தைமின்
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
5-Methylpyrimidine-2,4(1H,3H)-dione
| |||
வேறு பெயர்கள்
5-methyluracil
| |||
இனங்காட்டிகள் | |||
65-71-4 ![]() | |||
ChEBI | CHEBI:17821 ![]() | ||
ChEMBL | ChEMBL993 ![]() | ||
ChemSpider | 1103 ![]() | ||
InChI
| |||
IUPHAR/BPS
|
4581 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | Thymine | ||
பப்கெம் | 1135 | ||
SMILES
| |||
UNII | QR26YLT7LT ![]() | ||
பண்புகள் | |||
C5H6N2O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 126.12 g·mol−1 | ||
அடர்த்தி | 1.23 கி.செமீ−3 (calculated) | ||
உருகுநிலை | 316 முதல்[convert: unknown unit] | ||
கொதிநிலை | 335 °C (635 °F; 608 K) உருச்சிதையும் | ||
காடித்தன்மை எண் (pKa) | 9.7 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
தைமின் /ˈ[invalid input: 'th']aɪm[invalid input: 'i-']n/ (Thymine, T, Thy) என்பது தாயனையில் (டி. என். ஏ), காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும். இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, ஒட்சியில் கரு அமிலத்தை அல்லது நியூக்கிளிக்கமிலத்தை அமைக்கின்றது. 5-மீதைல்யுராசில் என்றும் இது அறியப்படுவதுண்டு.
வரலாறு[தொகு]
தாயனையில் தைமின் காணப்பட, ஆறனையில் அது யுராசில்லால் பிரதியிடப்பட்டிருக்கின்றது. தைமினானது, 1893இல், ஆல்பர்ட் நியூமென், ஆல்பிரஸ்ட் கொசேல் ஆகியோரால், தைமஸ் சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1]
அமைப்பு[தொகு]
தைமினின் மறுபெயர் குறிப்பிடுவது போல், யுராசில்லிற்கு அதன் ஐந்தாம் கார்பனில் மீதைலேற்றம் செய்வதன் மூலம் தைமினைப் பெற்றுக்கொள்ள முடியும். தாயனையில், அடினினுடன் இரு ஐதரசன் பிணைப்புக்களை உருவாக்கி, இணைந்துகொள்கின்றது தைமின்.
ஒட்சியில் இறைபோசுடன் தைமின் இணைந்து, "ஒட்சியில் தைமிடின்" எனும் நியூக்கிளியோசைட்டை உருவாக்குகின்றது. புற ஊதாக் கதிர்கள் மூலம் ஏற்படும் மாறல்களால் (mutation), அடுத்தடுத்த தைமின்கள், அல்லது சைட்டோசின்க்கள், "கிங்குகள்" எனும் தமின் ஈர்மங்கள் (dimer - இருபகுதியங்கள்/இருபடிச்சேர்மங்கள்) உருவாகின்றன்ன்ன. இவை, தாயனையின் சாதாரண தொழிற்பாட்டைப் பாதிக்கக் கூடியவை.
புற்றுநோய் பிணிநீக்கலில் பயன்படும் 5-புளோரோயுராசில் (5-fluorouracil / 5-FU) என்பது தைமினை ஒத்த ஒரு மிடைப்போலிய (அனுசேப/வளர்சிதை) அன்னமம் (Metabolic Analog) ஆகும். எனவே, தாயனை தொகுக்கப்படும் போது, இது தைமினுக்குப் பதிலாக இணைந்து, தாயனைத் தொகுப்பை நிறுத்தும். இச்செயற்பாட்டின் மூலம்,, இது புற்றுநோய்க்கலங்கள் (செல்கள்) பெருகுவதைத் தடுக்கின்றது.
மேலும் காண்க[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- ↑ Albrecht Kossel and Albert Neumann (1893) "Ueber das Thymin, ein Spaltungsproduct der Nucleïnsäure" (On thymine, a cleavage product of nucleic acid), Berichte der Deutschen Chemischen Gesellschaft zu Berlin, 26 : 2753-2756. From p. 2754: "Wir bezeichnen diese Substanz als Thymin." (தைமசுச் சுரப்பியில் கிடைப்பதால், இதை தைமின் என்போம்.)