மரியா சரப்போவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா சரப்போவா
நாடு உருசியா
வாழ்விடம்பிராடெண்டன், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
உயரம்1.88 மீட்டர்கள் (6 அடி 2 அங்)
தொழில் ஆரம்பம்ஏப்ரல் 19, 2001
விளையாட்டுகள்வலது கை (இரு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்$ 32,730,228[1]
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்562–135 (80.72%)
பட்டங்கள்34 டபிள்யூடிஏ, 4 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை
  1. . 1 (ஆகஸ்ட் 22, 2005)
தற்போதைய தரவரிசை
  1. . No. 2 2 (ஜனவரி 12, 2015) [2]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2008)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2012) (2014)
விம்பிள்டன்வெ (2004)
அமெரிக்க ஓப்பன்வெ (2006)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெ (2004)
ஒலிம்பிக் போட்டிகள்வெள்ளி பதக்கம் (2012)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்23–17
பட்டங்கள்3 டபிள்யூடிஏ
அதியுயர் தரவரிசை41 (ஜூன் 14, 2004)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2 சு (2003, 2004 )
அமெரிக்க ஓப்பன்2 சு (2003)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜனவரி 12, 2015.

மரியா சரபோவா (உருசியம்: Мария Юрьевна Шарапова [mɐˈrʲijə ˈjurʲjɪvnə ʂɐˈrapəvə]( கேட்க)(Maria Sharapova, பி. ஏப்ரல் 19, 1987) ஒரு ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு (குடியுரிமை பெறுவதற்கு முந்தைய நிலை) பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார் [3]. இவர் வரிப்பந்தாட்டத்தில் இதுவரை 29 பட்டங்கள் வென்றுள்ளார், அதில் 5 கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றிப் பட்டங்களும் அடங்கும். இவர் 5 வெவ்வேறு காலகட்டங்களில் முதல்நிலை வீராங்கனையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். ஆகத்து 22, 2005 அன்று முதன் முதல் தரவரிசையில் உலகின் முதல் இடத்தை பிடித்தார், ஐந்தாம் முறையாக சூன் 11, 2012 அன்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் [4]. இதுவரை ஒன்பது கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றி தொடர்களின் இறுதி ஆட்டத்தில் பங்கெடுத்து ஐந்தில் வென்றுள்ளார். 17 வயதாக இருக்கும் போது தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற (2002, 2003) செரீனா வில்லியம்சை தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை 2004ல் வென்றது இவரின் தொழில் முறை ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையாகும்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1987 ஆண்டில் ரஷ்யாவில் உள்ள நயகன் ( சிபெரியா ) இடத்தில் பிறந்தார் . இவரது பெற்றோர் 1987ஆண்டில் இடம்பெற்ற செர்னோபில் அணு விபத்தின் பின் பெலருசின் கோமெல் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தனர்

டென்னிஸ் வாழ்க்கை[தொகு]

ஜூனியர் மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஷரபோவா 13 வயதில் முதல் தடவையாக 2000 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இடம் பெற்ற எட்டி ஹெர் சர்வதேச ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பெண்கள் பிரிவில் விளையாடி வெற்றி பெற்றார்.[5]

ஷரபோவா தனது 14 வது பிறந்த நாள் அன்று 19 ஏப்ரல் 2001 ஆம் ஆண்டு தனது தொழில்முறை போட்டியில் அறிமுகமானார். 2002 இல் நடைபெற்ற டப்ல்யூ டி ஏ பசிபிக் லைஃப் ஓப்பன் போட்டியிலும் விளையாடினார்.[6]

2002 இல் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டி தொடர்களில் ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்குபற்றினார். இதில் ஆஸ்திரேலிய ஓப்பன் பெண் ஜூனியர் சாம்பியன்ஷி இறுதி போட்டிக்கு தகுதி அடையும் போதும் அவரின் வயது 14 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகும்.[7]

ஷரபோவா 21 அக்டோபர் 2002 அன்று ஐ டி எஃப் உலக ஜூனியர் ஒற்றையர் பிரிவின் தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்தை பிடித்தார்.அப்போது அவர் இரண்டு ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் நிகழ்வுகள் உட்பட மூன்று வெற்றிகளையும் மற்றும் 5 இரண்டாம் நிலையையும் பெற்றிருந்தார். அப்போது அவரது ஜூனியர் வெற்றி தோல்வி சாதனையாக 47-9 இருந்தது.[8]

இளைய கிராண்ட் ஸ்லாம் முடிவு:
ஆஸ்திரேலிய ஓப்பன்: இறுதி (2002)
பிரெஞ்சு ஓப்பன்: 3 சுற்று (2002)
விம்பிள்டன்: இறுதி (2002)
அமெரிக்க ஓப்பன்: 2 சுற்று (2001)

2003: முதல் போட்டி தொடர் பட்டம்[தொகு]

2003 இல் ஷரபோவா ஒரு முழு பருவகாலத்தில் விளையாடினார் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறந்த 50 வீரர்களுக்குள் இடம் பிடிதார்.[9] அவர் ஆஸ்திரேலிய ஓப்பன் மற்றும் பிரெஞ்சு ஓப்பன் போட்டி தொடா்களில் அறிமுகமானர்.அறிமுக போட்டி தொடா் என்பதனால் இவரால் ஒரு போட்டியிலும் வெற்றி பெற முடியவில்லை.

பின்னர் விம்பிள்டன் வைல்டு கார்டு சுற்றில் ஜெலீனா டொகிக் தோற்கடித்து நான்காவது சுற்று வரை முன்னேறினர்.,[10] நான்காவது சுற்றில் ஸ்வெட்லானா குல்னெட்சொவா விடம் 3 செட்களையும் இழந்தார்.

