள் விமானத்தில் "கட்டாய இராணுவத் தலையீட்டை" கண்டித்து, கைது செய்யப்பட்ட பெலருசிய எதிர்க்கட்சி நபரை "உடனடியாக விடுவிக்க" அழைப்பு விடுத்தார்.[36]
 • பெல்ஜியம் பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ "பெலவியாவை ஐரோப்பிய ஒன்றிய விமான நிலையங்களில் தரையிறக்குவதைத் தடை செய்வது உட்பட" பொருளாதாரத் தடைகளுக்கு வாதிட்டார், மேலும் "ரோமன் புரோட்டசெவிச் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார்[37]
 • கனடா கனடாவின் வெளியுறவு மந்திரி மார்க் கார்னியோ, இந்த சம்பவம் "சிவில் விமானப் பயணத்தில் கடுமையான தலையீடு மற்றும் ஊடக சுதந்திரம் மீதான தெளிவான தாக்குதல்" என்று கூறினார்[38]
 • கிரேக்க நாடு கிரேக்கப் பிரதம மந்திரி கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ், ரியன்ஏர் விமானம் தோன்றிய நாட்டிலிருந்து, விமானத்தைக் கட்டாயமாகத் தரையிறக்குவது ஒரு "அதிர்ச்சியூட்டும் செயல்" என்றும், பெலருசு மீதான அரசியல் அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.[39]
 • அயர்லாந்து குடியரசு ஐரிஷ் தாவோசீச் மைக்கேல் மார்ட்டின் இந்த சம்பவத்தை "அரசால் நட்த்தப்பட்ட கட்டாயச் செயல்" என்றும் "வான் திருட்டு" என்றும் விவரித்தார்[40]
 • லாத்வியா *லாட்வியன் வெளியுறவு மந்திரி எட்கர்ஸ் ரிங்காவிஸ் இந்த சம்பவத்தை "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று விவரித்தார், மேலும் எதிர்வினை "வலுவானதாகவும் பயனுள்ளதாகவும்" இருக்க வேண்டும் என்று கூறினார்.[41] லாட்வியாவின் ஊழியர்களை வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 24 அன்று லாட்வியா பெலரசின் தூதர்களை வெளியேற்றியது.[42]
 • லித்துவேனியா லிதுவேனியன் ஜனாதிபதி கீதனாஸ் நசாடா பெலருசிய அதிகாரிகள் "வெறுக்கத்தக்க நடவடிக்கை" ஒன்றை மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.[41] மேலும் அவர் கூறியதாவது: "பெலருசு ஆட்சியின் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு உடனடியாக பதிலளிக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளை நான் அழைக்கிறேன். இது மீண்டும் நிகழாமல் இருக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".[43] கூடுதலாக, லிதுவேனிய பிரதம மந்திரி இங்க்ரிடா சிமோநைட் வில்னியசு விமான நிலையத்தில் தனது சுருக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார், கட்டாயமாக காணாமல் போனது மற்றும் விமானத்தை கடத்திச் சென்றது தொடர்பான விசாரணைக்கு முந்தைய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.[44]
 • நெதர்லாந்து டச்சு தற்காலிகப் பிரதமர் மார்க் ருட்டே "இது ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் முன்னோடியில்லாதது" எனத் தாக்குதலைக் கண்டித்தார்.[45]
 • போலந்து போலந்து பிரதம மந்திரி மேட்டூஸ் மொராவெக்கி இந்த சம்பவத்தை "தண்டிக்கப்பட முடியாத அரசு பயங்கரவாதத்தின் முன்னோடியில்லாத செயல்" என்று கூறினார்.[41]
 • உருசியா ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா இந்நிகழ்வினை 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவில் பொலிவியா ஜனாதிபதி ஈவோ மோரலெஸின் விமானம் தரையிறக்கப்பட்ட, ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் நிரப்பவோ அல்லது தங்கள் வான்வெளியைப் பயன்படுத்தவோ அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து என்எஸ்ஏ விசில்ப்ளோவர் எட்வர்ட் ஸ்னோவ்டெனை வேட்டையாடியபோது சம்பவத்துடன் ஒப்பிடுட்டு கூறினார்.[46]
 • உக்ரைன் உக்ரைன் மற்றும் பெலருசு இடையே நேரடி விமான சேவையை நிறுத்திவைக்கவும், உக்ரேனிய விமானங்களின் போக்குவரத்திற்காக பெலருசிய வான்வெளியை தவிர்க்கவும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார். பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மே 25 ம் தேதி அசாதாரண அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார்[47]
 • ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இந்த சம்பவம் "உள்நாட்டு விமான போக்குவரத்து மீதான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்" என்று கூறினார்.[48] பிரிட்டிஷ் வெளியுறவுக் குழுவின் தலைவர் டாம் துஜெந்தாட் கூறுகையில், இது ஒரு போர் செயல் அல்ல என்றால் அது நிச்சயமாக போர்க்குணமிக்க செயல்.[32]
 • ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் விமானத்தை தரையிறக்குவது "வெட்கக்கேடான மற்றும் அதிர்ச்சியூட்டும் செயல்" என்று கண்டித்து சர்வதேச விசாரணையை கோரினார்.[49] விமானத்தில் அமெரிக்க குடிமக்கள் இருந்தனர்.[50] அமெரிக்கச் கொடியிடப்பட்ட விமான நிறுவனங்கள் பெலருசிய வான்வெளியில் தொடர்ந்து இயங்குவது பாதுகாப்பானதா என்பதை பிடென் நிர்வாகமும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகமும் மதிப்பீடு செய்து வருவதாக போக்குவரத்துச் செயலாளர் பீட் பட்டிகீக் அறிவித்தார்.[51]

சர்வதேச வழக்கறிஞர்கள்[தொகு]

 • ரியான்ஏர் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ லியரி, இந்த நிகழ்வு "மாநில அனுசரணையான கடத்தல்" என்றும், ரியான்ஏர் சில கேஜிபி முகவர்கள் விமான நிலையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.[7][31]
 • உக்ரேனிய விமான வழக்குரைஞர் ஆண்ட்ரி குக், இராணுவ விமானத்தின் குறுக்கீடு மற்றும் விமானத்தை மிகவும் தொலைதூர விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்புவது ஆகியவை பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று தெரிவித்தார். சிகாகோ உடன்படிக்கை பின் இணைப்பு 2 சிவில் விமானங்களை இராணுவ விமானங்கள் இடைமறிப்பதைக் கடைசி முயற்சியாகக் கருதுகிறது, ஆனால் பெருசிய இராணுவ ஜெட் உடனடியாக புறப்பட்டுள்ளது.[52]
 • ரஷ்ய உயர்நிலை பொருளாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் முனைவர் குளெப் போகுஷ் ஒரு வெடிகுண்டு அச்சுறுத்தலின் நிலை (நாடகமாக்குதல்) மற்றும் பெலருசிய அதிகாரிகளால் விமானத்தை இடைமறிப்பது ஆகியவை குழுவினரையும் பயணிகளையும் பாதிக்கக்கூடும் என்றும் சிகாகோ உடன்படிக்கை மற்றும் 1971 மாண்ட்ரீல் உடன்படிக்கை ஆகிய இரண்டின் அடிப்படையில் இந்த வழக்கின் சட்ட மதிப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் இது ஒரு "மிகவும் ஆபத்தான முன்மாதிரி" என்றும் விவரித்தார்.[53]

விமான நிறுவனங்கள்[தொகு]

ரியான்ஏர் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ லியரி இந்த நிகழ்வு "மாநில அனுசரணையான கடத்தல்" என்றும், ரியான்ஏர் "விமான நிலையத்தில் சில [பெலாரசிய] கேஜிபி முகவர்களும் ஏற்றப்பட்டிருந்தனர்" என்றும் நம்புவதாக தெரிவித்தார்.[7][31] சைப்ரஸில் பதிவுசெய்யப்பட்ட ஏவியா சொல்யூஷன்ஸ் குழுமம் தங்கள் விமான நிறுவனங்கள் இனி பெலாரசிய வான்வெளியைப் பயன்படுத்தாது என்று அறிவித்தன.[54] மே 24 அன்று, பெலருசிய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக ஹங்கேரிய விமான நிறுவனமான விஸ் ஏர் உக்ரைனின் கீவ்லிருந்து எஸ்தோனியாவின் தாலின் நோக்கி பயணித்து.[55] நிலைமை தெளிவாகும் வரை லாட்வியன் விமான நிறுவனமான ஏர்பால்டிக் மே 24 அன்று பெலருசிய வான்வெளியில் பறக்காது என்று அறிவித்தது.[32][55] டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம், பெலாரஸுக்கு விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாகக் கூறியது.[32] ஸ்காண்டிநேவிய ஏர்லைன்ஸ் (எஸ்ஏஎஸ்) ஸ்வீடிஷ் போக்குவரத்து அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி, ஒஸ்லோ, நோர்வே மற்றும் கெய்வ் இடையே வாரத்திற்கு இருமுறை இயங்கும் விமானம் பெலருசிய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக மாற்றப்படும் என்று அறிவித்தது.[56] மேலதிக அறிவிப்பு வரும் வரை பெலருசிய வான்வெளியில் நடவடிக்கைகளை நிறுத்துவதாக லுஃப்தான்சா அறிவித்துள்ளது.[57]

விமானம்[தொகு]

