சிவப்பு அரக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிரா சிவப்புப் பெருமீன்
(நம் கதிரவன் அதன் சிவப்புப் பெருமீன் நிலையை அடைகையில்) அதன் அளவோடு கதிரவனின் அளவு ஒப்பீடு

விண்மீன் பரிணாமத்தில் இறுதி கட்டங்களுள் ஒன்றாகிய சிவப்பு அரக்கன் (அ) சிவப்புப் பெருமீன் (red giant), 2500 - 3500 0 C மேற்பரப்பு வெப்பநிலை கொண்ட, பெரும்பாலும் கரிம விண்மீன், M (அ) K நிறமாலை-வகை விண்மீனின் இறுதி கட்டத்தைக் குறிக்கும்; இதன் விட்டம் கதிரவனின் விட்டத்தைப் போல 10 - 100 மடங்கும் நிறை கதிரவனின் நிறையைப் போல 0.5 - 10 மடங்கும் இருக்கும். மிகப்பெரிய விண்மீன்களிலிருந்து உருவாகும் அரக்கநிலை விண்மீன்கள் சிவப்பு மீப்பெருமீன் (red supergiant) என்ற நிலையை அடையும். சிவப்புப் பெருமீன் நிலையில் ஒரு விண்மீனின் உள்ளகத்தில் ஈலியமும் (பரிதியம்) அதன் வெளியோட்டில் பரிதியமாக மாறும் ஐதரசனும் (நீரியம்) இருக்கும்.

சிவப்புப் பெருமீன்களில் சில[தொகு]

புவியிலிருந்து மிகவண்மையில் உள்ள சிவப்புப் பெருமீன் கேக்ரசு (காமா இக்ரூசிசு); நம் கண்களுக்குத் தெரியும் முக்கிய சிவப்புப் பெருமீன்களில் சில: அல்டிபாரான் (ஆல்பா டெளரி), ஆர்க்டரசு (ஆல்பா பூட்டிசு); அண்ட்டாரசு (ஆல்பா இசுக்கார்ப்பீ), பீட்டல்சூசு (ஆல்பா அரையனீசு) ஆகியவை சிவப்பு மீப்பெருமீன்கள்.

சிவப்புப் பெருமீன்களின் தொலைவு, அளவு[தொகு]

1990-களுக்கு முன்னர் இவற்றின் தொலைவுகள் துல்லியமாக அறியப்படவில்லை. 1989 - 1993 வரை செயலிலிருந்த இப்பார்க்கோசுத் (Hipparcos) திட்டத்திற்குப் பிறகே தொலைவுகள் மிகவும் துல்லியத்தன்மையுடன் அறியப்பட்டன.


குறிப்புதவி[தொகு]

  • daviddarling [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_அரக்கன்&oldid=1580321" இருந்து மீள்விக்கப்பட்டது