செப்டம்பர் இறுதிக்குள் ஷரபோவா ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் தனது முதலாவது டபிள்யூ டி ஏ பட்டத்தையும் கைப்பற்றிளார்.[11]

2004: விம்பிள்டன் வெற்றி[தொகு]

ஷரபோவா தனது 17 வது வயதில் டென்னிஸ் வாழ்க்கை முன்றவது பட்டமாக விம்பிள்டன் பட்டதினை வென்றார். இப் பேட்டி தொடரில் அரையிறுதியில் ஐ சூகியாமா யும் ஐந்தாம் சுற்றில் முன்னாள் சாம்பியன் லின்ட்சே டேவன்போர்ட் யும் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் யும் தேற்கடித்து இப் பட்டத்தினை வென்றார்.ஷரபோவா ஒரு கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற இரண்டாவது ரஷியன் பெண் ஆவர். இதற்கு முன் 2004 ஆம் ஆண்டு அனஸ்தேசியா மிய்ஷ்கினா பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினை வெற்றிருந்தார்.

2005: உலக தரவரிசையில் முதல் இடம்[தொகு]

இந்தியன் வெல்ஸ் இல் ஷரபோவா

ஷரபோவா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடி அரை இறுதி வரை சென்றார்.(இது அவருடைய வாழ்க்கையில் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் அரையிறுதியில் விளையாடினார்.) அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் இடம் தோல்வியுற்று வெளியேறினார். பின் ஷரபோவா ஒன்றின் பின் ஒன்றாக தோராய் பான் பசிபிக் ஓப்பன் மற்றும் கத்தார் டோட்டல் ஒப்பன் போட்டி தொடர்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஷரபோவா முதல் முறையாக உலக தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.

முதல் முறையாக இத்தாலிய ஓப்பன் தொடரில் களிமண் தரையில் விளையாடி அரை இறுதியில் பத்தி ஸ்சேனிடேர் தோல்வி அடைந்து வெளியேறினார்.[12] தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக பிரஞ்சு ஓப்பன் தொடரில் காலிறுதியில் ஹெனின் இடம் தோல்வி அடைந்தார்.[13] பின்னா் ஷரபோவா புல் தரை மைதானத்தில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி ஜெலீனா ஜனகோவிக் தோற்கடித்து வருடத்தின் மூன்றாலது பட்டமாக டீ எஃப் எஸ் கிளாசிக் பட்டத்தை வென்றார்.[14]

தனது பட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு நடப்பு சாம்பியன் பட்டத்துடன் விம்பிள்டன் தொடரில் களம் இறங்கினார். விம்பிள்டன் தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் இடம் 6-7,1-6 என்ற செட் அடிப்படையில் தேற்று வெளியேற்னார்.அவர் புல் தரையில் 24 போட்டிகளில் தெடர் வெற்றியை பெற்றிருந்தார்.[15]

ஷரபோவா சில புள்ளி வித்தியாசத்தில் 2005 ஆகஸ்ட் 22 இல் முதல் முறையாக உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.[16] இதன் மூலம் உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதல் உருசியா பெண் ஆனார். பின் அமெரிக்க ஓப்பன் தொடரில் விளையாடிய ஷரபோவா அரையிறுதி ஆட்டத்தில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் தோல்வி அடைந்தார். அத்துடன் அந்த பருவத்தின் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் இவரால் பெற முடியவில்லை.

2006: அமெரிக்க ஓப்பன் சாம்பியன்[தொகு]

2006 அமெரிக்க ஓப்பன் வெற்றி

2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஷரபோவா ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஹெனின் இடம் 6-4, 1-6, 4-6 என்ற செட் வித்தியாசத்தில் தோற்றார்.[17] சில வாரங்கள் கழித்து துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் அரையிறுதி போட்டியில் மீண்டும் ஹெனின் இடம் தோல்வி அடைந்தார். இப் போட்டி தொடரில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த மார்டினா ஹிங்கிஸ் மற்றும் மூன்றாம் நிலை விராங்கனை லின்ட்சே டேவன்போர்ட் யும் முந்தைய சுற்றுக்களில் தோற்கடித்தார் ஷரபோவா.

இந்திய வெல்ஸ் போட்டி தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஹிங்கிஸ் யும் இறுதி ஆட்டத்தில் எலெனா தேமெண்டிவா யும் தோற்கடித்து வருடத்தின் முதல் பட்டத்தினை வென்றார்.[18][19] பிரஞ்சு ஓப்பன் திரும்பியா ஷரபோவா நான்காவது சுற்றில் டிநர சபினா விடம் தோல்வியுற்றார்.[20] விம்பிள்டன் தொடரில் விளையாடிய ஷரபோவா அரையிறுதியில் தோல்வியுற்று வெளியேறினார்.[21]

அகுரா கிளாசிக் போட்டி தொடரில் இறுதி போட்டியில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் தோற்கடித்து வருடத்தின் இரண்டாவது பட்டத்தினை வென்றார்.[22]அமெரிக்க ஓப்பன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா அரையிறுதி போட்டியில் மவுரெஸ்மோ தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.[23] இறுதி போட்டியில் ஜஸ்டின் ஹெனின் ஐ தோற்கடித்து இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.[24]

ஷரபோவா ஒன்றின் பின் ஒன்றாக சூரிச் ஓப்பன் மற்றும் ஜெனரலி லேடீஸ்(மகளிர்) லிஞ்ச் போட்டி தொடர்களில் வெற்றி பெற்றார். பின் டபிள்யூ டி ஏ தொடர் சாம்பியன்ஷிப் இல் விளையாடி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.[25]

2007: உலக தர வரிசையில் சரிவு[தொகு]

2007 ஆஸ்திரேலிய ஓப்பன் இல் ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டி தொடரில் விளையாடிய ஷரபோவா கால் இறுதி ஆட்டத்தில் அன்னா சாக்குவேதத்ஜ் யும் அரை இறுதி ஆட்டத்தில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் யும் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் ஐ எதிர் கொண்டு இவர் 1-6 2-6 என்ற செட் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.[16] நடப்பு சாம்பியன் பட்டத்துடன் பசிபிக் லைப் ஓப்பன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா மூன்றாம் சுற்றுடன் வெளியேறினார்.இந்த தொடரின் போது ஷரபோவாவிற்கு தோள் பட்டையில் சுளுக்கு ஏற்பட்டது.[26] பின் இடம் பெற்ற சோனி எரிக்சன் ஓப்பன் தொடரிலும் மூன்றாம் சுற்றுடன் வெளியேறியார்.[27]

