பிஜப்பூர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜப்பூர் கோட்டை
பகுதி: பிஜப்பூர்
பிஜப்பூர், கர்நாடகா,இந்தியா
Part of Fort, Beejapore..jpg
பிஜப்பூர் கோட்டை அகழியுடன்.
Bijapur citadel.jpg
பிஜப்பூர் கோட்டை is located in கருநாடகம்
பிஜப்பூர் கோட்டை
பிஜப்பூர் கோட்டை
ஆள்கூறுகள் 16°49′39″N 75°42′31″E / 16.8276°N 75.7087°E / 16.8276; 75.7087
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அநுமதி
அனுமதி உண்டு
நிலைமை இடிபாடுகள்
இட வரலாறு
கட்டிய காலம் கி.பி.1566
கட்டியவர் யூசுப் அடில் ஷா
கட்டிடப்
பொருள்
கிரானைட்

பிஜப்பூர் கோட்டை (Bijapur Fort) (கன்னடம்: ವಿಜಾಪುರ ಕೋಟೆ Vijapur kote) இந்திய நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் பிஜப்பூர் நகரில் உள்ள கோட்டை ஆகும். பிஜப்பூர் கோட்டை அடில் ஷாஹி பேரரசின் ஆட்சியின் போது கி.பி.1566 இல் கட்டப்பட்டது. இக்கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னங்கள் மிகுதியாக உள்ளன.[1][2][3]

நினைவுச்சின்னங்கள்[தொகு]

பிஜப்பூர் கோட்டை பகுதியில் உள்ள நினைவுச் சின்னங்கள் பிஜப்பூர் கோட்டை,ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர்,கோல் கும்பாஸ், இப்ராகிம் ரவ்சா,மெதார் மகால்,பரக்கமான்,மாலிக் இ மைதான்,ககன் மகால்,சாத் மன்சில்,அசர் மகால்,தாஜ் பாவ்டி,சங்கீத் நாயர் மகால் ஆகியவை உள்ளன.[1][2][3][4][5]

பிஜப்பூர் கோட்டை[தொகு]

கோட்டை மதில் சுவர் இரண்டு பொதுமைய வட்டங்கள் கொண்ட சுவர்களாக கட்டப்பட்டது.கிழக்கு மேற்கு அகலம் 400 மீட்டர்.கோட்டைக்கு 5 பிரதான நுழைவாயில்கள் உள்ளது.கோட்டை சுற்றி அகழிகள் உள்ளன.[6]

கோல் கும்பாஸ்[தொகு]

கோல் கும்பாஸ்
Old GolGumbaz 1890.jpg GolGumbaz2.jpg
1890 இல் கோல் கும்பாஸ் தற்போது கோல் கும்பாஸ்

பிஜப்பூர் சுல்தானகத்தை ஆட்சி செய்த முகமது அடில் ஷா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான கோல் கும்பாஸ் கட்டிடம் இங்குள்ளது.இந்த அடக்கத்தலம் கி.பி.1656 இல் யாகூத் என்ற கட்டிடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது.[7] இது தக்காண சுல்தானகம் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.[8]

ஜாமியா பள்ளிவாசல்[தொகு]

ஜாமியா பள்ளிவாசல்
View from the south-east of the Jami Masjid, Bijapur..jpg Jumma Masjid - Quran.JPG
தென்கிழக்கு பகுதியில் இருந்து பள்ளிவாசல் பள்ளிவாசலின் மிஃராபில் தங்க நிறத்தில் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள்

ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர் கோட்டைக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ளது. இது 1565 இல் கட்ட ஆரம்பிக்க பட்டது.இங்கு தூண்கள் பிரார்த்தனை கூடம் மற்றும் ஒன்பது வழிகள் உள்ளன.மேல் பகுதியில் வசீகரிக்கும் குவிமாடம் உள்ளது.முன் பகுதியில் ஹவுஸ் உள்ளது.இப்பள்ளிவாசல் பரப்பளவு 10810 சதுர மீட்டர் ஆகும்.[9] பள்ளிவாசல் தரைத்தளம் பளிங்கு கற்கள் கொண்டு முகலாய மன்னர் ஔரங்கசீப் மூலம் பதிக்கப்பட்டது.அவர் மூலமே கிழக்கு நுழைவாயில் விரிவுபடுத்த பட்டது.[3][5][10][11]

இப்ராகிம் ரவ்சா[தொகு]

இப்ராகிம் ரவ்சா

இப்ராகிம் ரவ்சா அல்லது அலி ரவ்சா 1627 இல் கட்டப்பட்டது.இப்ராஹிம் அடில் ஷா II மற்றும் அவரது ராணி தாஜ் சுல்தானா ஆகியோரின் சமாதி இங்கு உள்ளது.இது சிறப்பு ஒலி அம்சம் கொண்டுள்ளது.சுல்தான் கல்லறைக்கு நின்று, ஒரு முனையில் பேசினால் மற்ற முனையில் கேட்க முடியும். இதன் சிறப்பம்சம் மூலம் இதை தெற்கின் தாஜ்மஹால் என அழைக்கப்படுகிறது.[1][3][4][5][12]

