அலெக்சாண்டர் லுகசெங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாந்தர் லுக்கசேங்கோ
Alexander Lukashenko
லுக்கசேங்கோ (2015)
பெலருசின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 சூலை 1994
முன்னவர் மீச்சிசிலாவ் இரீப் பெலருசு சோவியத் தலைவர்
தனிநபர் தகவல்
பிறப்பு அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ
30 ஆகத்து 1954 (1954-08-30) (அகவை 69)
கோப்பிசு, சோவியத் ஒன்றியம்
(இன்றைய பெலருஸ்)
அரசியல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கலீனா செல்னெரோவிச் (1975–இன்று)
பிள்ளைகள்
  • விக்தர்
  • திமீத்ரி
  • நிக்கொலாய்
இணையம் president.gov.by/en/
படைத்துறைப் பணி
பற்றிணைவு
கிளை
  • சோவியத் எல்லைப் படைகள்
  • பெலருசிய ஆயுதப்படைகள்
பணி ஆண்டுகள்
  • 1975–1977
  • 1980–1982
தர வரிசை பெலருசின் மார்சல்

அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ (Alexander Grigoryevich Lukashenko, பெலருசிய மொழி: Аляксандр Рыгоравіч Лукашэнка, உருசியம்: Александр Григорьевич Лукашенко, பிறப்பு: ஆகத்து 30, 1954) பெலருஸ் நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் (சனாதிபதி) ஆவார். 1994 முதல் தொடர்ந்து இப்பதவியில் இருக்கிறார்.[1] லுக்கசேங்கோ அரசுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை ஒன்றில் பணிப்பாளராகவும், சோவியத் எல்லைப் படைப் பிரிவிலும் பணியாற்றிய பின்னர் அரசியலுக்கு வந்தார். இவரே பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு அரசுப் பிரதிநிதியாவார். மேலும் இவர் ஐரோப்பா வின் இறுதி சர்வாதிகாரியாக கருதப்படுகிறார்.[2][3]

குற்றச்சாட்டுகளும், சர்ச்சைப் பேச்சுகளும்[தொகு]

  • 2020ஆம் ஆண்டு நடந்த பெலருஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், லூகஷென்கோவை ருசிய அதிபர் புதின் ஆதரித்தார். லூகஷென்கோவுக்கு எதிராக பெருமளவு போராட்டங்கள் நடந்த போதிலும் அவர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.
  • கடந்த 2022 சனவரியில் உக்ரேன் மீது ருசியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை பரவிய நிலையில், இவர் பெலருஸ் படைகளை, ருசியப்படைகளுடன் இணைந்து கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்த அனுமதி அளித்தார்.
  • கொரோனாவை ஒழிக்க மக்கள் வோட்கா மதுபானம் குடிக்க வேண்டும் என்று அவர் கூறியது பெலருஸ் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Belarus – Government". The World Factbook (Central Intelligence Agency). 18 திசம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2008-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081210033036/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bo.html#Govt. பார்த்த நாள்: 26 திசம்பர் 2008. 
  2. Alexander Lukashenko | The autumn of the autocrat
  3. Belarus President Alexander Lukashenko under fire