2007 அமெரிக்க ஓப்பனில் ஷரபோவா

அதன் பின் இடம் பெற்ற இஸ்தான்புல் கோப்பை தொடரில் அரையிறுதியில் அரவனே ரெஜை விடம் தோல்வியுற்றார்.,[28] பிரஞ்சு ஓப்பன் தொடரிலும் அரையிறு ஆட்டத்துடன் வெளியேறினார்.[29] டீ எஃப் எஸ் கிளாசிக் போட்டி தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய ஷரபோவா இறுதி ஆட்டத்தில் ஜெலீனா ஜனகோவிக் இடம் தோல்வியடைந்தார்.[30]

அகுரா கிளாசிக் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய ஷரபோவா இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பட்டத்தினை தனதாக்கிக்கொண்டார்.[16] கடந்த வருடம் அமெரிக்க ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஷரபோவா. இந்த வருடம் மூன்றாம் சுற்றில் அக்னீயெஸ்க ரதுவான்ஸ்கா விடம் தோல்வியடைந்து வெளியேறினார்.[31](2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற அமெரிக்க ஓப்பன் தொடரிலும் மூன்றாம் சுற்றுடன் வெளியேறினார்.)[16]

அமெரிக்க ஓப்பன் தோல்வியை தொடர்ந்து நடைபெற்ற கிரெம்ளின் கோப்பை தொடரிலும் ஆரம்ப சுற்றில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்து வெளியேறினார்.[32] தொடர் தோல்விகளை தொடர்ந்து உலக தரவரிசையில் சிறந்த ஐந்து ஆட்டக்காரர்களுக்குள் இடம் பிடிக முடியவில்லை.இந்த நிலை 3 மணி 24 நிமிடம் வரை நீடித்தது. பின் சிறந்த ஐந்து ஆட்டக்காரர்களுக்குள் ஒருவரக இடம் பிடித்தார்.[33]

2008:ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் மற்றும் மீண்டும் தோள்பட்டையில் காயம்[தொகு]

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடிய ஷரபோவா இரண்டாம் சுற்றில் லின்ட்சே டேவன்போர்ட் யும் கால் இறுதி போட்டியில் ஹெனின் னையும் தோற்கடித்தார்.[34] இந்த போட்டியில் ஹெனின் ஐ தோற்கடித்ததன் மூலம் ஹெனின் இன் 32 தொடர் வெற்றியை முடிவுக்கு கொண்டுவந்தார்.[35] அவர் அரையிறுதியில் 6-3, 6-1 என்ற செட் வித்தியாசத்தில் ஜெலீனா ஜனகோவிக் ஐ தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில் 7-5, 6-3 என்ற செட் வித்தியாசத்தில் அனா இவனோவிச் தோற்கடித்து தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

2008 ஆம் ஆண்டு பசிபிக் லைப் ஓபன் விளையாடும் ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரிற்கு பின்னர் ஷரபோவா 18 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்தார். இதில் டோட்டல் கத்தார் ஓப்பன் பட்டமும் உள்ளடங்கும். பசிபிக் லைஃப் ஓபன் அரையிறுதி ஆட்டத்தில் குல்னெட்சொவா விடம் தோற்றதனட மூலம் ஷரபோவாவின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. ஏப்பிரலில் பௌஸ்ச்ச் & லோம்ப் சாம்பியன்ஷிப் இல் விளையாடிய ஷரபோவா மூன்றாவது சுற்றில் அனபெல் மேதினா கர்ரிஜீஸ் யை எதிர் கொண்டு 7-6, 5-7, 7-6 என்ற செட் அடிப்படையில் வெற்றி கெண்டார். இந்த போட்டி 3 மணித்தியாலம் 26 நிமிடங்கள் வரை இடம் பெற்றது.[36] பின் ப்பமிலி ஸர்கல் கப் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் இடம் தோல்வியடைந்தார்.[37]

மே மாதம் ஹெனின் திடீர் ஓய்வு பிறகு ஷரபோவா மீண்டும் உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்..[38] தர வரிசையில் முதல் இடத்துடன் பிரெஞ்சு ஓப்பன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா நான்காவது சுற்றில் டிநர சபினா விடம் தோல்வியுற்று வெளியேறினார்.[39] இந்த தொடரில் பிரகாசிக்க தவறியதால் உலக தர வரிசையில் முதல் இடத்தை இழந்தார்.[40] அதனை தொடர்ந்து விம்பிள்டன் தொடரில் இரண்டாம் சுற்று போட்டியில் ஆலா கூதியவ்ட்செவா விடம் தோல்வியடைந்தார்.[41]

ஆகஸ்ட் இல் ரோஜர்ஸ் கப் தொடரில் தோள்பட்டையில் காயம் எற்பட்டதை தொடர்ந்து தொடரில் இருந்து விலகிக் கொண்டார்.[42] எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையில் தோள் சுற்றுப்பட்டை சுழலியில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெய்ஜிங் ஒலிம்பிக், அமெரிக்க ஓப்பன் மற்றம் டபிள்யு டி எ டூர் சாம்பியன் உட்பட அந்த பருவத்தின் மீதம் இருந்த அனைத்து போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.[43] அதனால் உலக தர வரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அக்டோபர் மாதம் ஷரபோவா தோள்பட்டை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.[44]

2009:தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின்[தொகு]

2009 பிரெஞ்சு ஓப்பன் காலிறுதி போடடியில் ஷரபோவா

அறுவை சிகிச்சை பின் ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை பாதுகாக்க முயற்சி செய்யவில்லை. அவர் அந்த தொடரில் இருந்து விலகி இருந்தார்.[45] மார்ச் மாதம் விளையாட்டு திரும்பினார் முதலில் வீ என் பி பாரிபஸ் ஓப்பன் இரட்டையர் போட்டியில் சக நாட்டு வீராங்கனை எலீனா வெஸ்னினா வுடன் களம் இறங்கினார். அந்த தொடரின் முதல் போட்டியிலே தோல்வியடைந்தனர். மேலும் ஷரபோவா ஒற்றையர் போட்டியில் இருந்து விலகினார். அதனால் அவரின் உலக தரவரிசையில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக தரவரிசையில் 100 இடத்திற்கு வெளியே தள்ளப்பட்டார். இவர் தரவரிசையில் 126 வது இடத்தில் இருந்தார்.[46]