பரக்கமான்[தொகு]

பரக்கமான்

பரக்கமான் (12 வளைவுகள் ) என்பது 1672 ல் கட்டப்பட்ட அலி ரவ்சாவின் அடக்கத்தலம் ஆகும்.[5][13]

ககன் மகால்[தொகு]

ககன் மகால்
View across the moat towards the Gagan Mahal and the Sat Manzili, Bijapur..jpg View of the Gagan Mahal or durbar hall, Bijapur.jpg
அகழியிலிருந்து ககன் மகால் ககன் மகால் வேறு தோற்றம்

ககன் மகால் முதலாம் அலி அடில் ஷா வால் 1561 இல் கட்ட பட்டது.இது மாளிகை மற்றும் தர்பார் கொண்டது.இதில் 3 வளைவுகள் உள்ளன.உள்ளன.தரைத்தளம் தர்பார் பகுதியாகவும் முதல் மாடி அரச குடும்ப தங்கவும் அமைக்கப்பட்டது.வளைவின் உயரம் 17 மீட்டர் ஆகும்.[4][5][13][14]

மாலிக் இ மைதான்[தொகு]

மாலிக் இ மைதான், துப்பாக்கி நிலை
View of the Malik-i-Maidan Gun in the Fort at Bijapur.jpg Malik E Maidan.jpg
1865 இல் மாலிக் இ மைதான் மாலிக்-இ-மைதான் உலகின் பெரிய வெண்கல பீரங்கி [15]

மாலிக்-இ-மைதான் (போர்க்களத்தில் மாஸ்டர்), மேலும் பூர்ஜ்-இ-மாலிக் (போர்க்களத்தில் மாஸ்டர்), இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா மூலம் எழுப்பப்பட்டது. தள்ளிக்கோட்டைப் போரில் 1565 இல் விஜயநகர பேரரசை வெற்றி கொண்டதன் நினைவாக கட்டப்பட்டது. [16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Heritage Areas". Bijapur. Office Of the Commissioner, Archaeology, Museums & Heritage, Mysore: Government of Karnataka. 2009-11-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Welcome to Bijapur". 2009-02-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 "A brief History". Bijapur Cith Municipal Council. 2005-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 200-11-28 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  4. 4.0 4.1 4.2 "Bijapur Heritage". The Tribune. 2002-03-24. 2009-11-28 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Places to visit". 2008-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-28 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Bijapur". 2016-08-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-15 அன்று பார்க்கப்பட்டது. well built of the most massive materials, and encompassed by a ditch too yds. wide, formerly supplied with water, but now nearly filled up with rubbish, so that its depth cannot be discovered
  7. "Gumbad (Gumbad) meaning in English". Hinkoj.com. Hinkoj.com. 3 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  8. Michell, George; Zebrowski, Mark (1999). Architecture and Art of the Deccan Sultanates. The New Cambridge History of India. I.8. Cambridge, UK: Cambridge University Press. பக். 92–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-56321-6. https://books.google.com/books?id=aHcfv6zkJgQC&pg=PR92. பார்த்த நாள்: 14 September 2011. 
  9. "Tourism details near by Bijapur city". Juma Masjid. Bijapur City Municipal Council. 2006-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-30 அன்று பார்க்கப்பட்டது. This imposing mosque (the rectangle is 170m x 70 m) is incomplete, lacking in 2 minarets
  10. "Close view of the central portion of the screen of the east façade of the Jami Masjid, Bijapur". British Library On Line Gallery. 2009-11-29 அன்று பார்க்கப்பட்டது.
  11. "View from the south-east of the Jami Masjid, Bijapur". British Library On Line Gallery. 2009-11-29 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Ibrahim Rozah Tomb". British Library On Line Gallery. 2009-11-28 அன்று பார்க்கப்பட்டது.
  13. 13.0 13.1 "Bijapur: Karnataka". 2009-11-29 அன்று பார்க்கப்பட்டது.
  14. "View across the moat towards the Gagan Mahal and the Sat Manzili, Bijapur". British Library On Line Gallery. 2009-11-29 அன்று பார்க்கப்பட்டது.
  15. http://www.1911encyclopedia.org/Bijapur
  16. "Bijapur, Karnataka". Burj-E-Sherz. 2009-11-30 அன்று பார்க்கப்பட்டது. Malik-e-Maidan cannon (Lord of the Battle field). It was used in the battle of Talikot, when the Vijaynagar Empire fell. Measuring 4.45 m in length, 1.5 m in diameter and weighing an estimated 55 tonnes, it is one of the largest medieval guns ever made
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜப்பூர்_கோட்டை&oldid=3589909" இருந்து மீள்விக்கப்பட்டது