மாலிக்-இ-மைதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிக்-இ-மைதான்
மாலிக்-இ-மைதான்
பிஜப்பூர் கோட்டையில் வைக்கப்பட்டுள்ள மாலிக்-இ-மைதான் பீரங்கி.
இடம்பிஜாப்பூர், இந்தியா
வடிவமைப்பாளர்முகமது பின் உசைன் ரூமி
வகைபீரங்கி
கட்டுமானப் பொருள்மணி உலோகம்
நீளம்4.45 மீட்டர்கள் (14.6 அடி)
முடிவுற்ற நாள்1549
மாலிக்-இ-மைதானிலுள்ள பீரங்கி (1865)

மாலிக்-இ-மைதான் (Malik-E-Maidan) (போர்க்களத்தின் இறைவன்) என்பது 16 ஆம் நூற்றாண்டின் பீரங்கி ஆகும். இது இந்தியாவின் பிஜப்பூர் கோட்டையில் சிங்க கோபுரத்தில் (புர்ஜ்-இ-ஷெர்ஸ் ) அமைந்துள்ளது. 4.45 மீட்டர்கள் (14.6 அடி) நீளம் கொண்ட மணி உலோகத்தில் வார்க்கப்பட்டுள்ளது. இது நடுக்காத்திலிருந்து எஞ்சியிருக்கும் மிகப்பெரிய பீரங்கித் தொகுதியாகும்.

வரலாறு[தொகு]

இந்த பீரங்கி 1549 ஆம் ஆண்டு அகமத்நகரின் சுல்தான் முதலாம் புர்கான் நிசாம் ஷாவிடம் பணியாற்றிய துருக்கியப் பொறியாளர் முகமது பின் உசைன் ரூமியால் உருவாக்கப்பட்டது. சுல்தான் பீரங்கியை தனது மருமகனான பிஜப்பூரின் சுல்தான் முதலாம் அலி அதில் ஷாவிற்கு வழங்கினார்.[1]

கி.பி. 1565 இல், பிஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷா, தலைக்கோட்டை சண்டையில், ஒருங்கிணைந்த தக்காண சுல்தானியப் படையின் ஒரு பகுதியாக விஜயநகரப் பேரரசின் அலிய ராம ராயனை போரில் எதிர் கொள்ளும்போது பீரங்கி பயன்படுத்தப்பட்டது. தக்காண சுல்தான்களின் வெற்றிக்குப் பிறகு பீரங்கிக்கு "மாலிக்-இ-மைதான்" என்று பெயரிடப்பட்டது.[2][1] அடுத்த 59 ஆண்டுகளில், பீரங்கியின் கட்டுப்பாடு பிஜப்பூர் சுல்தானகத்திலிருந்து அகமதுநகர் சுல்தானகத்திற்கு மாற்றப்பட்டது.

கிபி 1625 இல், அகமத்நகர் சுல்தானகத்தின் பிரதம மந்திரி மாலிக் ஆம்பர், பிஜப்பூர் சுல்தானகத்தின் மீதான தனது படையெடுப்பின் ஒரு பகுதியாக, பயிற்சி பெற்ற போர் யானைகளின் உதவியுடன் மாலிக்-இ-மைதானை தௌலதாபாத் கோட்டையிலிருந்து தெற்கே சோலாபூருக்குக் கொண்டு சென்றார். பிஜாப்பூர் நகரத்தை முற்றுகையிட்டு தோல்வியுற்ற பின் பின்வாங்கியதால், அவர் பீரங்கியை மீண்டும் வடக்கே கொண்டு சென்றார். பின்னர் முகலாயர்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தானகத்திற்கு எதிராக பட்வாதி போரில் அதைப் பயன்படுத்தினார்.[3]

உலகின் மிகப் பெரிய பீரங்கி, அதன் வகையைச் சேர்ந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தால் பெரிய பிரித்தானின் போர்க் களத்திற்கு மாற்ற முயற்சித்தது. ஆனால் அதன் பெரிய அளவு மற்றும் நிபந்தனையற்ற போக்குவரத்து உள்கட்டமைப்பு காரணமாக பீரங்கியை கொண்டு செல்ல முடியவில்லை.

கட்டமைப்பு[தொகு]

மாலிக்-இ-மைதான் மணி உலோகத்தால் ஆனது. மேலும், 4.45 மீட்டர்கள் (14.6 அடி) நீளம் கொண்டது. [4] இதன் முகவாய் அளவு 700 மில்லிமீட்டர்கள் (28 அங்) 1.5 மீட்டர்கள் (4 அடி 11 அங்) ஒட்டுமொத்த விட்டம் மற்றும் 55 டன் எடை கொண்டது. [5] குண்டு 500 மீட்டர்கள் (1,600 அடி) தூரம் வரை செல்லக்கூடியது என ஒரு கதை உண்டு. [6]

அலங்காரம்[தொகு]

பீரங்கியின் முகவாய் சிங்கத்தின் தலையை அதன் தாடைகளைத் திறந்து, ஒரு யானையை விழுங்குவது போன்ற ஒரு புடைப்புச் சிற்பத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [2]

கல்வெட்டுகள்[தொகு]

பீரங்கியில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு கல்வெட்டுகளின்படி அகமதுநகரின் முதலாம் புர்கான் நிஜாம் ஷா காலத்தில் பொறிக்கப்பட்டவை. இது 1549 இல் முகம்மது பின் உசைன் ரூமியால் அகதுநகரில் மணி உலோகத்திலிருந்து வார்க்கப்பட்டது. மூன்றாவது கல்வெட்டு ஔரங்கசீப் 1685-86 இல் பிஜப்பூரைக் கைப்பற்றியபோது சேர்த்தார். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wagoner, Philip B; Eaton, Richard M (2014). "Warfare on the deccan plateau, 1450-1600 : A Military Revolution in early modern India?". Journal of World History 25: 5–50. doi:10.1353/jwh.2014.0004. 
  2. 2.0 2.1 2.2 "View of the Malik-i-Maidan Gun in the Fort at Bijapur". British Library. 26 March 2009. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
  3. Sadiq Ali, Shanti (1996). The African Dispersal in the Deccan: From Medieval to Modern Times. Orient Blackswan. பக். 81 and 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788125004851. https://books.google.com/books?id=-3CPc22nMqIC. பார்த்த நாள்: 24 February 2021. 
  4. Limca Book of Records. Hachette (publisher). 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351952404. https://www.google.com/books/edition/Limca_Book_of_Records/c79aDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=malik+e+maidan+bell+metal&pg=PT122&printsec=frontcover4. பார்த்த நாள்: 3 August 2023. 
  5. Forty, Simon (2017). Heavy weights; The Military Use of Massive Weapons. Book Sales. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780785835493. https://www.google.com/books/edition/Heavyweights/mr1GDwAAQBAJ?hl=en&gbpv=0. பார்த்த நாள்: 3 August 2023. 
  6. The Land of the Rupee. Bennett, Coleman and Company Limited and மிச்சிகன் பல்கலைக்கழகம். 1912. https://www.google.com/books/edition/The_Land_of_the_Rupee/TrWS_ELC4JQC?hl=en&gbpv=1&dq=. பார்த்த நாள்: 3 August 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிக்-இ-மைதான்&oldid=3815712" இலிருந்து மீள்விக்கப்பட்டது