குழியவுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உயிரணு உயிரியலில் குழியவுரு (Cytoplasm) என்பது உயிருள்ள உயிரணு ஒன்றின் உயிரணுக் கருவைத் தவிர மற்ற இடங்களில் காணப்படும் பொருட்களாகும். இது குழியவுரு நீர்மியத்தையும் (cytosol - உயிரணு மென்படலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஜெல் போன்ற பொருள்) மற்றும் உயிரணுக்களினுள்ளே காணப்படும் நுண்ணுறுப்புக்களையும் உள்ளடக்கிய பகுதி ஆகும். நிலைக்கருவிலிகளில் கருமென்சவ்வால் சூழப்பட்ட நிலையான கரு இல்லாத காரணத்தால், உயிரணுக் கருvஇன் உள்ளடக்கங்கள் அனைத்தும் குழியவுருவில் காணப்படும். மெய்க்கருவுயிரிகளில் உயிரணுக்களுக்குள், உயிரணுக் கருவின் உள்ளடக்கங்கள் குழியவுருவிலிருந்து கரு மென்சவ்வால் பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை உட்கரு ஊன்மம் (nucleoplasm) என அழைக்கப்படுகின்றது. குழியவுருவில் 80% நீர்உள்ளது. மேலும் இது வழக்கமாக நிறமற்றதாக உள்ளது.[1]

குழியவுருப் பாயத்திலிருந்து, நுண்ணுறுப்புக்களும், துகள்களும் அகற்றப்பட்ட பின்னர், அது துணை நுண்ணோக்கி வழி காணப்படக்கூடிய groundplasm எனப்படுகின்றது. இதுவே ஒளி நுண்ணோக்கி வழி தெரியும் hyaloplasm ஆகும். இது மிகவும் சிக்கலானதும், பல பிரிவுகள் கொண்ட தொகுதியாகவும் இருக்கும். இதில் பெரிய நுண்ணுறுப்புக்களான இரைபோசோம், இழைமணி, தாவர உயிரணுக்களில் காணப்படும் கனிகங்கள், கொழுமியத் துளிகள், புன்வெற்றிடம் போன்றவையும் அடங்கும்.

குழியவுருவிலேயே அனேகமான உயிரணுச் செயற்பாடுகள் நடைபெறும். இதில் சர்க்கரைச் சிதைவு உட்பட பல வளர்சிதைமாற்றச் செயல்களும், உயிரணுப்பிரிவும் அடங்கும்.

செறிவுள்ள உள் பகுதி Endoplasm என்றும், வெளிப்புற அடுக்கு Ectoplasm அல்லது cell cortex என்றும் அழைக்கப்படுகிறது. குழியவுருவில் உள்ள கால்சியம் அயனிகளின் உள்ளிருந்து வெளி அல்லது வெளியிருந்து உள்ளான அசைவு வளர்சிதை மாற்றச் செயல்முறைகளுக்கு சமிக்கை செயலாகும். [2] தாவரங்களில், புன்வெற்றிடத்தைச் சுற்றிக் காணப்படும் குழியவுருவின் அசைவு குழியவுரு ஓட்டம் எனப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shepherd, V. A. (2006). "The cytomatrix as a cooperative system of macromolecular and water networks". Current Topics in Developmental Biology. Current Topics in Developmental Biology 75: 171–223. doi:10.1016/S0070-2153(06)75006-2. ISBN 9780121531751. பப்மெட் 16984813. 
  2. Hogan, C. Michael (2010).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழியவுரு&oldid=2403203" இருந்து மீள்விக்கப்பட்டது