கிட்டத்தட்ட பத்து மாதங்களின் பின் தனது முதல் ஒற்றையர் போட்டியில் விளையாடினார். வார்சா ஓப்பன் தொடரில் கால் இறுதி வரை சென்றார்.கால் இறுதி போட்டியில் அலோனா போண்டாறேங்கோ விடம் 2-6 2-6 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.[47] தனது அறுவை சிகிச்சை பின் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடரான பிரெஞ்சு ஓப்பன் தொடரில் விளையாடினார். அந்த தொடரில் காலிறுதி போட்டியில் டொமினிக்க சிபுல்கோவா விடம் தோல்வியடைந்து வெளியோறினார்.[48]

கோடையில் புல் தரை மைதானத்தில் பர்மிங்காம் தொடரில் விளையாடினார். இதில் அரையிறுதியில் லி நா விடம் தோல்வியடைந்தார்.[49] விம்பிள்டன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா 2ம் சுற்றில் கிசெல டுல்கோ விடம் தோல்வியடைந்தார். விம்பிள்டன் தொடரில் ஷரபோவா விளையாடும் போது உலக தரவரிசையில் 24 வது இடத்தை பிடித்திருந்தார்.[50]

கோடை மாதங்களில் கணிசமான வெற்றியை ருசித்த ஷரபோவா வெஸ்ட் கிளாசிக் வங்கி தொடரில் காலிறுதி போட்டி மற்றம் எல் ஏ மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷி தொடரில் அரையிறுதி போட்டி வரை சென்றிருந்தார். ரோஜர்ஸ் கப் போட்டி தொடரில் இறுதி போட்டியில் எலெனா தேமெண்டிவா விடம் 6-4 6-3 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார் ஷரபோவா. 2009 அமெரிக்க ஓப்பனில் முதலாம் சுற்று போட்டியில் ட்சுவேதான பிரோங்கோவ வையும் இரண்டாம் சுற்று போட்டியில் மகேல் லையும் தோற்கடித்து முறையே மூன்றாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றார். மூன்றாம் சுற்றில் அமெரிக்க விரங்கனையான மெலனி ஔதின் இடம் 6-3 4-6 5-7 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.[51]

டோக்கியோவில் ஆண்டுக்கான தனது முதல் பட்டத்தை வென்றார் ஷரபோவா. இறுதி போட்டியில் 5-2 என்ற செட் நிலை இருந்தபோது ஜெலீனா ஜனகோவிக் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.[52] டோக்கியோ வெற்றியின் விளைவாக சீனா ஓப்பன் தொடரில் நோரடியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றார். இரண்டாம் சுற்றில் பெங் ஷூஐ விடம் தோல்வியடைந்தார்.[53] அப்போது உலக தரவரிசையில் 14 இடத்தில் இருந்தார்.[46]

2010:போராட்டங்கள்[தொகு]

பாங்க் ஓப் வெஸ்ட் கிளாசிக் தொடரில் ஷரபோவா

ஆசியாவில் இரண்டு கண்காட்சி போட்டிகளில் விளையாடி பிறகு அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலிய ஓப்பன் விளையாடினார். அந்த தொடரின் முதல் ஆட்டத்தில் மரியா கீரிலேங்கோ விடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.2003 ஆம் ஆண்டிற்கு பின் முதல் முறையாக ஷரபோவா ஒரு கிராண்ட் ஸ்லாம் தொடரில் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்தார்..[54] பின்னர் அவர் செல்லுலர் சௌத் கப் தொடரில் வெற்றி கொண்டு வருடத்தின் முதல் பட்டத்தினை வென்றார்.[55]

வி என் பி பரிபாஸ் ஓப்பன் தொடரில் விளையாடிய ஷரபோவா மூன்றாவது சுற்றில் ஜெங் ஜை யிடம் தோல்வியுற்றார்.அவரது வலது முழங்கை ஒரு காயம்பட்ட எலும்பு மோசமாக பாதிக்கபட்டது இதனால் சோனி எரிக்சன் ஓப்பன்[56] மற்றும் ப்பமிலி ஸர்கல் கப்[57] தொடர்களில் இருந்து விலகிக் கொண்டார்.

போட்டிக்கு திரும்பிய ஷரபோவா முது மாதிரிலென மாட்ரிட் ஓப்பன் தொடரில் முதல் சுற்று போட்டியில் லுசிஏ சஃப்ஸ்ரோவா விடம் தோல்வியடைந்தார். இன்டர்நேசன்ஆக்ஸ் டி ஸ்ட்ராஸ்பர்க் தொடரில் வெற்றி பெற்றார். இது இவரது 22 வது பட்டமாகும்.[58]பிரெஞ்சு ஓப்பன் மூன்றாம் சுற்றில் ஜஸ்டின் ஹெனின் டம் தோல்வியடைந்தார்.

ஐகோஅன் கிளாசிக் தொடரில் நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய ஷரபோவா லி நா விடம் தோல்வியடைந்தார். விம்பிள்டன் தொடரின் நான்காவது சுற்றில் செரினா வில்லியம்ஸ் டம் தோலடவியடைந்தார்.[59] அமெரிக்க ஓப்பன் தொடருக்கு முன்னதாக இரண்டு இறுதி போட்டியை எட்டிய ஷரபோவா பாங்க் ஓப் வெஸ்ட் கிளாசிக் தொடரில் விக்டோரியா அசரென்கா மும்[60] மற்றும் மேற்கத்திய & தெற்கு நிதி குழு பெண்கள் ஓப்பன் தொடரில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் டமும்[61] தோல்வியடைந்தார்.

