உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது அடில் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது அடில் ஷா
அடில் ஷாகி பேரரசர்
ஆட்சிசெப்டம்பர் 12, 1627 – நவம்பர் 4, 1656
முன்னிருந்தவர்இப்ராகீம் அடில் ஷா II
பின்வந்தவர்அலி அடில் ஷா II
வாரிசு(கள்)அலி அடில் ஷா II
முழுப்பெயர்
முகமது அடில் ஷா காசி
மரபுஓஸ்மான் மாளிகை
அரச குலம்அடில் ஷாகி பேரரசு
தந்தைஇப்ராகீம் அடில் ஷா II
தாய்தாஜ் சுல்தானா
பிறப்புபீஜப்பூர்
இறப்புநவம்பர் 4, 1656
பீஜப்பூர்
சமயம்சுன்னி இஸ்லாம்

இந்தியாவை சுல்தான் மரபினைச் சேர்ந்தவர்கள் பலர் ஆண்டு உள்ளனர். சிந்த் சுல்தான்கள், டெல்லி சுல்தான்கள், மாபர் சுல்தான்கள், பீஜப்பூர் சுல்தான்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க சுல்தான் மரபினர் ஆவர். பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா (Mohammed Adil Shah) இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஒரு நபர் ஆவார். வடக்கே பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு இவர் ஆட்சி செய்தாலும் தென்னிந்தியாவில் இவர் தனது ஆளுகையைச் சில இடங்களில் நிறுவினார்.

விஜய நகரின் வீழ்ச்சியும் அடில்ஷாவின் எழுச்சியும்

[தொகு]

கி.பி 1646 ல் விஜயநகரப் பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன் ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்தான். அவனது இந்த தோல்வி தமிழகத்தில் இருந்த அனைத்து நாயக்க அரசுகளையும் ஆட்டம் காண வைத்தது. முக்கியமாக விஜய நகரப் பேரரசின் விசுவாசிகளான தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு வந்தனர்.

தஞ்சை நாயக்கர்களின் இந்த நிலையை அறிந்த அடில்ஷா அவர்களை தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தார். கி.பி 1649ல் பீஜப்பூர் படை செஞ்சியை போரிட்டு வென்றது.

கோல் கும்பாஸ்

[தொகு]
1860 இல் கோல் கும்பாஸ்
1860 இல் கோல் கும்பாஸ்

பிஜப்பூர் சுல்தானகத்தை ஆட்சி செய்த முகமது அடில் ஷா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் கர்நாடகா மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்ட தலைநகர் பிஜப்பூர் நகரில் உள்ள கோல் கும்பாஸ் ஆகும்.இந்த அடக்கத்தலம் கி.பி.1656 இல் யாகூத் என்ற கட்டிடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது.[1] இது தக்காண சுல்தானகம் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gumbad (Gumbad) meaning in English". Hinkoj.com. Hinkoj.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014.
  2. Michell, George; Zebrowski, Mark (1999). Architecture and Art of the Deccan Sultanates. The New Cambridge History of India. Vol. I.8. Cambridge, UK: Cambridge University Press. pp. 92–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56321-6. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அடில்_ஷா&oldid=3816157" இலிருந்து மீள்விக்கப்பட்டது