மொழிபெயர்ப்பு (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இறைபோசோமில் தூதாறனை மொழிமாற்றப்படல்

உயிரியல் மற்றும் ஈனியலில் மொழிபெயர்ப்பு அல்லது மொழிமாற்றம் (Translation) என்பது ஆறனை மூலக்கூற்றிலிருந்து, புரதம் உருவாக்கப்படும் செயற்பாட்டைக் குறிக்கும், இது இரைபோசோம்களில் நடைபெறுகிறது.

ஆங்கிலக் கட்டுரையொன்றை வாசித்து அதைத் தமிழில் புரிந்துகொள்ள வேண்டும் எனின், ஆங்கிலக் கட்டுரையின் வரிகளைப் படித்தல், அவற்றின் பொருளைப் புரிந்து தமிழுக்கு மாற்றுதல் எனும் இரு செயற்பாடுகள் நாமறியாமலே நடக்கின்றன. இதையொத்ததே உயிரியல் மொழிபெயர்ப்புச் செயற்பாடும்.

  1. வரிமாற்றம் - எவ்வெவ் புரதங்கள் தேவைப்படுகின்றது எனும் பிறப்புரிமைச்செய்தி [[[டி.என்.ஏ.|தாயனை]]யிலிருந்து (தூது)ஆறனைக்கு மாற்றப்படுகின்றது.
  2. மொழிமாற்றம் - தூதாறனையாகப் புரிந்துகொள்ளப்பட்ட செய்திகள், அமினோவமிலம், காவாறனை, இரைபோசோம் என்பவற்றைப் பயன்படுத்தி புரதமாக மொழிபெயர்க்கப்படுகின்றது.

இறைபோசோமானது, புரதத்தை அன்றி, ஆரம்பத்தில் அமினோவமிலப் பல்பெப்டைட்டுக்களையே தொகுக்கின்றது. அவை, பின்பு புரத மடிவு மூலம் புரதங்களாக மாற்றப்படுகின்றன.

படிமுறை[தொகு]

காவாறனையின் மூமைக் கட்டமைப்புCCA வால்செம்மஞ்சளிலும், ஏல் தண்டு ஊதாவிலும், D - கரம் சிவப்பிலும், முரண்கோடோன் கரம் நீலத்துடன் முரண்கோடோன் கருப்பிலும், T கரம் பச்சையிலும் காட்டப்படுகின்றன.

மொழிமாற்றத்தின் துவக்கம்' நிகழமுன்பு, நிறமூர்த்தத்தின் தாயனையில் சேகரித்துவைக்கப்பட்டுள்ள பரம்பரைச் செய்திகள், காவாறனையாக வரிமாற்றப்படுகின்றன. இவ்வரிமாற்றமே, எந்தப் புரதம் உருவாக்கப்படவேண்டும், அப்புரதம் உருவாக வேண்டுமெனின், எந்தெந்த அமினோவமிலங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கின்றன.

மூன்று மூன்று தாங்கிகளாக// உப்புமூலங்களாக, நியூக்கிளியோடைட்டுத் தொடர் வாசிக்கப்பட்டு, அதற்குரிய அம்மினோவமிலம் இனங்காணப்படுகின்றது. தூதாறனை, காவாறனை என்பவற்றிலுள்ள இந்த மும்மைத் தாங்கிகள்/ உப்புமூலங்கள் 'கோடோன் என்று அறியப்படுகின்றன.

மொழிமாற்றத்தை, எளிமையாக, பின்வரும் நான்கு படிநிலைகளின் தொகுப்பாகச் சொல்லலாம்.