அமெரிக்க ஓப்பன் தொடரில் ஷரபோவா நான்காவது சுற்று கரோலின் வொஜ்னியக்கி டம் தோல்வியடைந்தார்.[62] பருவத்தின் கடைசி இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் முடிந்தது. தோராய் பான் பசிபிக் ஓப்பன் தொடரில் முதலாம் சுற்று போட்டியில் தோல்வியடைந்தார்.[63] சீனா ஓப்பன் தொடரின் இரண்டாவது சுற்றில் எலீனா வெஸ்னினா டம் தோல்வியடைந்தார்.[64] அப்போது அவர் உலகின் தரப்படுத்தலில் 18 வது இடத்தில் இருந்தார்..[65]

2011:மீண்டும் உலக தரவரிசையில் முன்னேற்றம்[தொகு]

ஷரபோவா 2011 பருவத்தில் பயிற்சியாளராக மைக்கேல் ஜாய்ஸ் உடன் தாமஸ் ஹோக்ஸ்டேட் இணைந்து செயற்படுவார் என அறிவித்தார்.[66] டிசம்பர் 5 ம் திகதி ஷரபோவா வேரா ச்வோனரேவா க்கு எதிரான ஒரு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றார்.[67] அதிகாரப்பூர்வ ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் பயிற்சி போட்டியாக ஏ.எஸ்.வி கிளாசிக் தொடரில் களம் இறங்கி கால் இறுதி சுற்றில் கிரெட்டா அர்ன் இடம் தோல்வியடைந்தார். ஏ.எஸ்.வி கிளாசிக் தொடருக்கு பின்னர் பல வருடகாலமாக பயிற்சியாளராக கடமையாற்றிய ஜாய்ஸ் ஓய்வு எடுத்துக்கொள்ள தீர்மான்த்தார்.இவர் பயிற்சியாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் ஷரபோவா இரண்டு ராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.[68]

வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடரான ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடி நான்காம் சுற்றில் ஆண்ட்ரியா பெட்கோவிக் இடம் தோல்வியடைந்தார்.[69] ஷரபோவாவின் காதில் ஏற்பட்ட தொற்று காரணமாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மற்றும் கட்டார் லெடீஸ் ஓப்பன் தொடர்களில் இருந்து விலகிக் கொண்டார்.[70] ஷரபோவா மார்ச் மாதம் மீண்டும் சுற்றுப்பயணம் திரும்பினார். வி.என்.பி பரிபாஸ் ஓப்பன் தொடரில் நான்காம் சுற்றில் டிநர சபினா யும் கால் இறுதி சுற்றில் பெங் ஷூஐ யும் தோற்காடித்து அரையிறுதியை எட்டினார்.அரையிறுதி ஆட்டத்தில் கரோலின் வொஜ்னியக்கி யிடம் தோல்வியடைந்தார்.[71] பின் சோனி எரிக்சன் ஓப்பன் தொடரில் காலிறுதி போட்டியில் அலெக்ஸாண்ட்ரா துஹேரு வை எதிர் கொண்ட ஷரபோவா 3-6, 7-6, 7-6 என்ற செட் அடிப்படையில் வெற்றி கொண்டார்.இந்த போட்டி 3 மணித்தியாலம் 28 நிமிடங்கள் வரை நீடித்தது.[72] அரையிறுதியில் ஆண்ட்ரியா பெட்கோவிக் ஐ தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் தொடருக்கு பதிலடி கொடுத்த்தார்.இறுதி போட்டியில் விக்டோரியா அசரென்கா வை எதிர் கொண்ட ஷரபோவா 1-6, 4-6 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.[73] இதன் விளைவாக 2009 பிப்ரவரிக்கு பின் முதல் முறையாக உலக தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் திரும்பினார்.[46]

ரோலன்ட் கர்ரோஸ்சில் ஷரபோவா

களிமண் தரை மைதானத்தில் மூடு மாதிரிலென மாட்ரிட் ஓப்பன் தொடரில் மூன்றாவது சுற்றில் டொமினிக்க சிபுல்கோவா விடம் தோல்வியடைந்தார். மற்றும் இன்டெர்னஜிஒனாலி வி.என்.எல் தொடரில் இறுதி போட்டியில் சமந்தா ஸ்டோசர் யை தோற்கடித்து பட்டத்தினை தனதாக்கினார் ஷரபோவா.[74] பிரெஞ்சு ஓப்பனில் ஷரபோவா விளையாடும் போது உலகின் தரப்படுத்தலில் 7 வது இடத்தில் இருந்தார். அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் லி னா விடம் தோற்றார்.[75]

விம்பிள்டன் தொடரில் இறுதி போட்டியை எட்டிய ஷரபோவா 3-6, 4-6 என்ற செட் அடிப்படையில் பெட்ரா குவிடோவா விடம் தோல்வியடைந்தார்.[76] எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் முதல் இறுதி போட்டியை எட்டினார். பங்க் ஓப் வெஸ்ட் கிளாசிக் தொடரில் காலிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் டம் தோல்வியடைந்தார். ரோஜர்ஸ் கப் தொடரில் விளையாடிய ஷரபோவா கலீனா வோச்கொபோவா விடம் தோல்வியடைந்தார்.இதன் மூலம் ஷரபோவா 100 வது தோல்வியை சந்தித்தார்.[77]

வெஸ்டேர்ன் & சௌதேர்ன் ஓப்பன் தொடரின் இறுதி போட்டடியில் ஜெலீனா ஜனகோவிக் யை எதிர் கொண்டு 4-6, 7-6, 6-3 என்ற செட் வித்தியாசத்தில் போட்டியை தன்வசப்படுத்தி பட்டத்தினை வென்றார்.[78] இதன் காரணமாக உலக தரவரிசையில் நான்காம் இடத்திற்கு முன்னேறினார்.[79] அமெரிக்க ஓப்பனில் மூன்றாம் சுற்றில் 3-6, 6-3, 4-6 என்ற செட் அடிப்படையில் ப்லவியா பென்னேட்ட விடம் தோல்வியடைந்தார். தோராய் பான் பசிபிக் ஓப்பன் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதனால் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதன் காரணமாக சீனா ஓப்பன் தொடரிலும் இவரால் விளையாட முடியவில்லை. 2007 ஆம் ஆண்டு பின் முதல் தடவையாக டபிள்யூடிஏ சாம்பியன்ஷிப்ஸில் விளையாட இஸ்தான்புல் சென்றார். அந்த தொடரில் விளையாடும் போது அவர் டோக்கியோவில் கஷ்டப்பட்ட கணுக்கால் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். வருட இறுதியில் உலகின் தரப்படுத்தலில் நான்காவது வது இடத்தில் இருந்தார் ஷரபோவா.

