மிக்கோயன்
![]() | |
வகை | பிரிவு |
---|---|
நிறுவுகை | December 1939 (As OKB-155 in 1942) |
தலைமையகம் | மாஸ்கோ, உருசியா |
முக்கிய நபர்கள் | Artem Mikoyan and Mikhail Gurevich, founder |
தொழில்துறை | Aerospace and defense |
உற்பத்திகள் | Military aircraft Civil airliners |
தாய் நிறுவனம் | United Aircraft Corporation |
இணையத்தளம் | Official Website |
மிகோயன் குருவிச் (Mikoyan-and-Gurevich) என்பது ரஷ்யாவின் ராணுவதிற்குத் தேவையான சண்டை விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஆர்டம் மிகோயன் மற்றும் மிக்கயில் குருவிச் ஆகியோரால் 1939 ஆம் ஆண்டு உருவக்கப்பட்டது. இவ்விருவரின் பெயர்களைக் கொண்டு மிகோயன் குருவிச் என்றும் புனைப்பெயராக மிக் என்றும் பெயரிடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஆர்டம் மிகோயன் மறைவிற்குப் பின் இந்நிறுவனத்தின் பெயரிலிருந்து மிகோயன் நீக்கப்பட்டது. ஆயினும் புனைப்பெயரான மிக் அப்படியே விடப்பட்டது.
மிக் ரக விமானங்களை சீனா, வட கொரியா மற்றும் வட வியட்னாம் ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கெதிராகப் பயன்படுத்தியுள்ளன. மேலும் சோவியத் ஒன்றியம் பல்வெறு நாடுகளுக்கு மிக் ரக விமானங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ரஷ்யா இந்நிறுவனத்தின் 100 % சதவிகிதப் பங்குகளை இல்லுயிசின், இர்குட், சுகோய், டியுபோலெவ் மற்றும் யகோவ்லெவ் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றினைத்து யுனைடெட் ஏர்க்ராஃப்ட் கார்ப்ரேசன் எனும் நிறுவனத்தை உருவாக்கியது. குறிப்பாக மிகோயன் மற்றும் சுகோய் ஆகியவை ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.
மிக் விமானங்களின் பட்டியல்[தொகு]






உற்பத்தி[தொகு]
- மிக்-1, 1940
- மிக்-3, 1941
- மிக்-5, 1942
- மிக்-7, 1944
- மிக்-9, 1947
- மிக்-15, 1948
- மிக்-17, 1954
- மிக்-19, 1955, ஒலியை விட வேகமாகச் செல்லும் முதல் விமானம்
- மிக்-21, 1960
- மிக்-23, 1970
- மிக்-25, 1970,இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் விமானம்
- மிக்-27, 1975, தரைத்தாக்குதல் விமானம்
- மிக்-29, 1983,ஐக்கிய அமெரிக்காவின் எப்-16 மற்றும் எப்/ஏ-18 விமானங்களுக்குஇணையானது
- மிக்-31, 1983, இடைமறித்து தாக்கும் விமானம்
- மிக்-35, 2007
- மிக் எல்எம்எப்எஸ்
சோதனை அடிப்படை[தொகு]
- மிக்-டிஐஸ், 1941
- மிக்-6, 1940 (உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் விமானம்)
- மிக்-8, 1945
- மிக்-211, 1942
- மிக் ஐ-250, 1945
- மிக் ஐ-270, 1946
- மிக் ஐ-75, 1958
- மிக் வொய்இ-8, 1962
- மிக் வொய்இ-152, 1959
- மிக்-23 1956
- மிக்-ஏடி, 1992
- மிக்-110, 1995
- மிக்-1.44, 1986-2000
- மிக்-எல்எப்ஐ
- மிக்-105, 1965
- மிக்-33
- மிக் எல்எம்எப்எஸ்
வெளியிணைப்புகள்[தொகு]
- Migavia.ru பரணிடப்பட்டது 2010-01-05 at the வந்தவழி இயந்திரம் - official site of MiG "OKB" successor enterprise
- MiG page on Aviation.ru பரணிடப்பட்டது 2003-10-02 at the வந்தவழி இயந்திரம்
- Russian Aviation Museum, MiG Pages பரணிடப்பட்டது 2017-05-30 at the வந்தவழி இயந்திரம்
- Camouflage schemes for all MiG fighters