சம்பந்தப்பட்ட விமானம் தயாரித்து நான்கு ஆண்டுகள் ஆன போயிங் 737-800 வகையினைச் சார்ந்தது. இது போலந்தில் பதிவு செய்யப்பட்டது. இதன் பதிவு எஸ்பி-ஆர்எஸ்எம்.[13] இந்த விமானம், மே 2017இல் ரியன்ஏர் நிறுவன சேவையில் 2017ல் அயர்லாந்தில் EI-FZX பதிவுடன் இணைந்தது. மேலும் போலந்து விமானப் பதிவேட்டில் 2019ல் ரியான்ஏர் சன் SP-RSM ஆக மாற்றப்பட்டது.[58]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Belarus opposition says government forced Ryanair plane to land to arrest journalist". Deutsche Welle. 23 May 2021. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Mitsotakis: Ryanair forced landing a 'shocking act'". Kathimerini. 23 May 2021. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 Reevell, Patrick (24 May 2021). "Ryanair flight forced to land in Belarus with top activist on board". https://abcnews.go.com/International/ryanair-flight-forced-land-belarus-top-activist-onboard/story?id=77859336. பார்த்த நாள்: 24 May 2021. 
 4. 4.0 4.1 Troianovski, Anton; Nechepurenko, Ivan (23 May 2021). "Belarus Forces Down Plane to Seize Dissident; Europe Sees 'State Hijacking'". The New York Times. https://www.nytimes.com/2021/05/23/world/europe/ryanair-belarus.html. 
 5. 5.0 5.1 5.2 "Ryanair plane: Western powers voice outrage at plane 'hijacking'". BBC News. 24 May 2021. https://www.bbc.com/news/world-europe-57224452. 
 6. "У аэрапорце Мінска, рэзка змяніўшы курс, прызямліўся самалёт Афіны—Вільня — на борце быў Раман Пратасевіч" [Athens-Vilnius plane landed at Minsk airport, abruptly changing course, Raman Protasevich on board] (பெலாருஷியன்). nn.by. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 7.2 7.3 "Belarus Faces Western Outrage Over Airliner 'Hijacking' To Detain Journalist". Radio Free Europe. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. "На борту самолета, экстренно посаженного в Минске, был Роман Протасевич" [Roman Protasevich was on board the plane urgently landed in Minsk] (பெலாருஷியன்). People Onliner. 23 May 2021. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. "У аэрапорце "Мінск" затрыманы блогера Раман Пратасевіч" [Blogger Raman Protasevich detained at Minsk airport] (பெலாருஷியன்). Spring 96. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Команду принять в Минске "заминированный" самолет Ryanair дал лично Лукашенко" [Lukashenka personally gave the command to receive the "mined" Ryanair plane in Minsk] (பெலாருஷியன்). BelTA. 23 May 2021. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Основатель Nexta Протасевич задержан в аэропорту Минска" [Nexta founder Protasevich detained at Minsk airport] (ரஷியன்). Kommersant. 23 May 2021. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 12. Plikūnė, Dalia; Užusienytė, Jogintė (23 May 2021). "Be opozicionieriaus ir jo draugės į Lietuvą negrįžo ir dar keturi lėktuvo keleiviai: kas jie – kol kas mįslė" [Aside from the oppositionist and his female friend, 4 more passengers haven't returned to Lithuania: It's still unclear, who they were.] (லிதுவேனியன்). DELFI. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 13. 13.0 13.1 13.2 Kaminski-Morrow, David. "Political leaders outraged as Belarus 'forces' Ryanair 737 diversion to Minsk". Flight Global. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Belarusian Journalist Arrested After His Flight Diverted To Minsk After False Bomb Threat". Radio Free Europe. 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Belarus diverts plane to arrest journalist, says opposition". Deutsche Welle. 23 May 2021.