2012:மீண்டும் உலக தரவரிசையில் முதலிடம் மற்றும் ஒலிம்பிக் வெள்ளி பதக்கம்[தொகு]

ஷரபோவா கணுக்கால் காயம் காரணமாக பிரிஸ்பேன் இண்டர்நேஷனலில் இருந்து விலகினார்.[80] அவர் உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் போது பருவத்தின் தனது முதல் தொடராக ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடினார். இந்த தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஷரபோவா இறுதி போட்டியில் 3-6, 0-6 என்ற செட் அடிப்படையில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்தார். எனினும் இதன் விளைவாக ஷரபோவா தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.பின்னர் பாரிஸ் ஓப்பனில் விளையாடிய ஷரபோவா காலிறுதியில் கேர்பேர் இடம் தோல்வியடைந்தார்.எனினும் உலக தரவரிசையில் இரண்டாம் நிலைக்கு முன்னோறினார்.

2012 கோடை ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள். செரினா வில்லியம்ஸ் டம் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் எடுத்தார் ஷரபோவா.

இந்தியன் வெல்ஸ் இல் களம் இறங்கி காலிறுதி ஆட்டத்தில் மரியா கீரிலேங்கோ விடம் மூன்று மணி நேரம் போராடி வெற்றி பெற்றார்.பின் அரையிறுதி ஆட்டத்தின் போது அனா இவனோவிச்சின் இடுப்பில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் இதனால் இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஷரபோவா.[81] இறுதி போட்டியில் விக்டோரியா அசரென்கா வை எதிர் கொண்ட ஷரபோவா 2-6, 3-6 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.அடுத்தபோட்டி தொடராக சோனி எரிக்சன் ஓப்பனில் விளையாடிய ஷரபோவா இறுதி போட்டியில் ரட்வான்ஸ்கா விடம் 7-5, 6-4 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.இது இந்த வருடத்தில் இறுதி போட்டிகளில் ஷரபோவா எட்டிய மூன்றவது தோல்வியாகும். உலக தரப்படுத்தலில் இரண்டாம் நிலை வீராக போர்ஸ் டென்னிஸ் கிராண்ட் பிரிக்ஸ் களம் இறங்கிய ஷரபோவா முதல் சுற்றில் பை மூலம் இரண்டாம் சுற்றுக்கு சென்றார்.அங்கு சிறப்பாக விளையாடிய ஷரபோவா இறுதி போட்டியில் விக்டோரியா அசரென்கா வை 1-6, 4-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.பின்னர் முத்து மாட்ரிட் ஓப்பனில் காலிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் டம் தோல்வியடைந்தார்.

இன்டெர்னஜிஒனாலி வி.என்.எல்(இத்தாலி ஓப்பன்) தொடரில் இறுதி போட்டியில் லி நா வை தோற்கடித்து தனது 26 வது பட்டத்தினை வென்றார் ஷரபோவா.[82] பிரெஞ்சு ஓப்பன் தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஷரபோவா அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரா க்விடோவா தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.இறுதி போட்டியில் சாரா இராணி யை தோற்கடித்து பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினை தனதாக்கினார் ஷரபோவா. இதன் மூலம் உலக தரவரிசையில் முதல் இடத்தினை பிடித்தார்.[83] மேலும் 2012 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா வை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என ரஷியன் ஒலிம்பி கமிட்டி அறிவித்தது.[84]

விம்பிள்டன் தொடரில் விளையாடும் போது ஷரபோவா தொடர்ச்சியாக 15 வெற்றி பெற்றிருந்தார்.எனினும் நான்காம் சுற்றில் அடைந்த தோல்வியினால் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.இதன் விளைவாக தரப்படுத்தலில் முதல் இடத்தினை இழந்தார்.அந்த இடத்தினை விக்டோரியா அசரென்கா பிடித்துக்கெண்டார். முதல் முறையாக 2012 ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் களம் இறங்கிய ஷரபோவா[85] சிப்பாக செயற்பட்டு இறுதி போட்டியை எட்டினார்.எனினும் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியுற்றார்.[86]

அமெரிக்க ஓப்பனில் காலிறுதியில் மரியோன் பர்டோலி யை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்தார்.[87] தோராய் பான் பசிபிக் ஓப்பன் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் சமந்த ஸ்டோசூர் இடம் தோல்வியடைந்தார்.[88] சீனா ஓப்பன் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்தார்.[89] ஆண்டு இறுதியில் சாம்பியன்ஷிப் தொடரில் களம் இறங்கி விளையாடி ஷரபோவா இறுதி போட்டியில் 13 வது முறையாக செரீனா வில்லியம்ஸ் இடம் தோல்வியடைந்தார்.[90]

தொழில் புள்ளிவிபரம்[தொகு]

கிராண்ட் ஸ்லாம் போட்டி[தொகு]

செயல்திறன் காலவரிசை[தொகு]

செயல்திறன் விசை
வெ    அ.இ கா.இ சு லீ த.பெ தசு வ# டேஆ அஇ-வெ இ-வெ ஒமுஅ போந
போட்டிகள் 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 மதிப்பெண் % வெ-தோ வெ %
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சு 3 சு அ.இ அ.இ வெ 1 சு 4 சு அ.இ 4 சு 1 / 12 42-10 80.77%
பிரெஞ்சு ஓப்பன் 1 சு கா.இ கா.இ 4 சு அ.இ 4 சு கா.இ 3 சு அ.இ வெ வெ 2 / 12 50–10 83.33%
விம்பிள்டன் 4 சு வெ அ.இ அ.இ 4 சு 2 சு 2 சு 4 சு 4 சு 2 சு 4 சு 1 / 11 38–10 79.16%
அமெரிக்க ஓப்பன் 2 சு 3 சு அ.இ வெ 3 சு 3 சு 4 சு 3 சு அ.இ 4 சு 1 / 9 29–8 78%
வெற்றி-தோல்வி 4–4 15–3 19–4 20–3 16–4 11–2 7–3 8–4 16–4 21–3 12–3 16-3 5 / 45 162-40 82.20%

குறிப்பு:2003 ஆஸ்திரேலிய ஓப்பன் மற்றும் 2003 பிரஞ்சு ஓப்பன் ஷரபோவா முக்கிய டிராவில் உள்ளிடவும் பொருட்டு ஒவ்வொரு போட்டியில் மூன்று தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றது.

