குவானின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவானின்
Guanin.svg
Guanine-3D-balls.png
Guanine-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-amino-9H-purin-6(1H)-one
வேறு பெயர்கள்
1,9-dihydro-6H-purin-6-one,
2-amino-6-hydroxypurine,
2-aminohypoxanthine,
Guanine
இனங்காட்டிகள்
73-40-5 Yes check.svgY
ChEBI CHEBI:16235 Yes check.svgY
ChEMBL ChEMBL219568 Yes check.svgY
ChemSpider 744 Yes check.svgY
DrugBank DB02377
IUPHAR/BPS
4556
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00242 Yes check.svgY
வே.ந.வி.ப எண் MF8260000
UNII 5Z93L87A1R Yes check.svgY
பண்புகள்
C5H5N5O
வாய்ப்பாட்டு எடை 151.13 g/mol
தோற்றம் உருவிலா வெண்திண்மம்
அடர்த்தி 2.200 கி/செமீ3 (கணித்தது)
உருகுநிலை
கொதிநிலை உருகாது உலரும்
கரையாது
காடித்தன்மை எண் (pKa) 3.3 (அமைட்டு), 9.2 (துணைநிலை), 12.3 (முதனிலை)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிவு
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குவானின் (Guanine, /ˈɡw[invalid input: 'ah']n[invalid input: 'i-']n/, G, Gua) என்பது தாயனை (டி. என். ஏ), ஆறனை (ஆர். என். ஏ) ஆகியவற்றில் காணப்படுகின்ற பியூரின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும். இது, அடினின், சைட்டோசின், தைமின், யுராசில் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது.

வரலாறு[தொகு]

கடற்பறவைகளின் கழிவிலிருந்து, "குவனோ" என்ற பெயரில் முதன்முதலாக 1844இல் ஒரு வளமூட்டியாகப் பிரித்தெடுக்கப்பட்ட இது, 1846இல் "குவானின்" எனப் பெயர்சூட்டப்பட்டது.[2] 1900களில், குவானினை யூரிக்கமிலமாக மாற்றமுடியுமென்று, அதன் கட்டமைப்பைக் கண்டுபிடித்த "பிச்சர்" (Fischer) செய்துகாட்டினார்.[3]

இயல்புகள்[தொகு]

குவானின் தாயனை (டி. என். ஏ), ஆறனை (ஆர். என். ஏ) இரண்டிலும் காணப்படுகின்றது. இதன் அரோமட்டிக்கு (அரோமற்றிக்) வளையத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் (மூலகங்கள்) காணப்படுவதால் இது எதிர்மவளைய அரோமட்டிக் (Heterocyclic aromatic) வளையமாக இனங்காணப்படுவதுடன், குவானினின் நியூக்கிளியோசைட்டு, "குவானோசைட்டு" என்று அழைக்கப்படுகின்றது. கீற்றோ, ஈனோல் ஆகிய இ்ரு தானொத்தியங்கள் (Tautomers) குவானினுக்கு உண்டு. கீற்றோ பெரும்பான்மையாகவும், ஈனோல் சிறுபான்மையாகவும் காணப்படுகின்றது.

இது சைட்டோசினுடன் மூன்று ஐதரசன் பிணைப்புக்களை உருவாக்குகின்றது. சைட்டோசினின் அமைன் தொகுதி, ஐதரசன்/ஹைட்ரஜன் பிணைப்பு வழங்கியாகவும் C-2 கார்பனைல் மற்றும் N-3 அமைன் அணுக்கள், பிணைப்பு வாங்கிகளாகச் செயற்படுகின்றன. குவானினின் C-6 கார்பனைல் தொகுதி பிணைப்பு வாங்கியாகவும், N-1 மற்றும் C-2இலுள்ள அமைன் தொகுதி பிணைப்பு வழங்கிகளாகவும் தொழிற்படுகின்றன. (படத்தைப் பார்க்க).

குவானின் வன்னமிலங்களால் நீரேற்றப்படும் போது, கிளைசின் அமினோவமிலமாகவும், கார்பன்டைஆக்சைடு (காபனீரொட்சைட்டு), கார்பன்மொனாக்சைடு (காபன்மொனொட்சைட்டு) ஆகிய சேர்மங்களாகவும் மாறுகின்றது. அடினினை விட விரைவாக ஒட்சியேற்றப்படும் குவானின், நீரிற் கரைதிறன் குறைந்தது. எனினும், ஐதான அமிலங்களிலும் காரங்களி்லும் அது கரையக்கூடியது. அதன் ஒட்சி மற்றும் அமைனோ கூட்டங்களுக்கிடையிலான மூலக்கூற்றிடை ஐதரசன் (ஹைட்ரஜன்) பிணைப்பால், 350 °C எனும் உயர் உருகுநிலையை, குவானின் கொண்டிருக்கின்றது.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. குவானின், பேரா.மேக்னசின் மாணவர் பி.உங்கர் என்பவரால் 1844இல் பிரித்தெடுக்கப்பட்டது, காண்க:
  3. "Emil Fischer - Biographical".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவானின்&oldid=3241156" இருந்து மீள்விக்கப்பட்டது