சைட்டோசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைட்டோசின்
Cytosine chemical structure.png
Cytosine-3D-balls.png
Cytosine-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-aminopyrimidin-2(1H)-one
வேறு பெயர்கள்
4-amino-1H-pyrimidine-2-one
இனங்காட்டிகள்
71-30-7 Yes check.svgY
ChEBI CHEBI:16040 Yes check.svgY
ChEMBL ChEMBL15913 Yes check.svgY
ChemSpider 577 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00380 Yes check.svgY
ம.பா.த சைட்டோசின்
பப்கெம் 597
UNII 8J337D1HZY Yes check.svgY
பண்புகள்
C4H5N3O
வாய்ப்பாட்டு எடை 111.10 கி/மூல்
அடர்த்தி 1.55 கி/செமீ3 (கணிக்கப்பட்டது)
உருகுநிலை
காடித்தன்மை எண் (pKa) 4.45 (இரண்டாம் நிலை/வழி), 12.2 (முதலாம் நிலை/முதல்)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சைட்டோசின் (Cytosine) /ˈst[invalid input: 'o-']s[invalid input: 'i-']n/ (C) என்பது தாயனை (டி. என். ஏ), ஆறனை (ஆர். என். ஏ) ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இதன் அரோமட்டிக்கு வளையத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் (மூலகங்கள்) காணப்படுவதால் இது எதிர்மவளைய (Heterocyclic) அரோமட்டிக்கு வளையமாக இனங்காணப்படுவதுடன், அடினின், குவானின், தைமின், யுராசில் முதலான ஏனைய தாங்கிகளுடன் (உப்புமூலங்கள்) இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது. "வட்சன் கிரிக் தாயனை மாதிரியுருவில்" இது குவானினுடன் மூன்று ஐதரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றது.

வரலாறு[தொகு]

1894இல், ஆல்பிராசுட் கொசேல், ஆல்பர்ட் நெயுமென் ஆகிய விஞ்ஞானிகளால், பசுக்கன்றின் தைமசு சுரப்பியிலிருந்து நீர்ப்பகுப்பான நிலையில் சைட்டோசின் பிரித்தெடுக்கப்பட்டது.[2][3] அதே ஆண்டிலேயே அதன் கட்டமைப்பு கண்டறியப்பட்டு, ஆய்வுக்கூடத்திலும் தயாரிக்கப்பட்டது.

2015 மார்ச்சில், விண்வீழ்கல்லிலிருந்து பெற்ற பிரிமிடின் முதலான தொடக்கச் சேர்மங்களைப் பயன்படுத்தி, தாயனை, ஆறனை என்பன, வெளி நிபந்தனைகளின் கீழ் ஆய்வுச்சாலையில் தயாரிக்கப்பட்டதாக நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர். பிரபஞ்சத்தில் பெருமளவு காணப்படும் கார்பன் வேதிப்பொருளான பிரிமிடின், செம்பெருமீன் அல்லது புடவித்தூசு அல்லது வாயு முகில்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.[4]

வேதிவினை (இரசாயனத் தாக்கம்)[தொகு]

எண்ணிடப்பட்ட சைட்டோசின். 5ஆம் எண் காபனிலேயே மீதைலேற்றம் இடம்பெறும்.

தாயனை, ஆறனை மட்டுமன்றி, சைற்றிடின் முப்பொசுபேற்று (CTP) முதலான நியூக்கிளியோடைட்டுகளின் பாகமாகக் காணப்படும் சைற்றோசின், நொதியங்களின் துணைக்காரணியாகவும் செயலாற்றுகின்றது. இதன்போது, தன் பொசுபேற்று ஒன்றை, அடினோசின் இருபொசுபேற்றுக்கு வழங்கி, அதை அடினோசின் முப்பொசுபேற்றாக மாற்றுகின்றது.

தாயனை, ஆறனை என்பவற்றில், சைற்றோசின், குவானினுடன் பிணைப்பேற்படுத்துகின்றது. எனினும், இப்பிணைப்பு உறுதியற்றது என்பதால், அமைனகற்றம் மூலம், சைட்டோசின் யுராசிலாக மாறுகின்றது. தாயனையிலிருந்து யுராசிலை அகற்றும் "யுராசில் கிளைக்கோசைலேசு" முதலானவை மூலம், தாயனைச் சீர்செயல் இடம்பெறாவிட்டால், இது, புள்ளி மிகுமாற்றம் அல்லது புள்ளி விகாரத்தை ஏற்படுத்தும்.

"தாயனை மீதைல்திரான்சுபரேசு" (DNA methyltransferase) எனும் நொதியம் மூலம், சைற்றோசின் 5-மீதைல்சைற்றோசினாக (5-Methylcytosine) மீதைலேற்றம் செய்யப்படக்கூடியது. 5-மீதைல்சைற்றோசின் பின், 5-ஐதரொட்சிமீதைல்சைற்றோசினாக (5-Hydroxymethylcytosine), நீர்ப்பகுப்புச் செய்யப்படலாம்.

சைற்றோசின் அமைனகற்றேசுகள் (cytosine deaminases) மூலம் சைற்றோசின் அமைனகற்றப்படும் போது, நன்மையான விளைவுகளும் தீங்குபயக்கக்கூடிய விளைவுகளும் ஏற்படலாம். அவற்றுள் ஒன்று "உயிரினப் படிவளர்ச்சி" (அங்கிக் கூர்ப்பு) ஆகும்.[5]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Dawson, R.M.C. (1959). Data for Biochemical Research. Oxford: Clarendon Press. 
  2. A. Kossel and Albert Neumann (1894) "Darstellung und Spaltungsprodukte der Nucleïnsäure (Adenylsäure)" (Preparation and cleavage products of nucleic acids (adenic acid)), Berichte der Deutschen Chemischen Gesellschaft zu Berlin, 27 : 2215-2222. The name "cytosine" is coined on page 2219: " … ein Produkt von basischen Eigenschaften, für welches wir den Namen "Cytosin" vorschlagen." ( … a product with basic properties, for which we suggest the name "cytosine".)
  3. Kossel, A.; Steudel, H. Z. (1903). "Weitere Untersuchungen über das Cytosin". Physiol. Chem. 38: 49. doi:10.1515/bchm2.1903.38.1-2.49. 
  4. Marlaire, Ruth (3 March 2015). "NASA Ames Reproduces the Building Blocks of Life in Laboratory". நாசா. 5 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Chahwan R., Wontakal S.N., and Roa S. (2010). "Crosstalk between genetic and epigenetic information through cytosine deamination". Trends in Genetics 26 (10): 443–448. doi:10.1016/j.tig.2010.07.005. பப்மெட்:20800313. 

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cytosine
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைட்டோசின்&oldid=3402645" இருந்து மீள்விக்கப்பட்டது