இறுதி: 8 (4 வெற்றி, 4 இரண்டாம் நிலை)[தொகு]

முடிவு ஆண்டு பெருவெற்றித் தொடர் மேற்பரப்பு எதிர் புள்ளிகள்
வெற்றி 2004 விம்பிள்டன் புல் ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–4
வெற்றி 2006 அமெரிக்க ஓப்பன் கடின பெல்ஜியம் ஜஸ்டின் ஹெனின் 6–4, 6–4
இரண்டாம் இடம் 2007 ஆஸ்திரேலிய ஓப்பன் கடின ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 1–6, 2–6
வெற்றி 2008 ஆஸ்திரேலிய ஓப்பன் கடின செர்பியா அனா இவனோவிச் 7–5, 6–3
இரண்டாம் இடம் 2011 விம்பிள்டன் புல் செக் குடியரசு பெத்ரா கிவிதோவா 3–6, 4–6
இரண்டாம் இடம் 2012 ஆஸ்திரேலிய ஓப்பன் (2) கடின தரை பெலருஸ் விக்டோரியா அசரென்கா 3–6, 0–6
வெற்றி 2012 பிரெஞ்சு ஓப்பன் மண் இத்தாலி ஸாரா எர்றணி 6–3, 6–2
இரண்டாம் இடம் 2013 பிரெஞ்சு ஓப்பன் மண் ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 4–6, 4–6
வெற்றி 2014 பிரெஞ்சு ஓப்பன் மண் உருமேனியா சைமானா ஏல்ப்பு 6–4, 6–7(5–7), 6–4
இரண்டாம் இடம் 2015 ஆஸ்திரேலிய ஓப்பன் மண் ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 6–3, 7–6(7–5)

ஆண்டு இறுதி சாம்பியன்ஷிப்[தொகு]

செயல்திறன் காலவரிசை[தொகு]

போட்டிகள் 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 மதிப்பெண் % வெ-தோ வெ %
டபிள்யு டி எ த.பெ த.பெ த.பெ வெ அ.இ அ.இ த.பெ த.பெ இ.வி லீ 1 / 7 18–10 64.3
வெற்றி-தோல்வி 0–0 0–0 0–0 4–1 2–2 3–1 4–1 0–0 0–0 0–0 0–2 4–1 0–0 1–2

இறுதி: 3 (1 வெற்றி, 2 இரண்டாம் நிலை)[தொகு]

முடிவு ஆண்டு வெற்றித் தொடர் மேற்பரப்பு எதிர் புள்ளிகள்
வெற்றி 2004 லாஸ் ஏஞ்சல்ஸ் கடின (i) ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 4–6, 6–2, 6–4
இரண்டாம் இடம் 2007 மாட்ரிட் கடின (i)) பெல்ஜியம் ஜஸ்டின் ஹெனின் 7–5, 5–7, 3–6
இரண்டாம் இடம் 2012 இஸ்தான்புல் கடின (i) ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 4–6, 3–6

(i) = மூடிய

விருதுகள்[தொகு]

2003
2004
  • டபிள்யூ டி ஏ ஆண்டின் சிறந்த வீரர்[92]
  • டபிள்யூ டி ஏ ஆண்டின் மேம்படுத்தப்பட்ட வீரர்[92]
2005
  • ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்[92]
  • பிரிக்ஸ் டி சிட்ரான் ரோலன்ட் கர்ரோஸ்[93]
2006
2007
  • ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்[92]
  • ஈ.எஸ்.பீ.வை சிறந்த சர்வதேச தடகள பெண்[92]
2008
  • ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்[94]
2010
  • டபிள்யூ டி ஏ ரசிகர் பிடித்த ஒற்றையர் வீரர்[92]
  • டபிள்யூ டி ஏ ஆண்டின் மனிதாபிமான வீரர்[92]
  • டபிள்யூ டி ஏ மிகவும் நாகரீகமாக வீரர்(விளையாட்டு மைதானதின் உள்ளே)[92]
  • டபிள்யூ டி ஏ மிகவும் நாகரீகமாக வீரர்(விளையாட்டு மைதானதின் வெளியே)[92]
  • டபிள்யூ டி ஏ பெரும்பாலான தத்ரூபமான வெளிப்பாடு[92]
2012

மேற்கோள்கள்[தொகு]

பொதுவானது

  • "Players: Maria Sharapova". WTA. பார்க்கப்பட்ட நாள் April 19, 2013.

