முன்கழுத்துக் கழலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முன்கழுத்துக் கழலையுடன் ஒருவர்

முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை (Goitre) என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும். இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது.சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது.

சுரப்பி வீக்கமடைதல்[தொகு]

குறைந்த அயடீன் மட்டத்தில் றைஅயடோதைரோனின்(Triodothyronin) மற்றும் ரெட்ராஅயடோதைரோனின்(Tetreiodothyronin) குறைவடைகின்றன.இதனால் அசினர் கலங்கள்(Acini Cell) தைராயிட்டு சுரப்பியிலிருந்து வீக்கமடையத் தொடங்குகின்றன.

கண்டக் கழலை ஏற்படுவதற்கான காரணம்[தொகு]

அயடீன் பற்றாக்குறை காரணமாகவே பொதுவாகக் கண்டக் கழலை ஏற்படுகின்றது.ஆயினும் அயடீன் குறைபாடு இல்லாத வேளையிலும் உணவில் கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள்(Goitrogenic substances) உள்ளெடுக்கப்படும் போது சிலருக்கு கண்டக் கழலை ஏற்படுகின்றது.

கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள்[தொகு]

சில தாவர உணவு வர்க்கங்களில் காணப்படும் எதிர்ப் போசனைக் கூறுகள்(Anti nutritional Factors) கழலையைத் தோற்றுவிக்கின்றன.

எ.கா:

  • தயோசயனைட்டு(Thiocyanate):
மரவள்ளி, கோவா, பூக்கோவா, முள்ளங்கி என்பவற்றில் தயோசயனைட்டு அதிக அளவில் காணப்படுகின்றது.
  • பேர்க்குளோரேட்டு(Perchlorate):
கரட், கடுகு என்பவற்றில் பேர்க்குளோரேட்டு அதிக அளவில் காணப்படுகின்றது.
  • தயோயூரியா(Thiourea):
  • தயோயுரசில்(Thiouracil):
  • கோயிற்றின்(Goitrin)

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்கழுத்துக்_கழலை&oldid=1341472" இருந்து மீள்விக்கப்பட்டது