ஐதரசன் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓர் தானாக சேர்ந்த இருபடி அமைப்பில் மூலக்கூறிடை ஐதரசன் பிணைப்பிற்கான காட்டு [1] புள்ளியிட்ட கோடுகள் ஐதரசன் பிணைப்புகள் ஆகும்.
அசிடைலசிடோனில் உள்ள மூலக்கூறிடை ஐதரசன் பிணைப்பு அதனை எனோல் டௌடமராக நிலைநிறுத்த உதவுகிறது.

ஐதரசன் பிணைப்பு (hydrogen bond) என்று ஐதரசன் அணுவிற்கு வேறொரு வேதி வினைக்குழு அல்லது மூலக்கூற்றிலுள்ள நைட்ரசன், ஆக்சிசன் அல்லது புளோரின் போன்ற எதிர்மின்ம அணுவுடன் உள்ள மின்னியல் கவர்ச்சி வினைப்பாடு அழைக்கப்படுகிறது. இந்தப் பிணைப்பு நிகழ மற்ற எதிர்மின்ம அணுவுடன் ஐதரசன் பகிர் பிணைப்பு கொண்டிருக்க வேண்டும். இந்தப் பிணைப்புகள் மூலக்கூறுகளுக்கு இடையேயோ (மூலக்கூறிடை), அல்லது ஒரே தனி மூலக்கூற்றின் வேறொரு பகுதியுடனேயோ (மூலக்கூறக) ஏற்படலாம்.[2] ஐதரசன் பிணைப்பு (5 முதல் 30 கிஜோ/மோல் வரை) வான் டெர் வால்சு விசையை விட வலுவானதும் இணை அல்லது அயனிப் பிணைப்புகளை விட வலு குறைந்ததும் ஆகும். இந்த வகை பிணைப்புகள் நீர் போன்ற கனிம மூலக்கூறுகளிலும் ஆக்கிசனற்ற ரைபோ கருக்காடி (டிஎன்ஏ) போன்ற கரிம மூலக்கூறுகளிலும் நிகழ்கின்றன.

மூலக்கூறிடை ஐதரசன் பிணைப்பினால்தான் நீரின் கொதிநிலை (100 °C) ஐதரசன் பிணைப்புகள் இல்லாத பிற குழு 16 ஐட்ரைடுகளைவிட உயர்வாக உள்ளது. புரதங்களிலும் கருவமிலங்களிலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை அமைப்புகள் உருவாக மூலக்கூறக ஐதரசன் பிணைப்பும் காரணமாக உள்ளது. இயற்கை மற்றும் செயற்கை பல்லுறுப்பி கட்டமைப்புகளிலும் முக்கிய பங்காற்றுகிறது.


வரலாறு[தொகு]

ஐதரசன் பிணைப்பு குறித்து முதலில் 1912ஆம் ஆண்டில் டி. எசு. மூரும் டி.எஃப். வின்மில்லும் குறிப்பிட்டுள்ளதாக த நேச்சர் ஆஃப் த கெமிகல் பாண்ட் என்ற நூலில் லினசு கௌலிங் குறிப்பிட்டுள்ளார்.[3] மூரும் வின்மில்லும் டெட்ராமிதைல் அம்மோனியம் ஐட்ராக்சைடை விட ட்ரைமிதைல் அம்மோனியம் ஐட்ராக்சைடு வலுவற்ற காரமாக இருப்பதற்கு ஐதரசன் பிணைப்பைக் காரணம் காட்டினர். அனைவரும் அறிந்த நீரில் ஐதரசன் பிணைப்பு குறித்த விளக்கத்தை 1920இல் லாடிமெர், ரோடுபுசு வெளியிட்டனர். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Felix H. Beijer, Huub Kooijman, Anthony L. Spek, Rint P. Sijbesma, E. W. Meijer (1998). "Self-Complementarity Achieved through Quadruple Hydrogen Bonding". Angew. Chem. Int. Ed. 37 (1–2): 75–78. doi:10.1002/(SICI)1521-3773(19980202)37:1/2<75::AID-ANIE75>3.0.CO;2-R. 
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "hydrogen bond". Compendium of Chemical Terminology Internet edition.
  3. T. S. Moore and T. F. Winmill (1912). "The state of amines in aqueous solution". J. Chem. Soc. 101: 1635. doi:10.1039/CT9120101635. 
  4. Latimer, Wendell M.; Rodebush, Worth H. (1920). Journal of the American Chemical Society 42 (7): 1419–1433. doi:10.1021/ja01452a015. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • குமிழிச் சுவர் (இணைப்பு, மேற்பரப்பு இழுவிசை, ஐதரசன் பிணைப்பு ஆகியவற்றை விளக்கும் தேசிய உயர் காந்தப்புல ஆய்வகத்தின் ஒலி வில்லைக் காட்சி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_பிணைப்பு&oldid=1850192" இருந்து மீள்விக்கப்பட்டது