01.துவக்கம்

மொழிமாற்றம் நிகழ்கின்ற "தொழிற்சாலை"யாக இயங்கும் கலப்பாகம் இரைபோசோம் ஆகும். ஆறாறனை எனப்படும் ஆறனை வகையொன்றையும் புரதங்களையும் கொண்டிருக்கும் இறைபோசோமானது, சாதாரணமாக, பெருந்துணையலகு, சிறுதுணையலகு எனும் இரு பாகங்களாகக் கலத்தில்/செல்லில் காணப்படும். எனினும் மொழிமாற்றம் நிகழவேண்டுமெனின் அவை இரண்டும் இணைய வேண்டும்.

இலக்குக்குரிய காவாறனையைச் சூழ்ந்து இறைபோசோமின் இரு துணையலகுகளும் ஒன்றிணையும் செயற்பாட்டுடன், மொழிமாற்றம் துவங்குகின்றது. இங்கு காவாறனையானது, உரிய அமினோவமிலங்களை இறைபோசோமுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடும். இதற்காக, முதலாவது காவாறனை, தூதாறனையின் துவங்கு கோடோனில் இணைகின்றது. காவாறனையிலுள்ள முரண்கோடோன் (தூதாறனையின் தொடருக்கு மறுதலையான (complementary) தொடரைக் கொண்டது.) இதில் உதவும்.

இரைபோசோம் அகக்கலவுருச் சிறுவலையில் விடப்படும் புரதம் ஒன்றை மொழிபெயர்க்கின்றது. காவாறனைகள், கருநீல நிறமாகக் காட்டப்படுகின்றது.
02. 'நீளுதல்'

தூதாறனையில் தான் இணைந்துள்ள 5' கோடோனுக்கு உரிய அமினோவமிலத்தை காவாறனை கொணர்ந்து சேர்க்கின்றது. இதற்கு "அமினோவேசைல் தூதாதறை சிந்தரேசு" நொதியம் உதவுவதுண்டு. அமினோவேசைல் புறம் (A புறம்), டீயொக்சி புறம் (D புறம்) எனும் இரு முக்கியமான புறங்கள் இறைபோசோமில் உண்டு.

''03. இடமாற்றம்

தூதாறனையின் அடுத்த கோடோனுக்கு இறைபோசோம் நகர்ந்து, அக்கோடோனுக்குரிய அமினோவமிலத்தை, முன்பு இணைநநத அமினோவமிலத்துடன் பெப்டைட்டுப் பிணைப்பு மூலம் இணைக்கும். (இதன்மூலம்) அமினோவமிலச் சங்கிலி உருவாகிக்கொண்டிருக்கின்றது.

04. நிறுத்தம்

முடிவுக் கோடோன் (UAA, UAG, UGA என்பவற்றில்). ஒன்று அடையப்படும் போது, பல்பெப்டைட்டை இறைபோசோம் விடுவிக்கின்றது.

புரதத் தொகுப்பின் அடிப்படை, இரைபோசோம் ஒவ்வொரு அமினோவமிலங்களை அடுத்தடுத்துச் சேர்ப்பதே ஆகும். எந்த அமினோவமிலம் அடுத்து இணைக்கப்படவேண்டும் என்பதை, அவ்விணைவுக்கு இடம் கொடுக்கும் தூதாறனையே தீர்மானிக்கின்றது. தூதாறனையின் நியூக்கிளியோடட்டுத் தொடரில் வரும் மூன்று அடுத்தடுத்த தாங்கிகளுக்கு (அல்லது உப்புமூலங்களுக்கு) ஏற்பவே இவை இணைக்கப்படுகின்றன..[1] அமினோவமிலத்தைச் சேர்க்கும் செயற்பாடு, பெப்டைட்டின் காபன் முனையிலேயே இடம்பெறுவதால், மொழிமாற்றத்தின் திசையானது, அமினோ முதல் கார்பொக்சைல் வரை' என்று கூறப்படுகின்றது.[2]

பற்றுயிரிகளில் (பாக்டீரியா) கலக்[[[குழியவுரு]]வில் இறைபோசோம் துணையலகுகள் இணைய, மெய்க்கருவன்களிலோ அகக்கலவுருச் சிறுவலை மென்சவ்வூடாகவும் மொழிமாற்றம் இடம்பெறும். வரிமாற்றப்பட்ட ஆறனைகளில் இறைபோசோம ஆறனைகளோ, சிறு கருவாறனைகளோ (small nuclear RNA) புரதங்களாக மொழிமாற்றப்படுவதில்லை.