 16. "Belarus Ryanair flight diverted: Passengers describe panic on board". BBC News. 24 May 2021. https://www.bbc.co.uk/news/world-europe-57180275. 
 17. "Thriller in flight from Athens: Belarus forces plane to land to arrest activist (original: Θρίλερ με πτήση από Αθήνα: Η Λευκορωσία ανάγκασε αεροσκάφος να προσγειωθεί για να συλλάβει ακτιβιστή)". Efimerida Ton Syntakton (Greek). 23 May 2021. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 18. 18.0 18.1 "EU Outrage as Belarus Diverts Flight, Arrests Opposition Activist". The Moscow Times. AFP. 23 May 2021.
 19. "Экс-главреда телеграм-канала NEXTA Романа Протасевича задержали в Беларуси . Его рейс Афины — Вильнюс экстренно сел в Минске в сопровождении истребителя. Европа грозит Лукашенко расследованием и санкциями. Главное" (in ru). Новая газета (Moscow). 23 May 2021. https://novayagazeta.ru/articles/2021/05/23/soosnovatelia-telegram-kanala-nexta-protasevicha-zaderzhali-v-belarusi. 
 20. "В Ryanair заявили об указании Беларуси посадить самолет с Протасевичем в Минске" (in ru-RU). Deutsche Welle. 23 May 2021. https://www.dw.com/ru/ryanair-zajavil-o-trebovanie-belarusi-posadit-samolet-v-minske/a-57637295. 
 21. Hradecky, Simon (23 May 2021). "Incident: Ryanair Sun B738 near Minsk on May 23rd 2021, Greece calls diversion states hijack". The Aviation Herald. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 22. Seputyte, Milda; Dendrinou, Viktoria (23 May 2021). "How Belarus Snatched a Dissident Off a Ryanair Plane From Greece". 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது – bloomberg.com வழியாக.
 23. Staff, Reuters (2021-05-24). "Belarus says it has set up commission to probe Ryanair incident - RIA" (in en). Reuters. https://www.reuters.com/article/belarus-politics-investigation-commissio-idUSR4N2N9015. 
 24. "Belarus To Notify ICAO, IATA Of Readiness To Investigate Ryanair Incident - Minsk". UrduPoint (ஆங்கிலம்). 2021-05-24 அன்று பார்க்கப்பட்டது.
 25. Прокопьева, Дарья Спевак, Ольга (24 May 2021). "Минтранс: сообщение о минировании самолета RyanAir пришло от ХАМАС - Люди Onliner". Onliner.
 26. "Angela Merkel says Belarus' story 'completely implausible'". Deutsche Welle. 24 May 2021.
 27. "Belarus points to Hamas bomb threat in plane diversion, Hamas rejects claim". Haaretz.com (ஆங்கிலம்). 2021-05-24 அன்று பார்க்கப்பட்டது.
 28. "Lithuania bars airport access to carriers flying over Belarus". LRT. 24 May 2021. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 29. "UK tells airlines to avoid Belarusian airspace after flight diversion led to journalist's arrest". ITV News. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 30. "Zelensky orders halt to air traffic with Belarus". Unian. 24 May 2021. https://www.unian.info/politics/zelensky-orders-halt-to-air-traffic-with-belarusv-11431084.html. 
 31. 31.0 31.1 31.2 "Western powers voice outrage as Belarus accused of hijacking plane". BBC News. https://www.bbc.co.uk/news/world-europe-57224452. பார்த்த நாள்: 24 May 2021. 
 32. 32.0 32.1 32.2 32.3 Williams, Matthias; Sytas, Andrius; Baczynska, Gabriela. "Europeans threaten to limit Belarus air traffic after 'state piracy'". Reuters. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 33. "EU leaders agree on Belarus sanctions after plane diversion". AP NEWS. 24 May 2021. 2021-05-25 அன்று பார்க்கப்பட்டது.
 34. Calder, Simon (23 May 2021). "Ryanair 'hijack' to Minsk could have serious consequences for Belarus". The Independent. 2021-05-24 அன்று பார்க்கப்பட்டது.
