மேலி (பாடகர்)
மாலவிகா மனோஜ் (Maalavika Manoj பிறப்பு: செப்டம்பர் 16, 1993) மேடைப்பெயரான மேலி ( /mælɪ/) என்று பரவலாக அறியப்படுகிறார்,[1]மகாராட்டிராவின் மும்பையில் உள்ள ஓர் இந்தியப் பாடகர்-பாடலாசிரியர் ஆவார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]மாளவிகா மனோஜ் 16 செப்டம்பர் 1993 [2][3] அன்று தமிழ்நாட்டின் சென்னையில் வடக்கு மலபாரைச் சேர்ந்த மலையாளிப் பெற்றோருக்குப் மகளாகப் பிறந்தார். மாளவிகா சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். மாளவிகா மின்னணு இசையைக் கேட்டு வளர்ந்தவர்.
தொழில் வாழ்க்கை
[தொகு]2010 இல், மாளவிகா மைத்ரியில் (செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் கலாச்சார நிகழ்வுகள்) பங்குபெற்றார், மேலும் அந்த நிகழ்வில் "சிறந்த பாடகர்" என்று அறிவிக்கப்பட்டார். ஆர்ஜே அர்ஜுன் தாமஸ் , சென்னை லைவின் இசைக்குழு நிகழ்வில் பங்குபெறுவதற்காக ஓர் இசைக்குழுவை உருவாக்கப் பரிந்துரைத்தார். இந்த இசைக்குழு இறுதியில் செப்டம்பர் 2010 இல் "பாஸ்-இன்-பிரிட்ஜ்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது[4] அர்ஜுன் கிதார் கலைஞராகவும், சஜித் சத்யா பாஸிஸ்டராகவும், லியோன் ஜேம்ஸ் கீபோர்டு கலைஞராகவும், மாளவிகா பாடகராகவும், ஷஷாங்க் விஜய் தோற்கருவியாளராகவும் இருந்தனர்.
| பாடல் | ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | |
|---|---|---|---|---|
| "கமான் கேர்ள்ஸ்" | 2011 | 3 | அனிருத் ரவிச்சந்திரன் | [6] |
| "வாழ்க்கையே" | 2012 | ஹரிதாஸ் (2013 திரைப்படம்) | விஜய் ஆண்டனி | |
| "யேன் என்றால்" | 2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | சித்தார்த் விபின் | |
| "ஹாய் மை நேம் இஸ் மாலினி" | 2013 | மாலினி 22 பாளையங்கோட்டை | அரவிந்த் சங்கர் | |
| இருமுகன் சேட்டை" | 2016 | இருமுகன் (திரைப்படம்) | ஹாரிஸ் ஜயராஜ் | |
| ஹீ இஸ் மை ஹீரோ" | 2016 | சி3 (திரைப்படம்) | ஹாரிஸ் ஜயராஜ் | |
| "ஒன்னுமே ஆகலே" | 2017 | சுயாதீன பாடல் தொகுப்பு | அனிருத் ரவிச்சந்திரன் | |
| "சர்வைவா" | 2017 | விவேகம் (திரைப்படம்) | அனிருத் ரவிச்சந்திரன் | |
| "பீலா பீலா" | 2018 | தானா சேர்ந்த கூட்டம் | அனிருத் ரவிச்சந்திரன் | |
| "டேய் மச்சான் தேவ்" | 2019 | தேவ் (திரைப்படம்) | ஹாரிஸ் ஜயராஜ் | |
| " மங்கே மன்சூரியான்" | 2022 | "பதாய் தோ" | "கமோஷ் சா" |
சான்றுகள்
[தொகு]- ↑ "மேலி இன்ஸ்டாகிராம் பக்கம்".
- ↑ "Mali (Maalavika) | About". Facebook. Archived from the original on 18 July 2013. Retrieved 14 August 2015.
- ↑ "birthday".
- ↑ "Introducing BASS – IN BRIDGE". Thamarai.co.uk. Archived from the original on 27 July 2015. Retrieved 14 August 2015.
- ↑ "malavika manoj songs - gaana".
- ↑ "3 movie songs".