ஈனியல் கோடல்[தொகு]

ஒரு தூதாறனையின் கோடோன் மூன்று நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்டிருக்கும். இவ்வொரு கோடோன், ஒரு அமினோவமிலத்தைக் குறிக்கும். A, U, G, C எனும் குறியீடுகளால் இக்கோடோன்களைச் சுருக்கிக் குறிப்பதுண்டு.

மொழிமாற்றம் உயிர் வேதியியல் ரீதியில் எப்படி நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்குப் பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்.

தரப்பட்ட தாயனைத் தொடர்த் துண்டம்: ATGCCGTACAAG

(இங்கு A - அடினின், C - சைட்டோசின், G - குவானின், T - தைமின்)

அது ஆறனையாக மாற்றப்படும் போது, (மறுதலை என்பதால்) பின்வருமாறு வரிமாற்றப்படும். (ஆறனையில் தைமின், யுராசில்லால் (U) பிரதியிடப்பட்டிருக்கும்):

தூதாறனையில் தொடர்த் துண்டம்: UACGGCAUGUUC

காவாறனை மொழிமாற்றும் போது, (மறுதலையாகவே இணையமுடியும் என்பதால்), தாய்த் துண்டத்தின் ஒழுங்கில் இணையும்:

காவாறனையில் தொடர்த் துண்டம்: AUGCCGUACAAG

அமினோவமிலங்கள் இணைய, கோடோன்களாக இவை புரிந்துகொள்ளப்படவேண்டும்.

மும்மைக் கோடோன்கள்: AUG CCG UAC AAG  (ஆக, நான்கு அமினோவமிலங்கள், இக்கோடோன்கள் எவ்வெவ் அமினோவமிலத்தைக் குறிக்கும் என அறிய ஆறனைக் கோடோன் அட்டவணையை நோக்குக.)

மொழிமாற்றம், ஒரு துவங்கு கோடோனில் ஆரம்பித்து, முடிவுக் கோடோனில் முடியவேண்டும். AUG ஒரு துவங்கு கோடோன் என்பதால், இங்கு இந்நான்கு கோடோன்களுக்குமுரிய நான்கு அமினோவமிலங்கள் இணைக்கப்படும். பெரிய நியூக்கிளியோடைட்டுத் தொடரி எனில், UAA, UAG, UGA என்பவற்றில் ஏதாவது ஒரு முடிவுக் கோடோன் வரும் வரை, மொழிமாற்றம் தொடர்ந்து இடம்பெறும்.


மேலும் காண[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. Neill, Campbell (1996). Biology; Fourth edition. The Benjamin/Cummings Publishing Company. p. 309,310. ISBN 0-8053-1940-9. 
  2. Stryer, Lubert (2002). Biochemistry; Fifth edition. W. H. Freeman and Company. p. 826. ISBN 0-7167-4684-0. 

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

  • Champe, Pamela C; Harvey, Richard A; Ferrier, Denise R (2004). Lippincott's Illustrated Reviews: Biochemistry (3rd ed.). Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins. ISBN 0-7817-2265-9. 
  • Cox, Michael; Nelson, David R.; Lehninger, Albert L (2005). Lehninger principles of biochemistry (4th ed.). San Francisco...: W.H. Freeman. ISBN 0-7167-4339-6. 
  • Malys N, McCarthy JEG (2010). "Translation initiation: variations in the mechanism can be anticipated". Cellular and Molecular Life Sciences 68 (6): 991–1003. doi:10.1007/s00018-010-0588-z. பப்மெட் 21076851. 

வெளி இணைப்பு[தொகு]