 35. Sytas, Andrius; Ostroukh, Andrey. "Belarus forces airliner to land and arrests opponent, sparking U.S. and European outrage". Reuters. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 36. https://www.9news.com.au/world/belarus-activist-arrested-after-fighter-jet-intercepts-his-ryanair-flight/72200f04-3b1d-4b4e-97a5-0b61493a6409. Missing or empty |title= (உதவி)
 37. https://www.brusselstimes.com/news/eu-affairs/170687/belavia-roman-protassevitch-de-croo-calls-to-ban-belarus-airline-from-landing-in-the-eu/. Missing or empty |title= (உதவி)
 38. The Associated Press (23 May 2021). "Belarus diverts prominent critic's flight, arrests him upon landing". CBC News. 24 May 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 15 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 39. "Mitsotakis: Ryanair forced landing a 'shocking act'". Kathimerini. 23 May 2021. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 40. Clarke, Vivienne; Leahy, Pat (24 May 2021). "Taoiseach says forced landing of Ryanair flight in Belarus is ‘piracy in the skies’" (in en). The Irish Times. https://www.irishtimes.com/news/world/europe/taoiseach-says-forced-landing-of-ryanair-flight-in-belarus-is-piracy-in-the-skies-1.4573345. 
 41. 41.0 41.1 41.2 "Belarus 'diverts Ryanair flight to arrest journalist', says opposition". BBC News. 23 May 2021. https://www.bbc.co.uk/news/world-europe-57219860. 
 42. "Belarus flight stop is an international scandal - EU". BBC News Online. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 43. "Belarus forces Ryanair plane bound for Vilnius to land, infuriating Lithuania". Reuters. 23 May 2021.
 44. "Oro uoste Minske nutupdyto lėktuvo keleivius sutikusi Šimonytė: tai negali likti be atsako". LRT. 23 May 2021.
 45. "Dutch PM joins condemnation of Ryanair 'hijack', KLM continues flights". Dutch News. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 46. "West weighs action after Belarus diverts plane, arrests reporter". Al-Jazeera. 24 May 2021. https://www.aljazeera.com/news/2021/5/24/rift-between-belarus-and-west-grows-after-plane-hijacking. 
 47. "Зеленський доручив зупинити авіасполучення між Україною та Білоруссю" (in uk). Європейська правда. 24 May 2021. https://www.eurointegration.com.ua/news/2021/05/24/7123560/. 
 48. "UK airlines told to avoid Belarusian airspace after journalist arrest". BBC. 24 May 2021. https://www.bbc.co.uk/news/uk-57232988. 
 49. Sytas, Andrius; Ostroukh, Andrey. "Belarus forces airliner to land and arrests opponent, sparking U.S. and European outrage". Reuters. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 50. Ateba, Simon. "Biden admin condemns diversion of Ryanair flight to Belarus to arrest journalist Raman Pratasevich, says the lives of American citizens were endangered • Today News Africa". todaynewsafrica.com (ஆங்கிலம்). 2021-05-24 அன்று பார்க்கப்பட்டது.
 51. Ziady, Hannah. "Airlines are avoiding Belarus after 'state-sponsored hijacking' of Ryanair flight". CNN.com. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 52. "Самолет Ryanair над Беларусью развернули - его сопроводил в Минск истребитель". 23 May 2021.
 53. "В Белоруссии задержан экс-главред Nexta. Самолет, в котором он летел, совершил экстренную посадку в Минске". BFM.ru - деловой портал.
 54. Ziady, Hannah. "Airlines are avoiding Belarus after 'state-sponsored hijacking' of Ryanair flight". CNN.com. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 55. 55.0 55.1 Katz, Benjamin. "Airlines reroute flights to avoid Belarus after forced landing". Market Watch. The Wall Street Journal. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 56. McKensie, Sheena. "Belarus accused of 'state-sponsored piracy' as fury mounts over diversion of Ryanair flight". CNN.com. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 57. "Lufthansa fliegt vorerst nicht mehr über Belarus". www.zdf.de (ஜெர்மன்). 2021-05-24 அன்று பார்க்கப்பட்டது.
 58. "SP-RSM Boeing 737-8AS - 44791, operated by Ryanair Sun". Jetphotos. 24 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியான்ஏர்_வானூர்தி_4978&oldid=3154694" இருந்து மீள்விக்கப்பட்டது