குறிப்புகள்

  1. "WTA Million Dollar Club" (PDF). WTA. பார்க்கப்பட்ட நாள் June 8, 2014.
  2. WTA official site: WTA Singles Rankings
  3. இரண்டாம் நிலை தரவரிசை
  4. "Maria Sharapova reclaims world number one ranking". June 8, 2012 இம் மூலத்தில் இருந்து ஜூலை 28, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130728161149/http://www.3news.co.nz/Maria-Sharapova-reclaims-world-number-one-ranking/tabid/415/articleID/257186/Default.aspx. 
  5. "Eddie Herr Past Champions". Eddie Herr Official Website. Archived from the original on ஜூலை 25, 2012. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "Eddie Herr International Special Awards" (PDF). Eddie Herr Official Website. Archived (PDF) from the original on மார்ச் 17, 2012. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. Nick Collins (June 24, 2009). "Wimbledon 2009: Maria Sharapova – 20 facts you didn't know". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் July 19, 2010.
  8. ITF Tennis Player Profile பரணிடப்பட்டது 2013-06-16 at the வந்தவழி இயந்திரம், ITF Juniors
  9. Liz Schroeder (November 10, 2003). "WTA Tour Singles Ranking 2003" (PDF). WTA. Archived from the original (PDF) on செப்டம்பர் 28, 2017. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Sharapova dismisses Dokic". BBC. June 28, 2003. http://news.bbc.co.uk/sport2/hi/tennis/wimbledon_2003/3028488.stm. பார்த்த நாள்: May 12, 2013. 
  11. "Sharapova handed Bell Challenge title". USA Today Co. November 2, 2003. பார்க்கப்பட்ட நாள் May 12, 2013.
  12. "Sharapova edges nearer to summit". BBC. May 13, 2005. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/4544729.stm. பார்த்த நாள்: August 7, 2011. 
  13. Stephen Bierley (June 1, 2005). "Henin reduces Sharapova to dust". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் June 8, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  14. "Sharapova keeps Birmingham title". பிபிசி. June 12, 2005. பார்க்கப்பட்ட நாள் June 8, 2013.
  15. "Williams ends Sharapova's defence". பிபிசி. June 30, 2005. பார்க்கப்பட்ட நாள் June 8, 2013.
  16. 16.0 16.1 16.2 16.3 "Q&A: Sharapova's First Business Aims for the Sweet Spot". The Moscow Times. April 26, 2013. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  17. "Sharapova, Henin-Hardenne advance to Open final". ESPN. September 8, 2006. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  18. "Sharapova into all-Russian final". பிபிசி. March 18, 2006. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  19. "Sharapova wins Pacific Life". Chicago Tribune. March 19, 2006. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  20. "Sharapova Falls at French Open". த நியூயார்க் டைம்ஸ். June 4, 2006. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  21. "Mauresmo survives lapse to reach Wimbledon final". ABC. July 7, 2006. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  22. "Sharapova outlasts Clijsters in Acura final". USA Today. August 6, 2006. http://usatoday30.usatoday.com/sports/tennis/2006-08-06-acura-classic_x.htm. பார்த்த நாள்: May 31, 2013. 
  23. "Sharapova stops No. 1 Mauresmo, will meet Henin-Hardenne in U.S. Open final". USA Today. September 8, 2006. http://usatoday30.usatoday.com/sports/tennis/open/2006-09-08-day-12_x.htm?POESPOISVA. பார்த்த நாள்: May 31, 2013. 
  24. "Sharapova drops Henin-Hardenne to win U.S. Open title". ESPN. September 12, 2006. பார்க்கப்பட்ட நாள் May 31, 2013.
  25. "Henin-Hardenne came up aces". Sun Sentinel. November 26, 2006. Archived from the original on ஜூன் 6, 2014. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  26. "Leg injury forces Sharapova out". பிபிசி. February 3, 2007. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013.
  27. "Sharapova sets up Venus showdown in rainy Miami". Reuters. March 27, 2007. Archived from the original on செப்டம்பர் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  28. "Sharapova battles to Istanbul win". பிபிசி. May 24, 2007. பார்க்கப்பட்ட நாள் May 22, 2013.
  29. "Ivanovic stuns Sharapova to set up Henin showdown". தி கார்டியன். June 7, 2007. பார்க்கப்பட்ட நாள் May 22, 2013.
  30. "Jankovic seals win over Sharapova". பிபிசி. June 17, 2007. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  31. "Sharapova loses to teen Radwanska". BBC. September 1, 2007. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/6974187.stm. பார்த்த நாள்: July 23, 2008. 
  32. "Sharapova crashes out in Moscow". பிபிசி. October 10, 2007. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  33. Joel Drucker (December 13, 2007). "Strong finish for Sharapova; stronger return by Davenport". ESPN. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  34. "Brilliant Sharapova hammers Henin". BBC. January 22, 2008. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/7201953.stm. பார்த்த நாள்: August 7, 2011. 
  35. Clarey, Christopher (January 24, 2008). "Sharapova Reaches the Final Again and Hopes for a Better Outcome". The New York Times. http://www.nytimes.com/2008/01/24/sports/tennis/24tennis.html?fta=y. பார்த்த நாள்: August 7, 2011. 
  36. "Sharapova wins epic battle". BBC. April 11, 2008. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/7341970.stm. பார்த்த நாள்: May 4, 2013. 
  37. "Tennis: Serena Williams beats Maria Sharapova 4th time in a row". The Seattle Times. April 19, 2008. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  38. "Sharapova to take over top ranking from retired Henin". ESPN. May 15, 2008. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  39. Clarey, Christopher (June 3, 2008). "Sharapova Roars, but She Is Silenced by Safina Once Again". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2008/06/03/sports/tennis/03tennis.html. பார்த்த நாள்: August 7, 2011. 
  40. "Sharapova to drop from top spot after French Open". ESPN. June 3, 2008. பார்க்கப்பட்ட நாள் August 7, 2011.
  41. "Sharapova loss just the start of a chaotic day at Wimbledon". ESPN. June 27, 2008. பார்க்கப்பட்ட நாள் August 7, 2011.
  42. "Sharapova withdraws from Rogers Cup". Canadian Broadcasting Corporation. July 31, 2008. http://www.cbc.ca/sports/story/2008/07/30/rogers-cup-three.html. பார்த்த நாள்: May 4, 2013. 
  43. "Sharapova to miss US Open & Games". BBC. August 1, 2008. http://news.bbc.co.uk/sport2/hi/olympics/tennis/7536416.stm. பார்த்த நாள்: May 4, 2013. 
  44. Christine Brennan (June 30, 2011). "Sharapova back at last where she belongs". USA Today. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  45. Linda Pearce (January 12, 2009). "Sharapova out after shoulder fails to recover". The Age. Fairfax Digital. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  46. 46.0 46.1 46.2 name="wtatennis"
  47. "Bondarenko wins in straight sets". ESPN. May 21, 2009. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  48. Mark Hodgkinson (June 2, 2009). "French Open 2009: Maria Sharapova and the curse of the cover stars". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  49. "Sharapova broken six times in loss". ESPN. June 13, 2009. http://sports.espn.go.com/sports/tennis/news/story?id=4256242. பார்த்த நாள்: June 9, 2013. 
  50. Hodgkinson, Mark (June 24, 2009). "Wimbledon 2009: Maria Sharapova suffers shock defeat by Gisela Dulko". த டெயிலி டெலிகிராப். http://www.telegraph.co.uk/sport/tennis/wimbledon/5624035/Wimbledon-2009-Maria-Sharapova-suffers-shock-defeat-by-Gisela-Dulko.html. பார்த்த நாள்: May 18, 2013. 
  51. "Oudin's run continues; Safina exits early". ESPN. September 6, 2009. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  52. "Sharapova lands Tokyo title as Jankovic quits". CNN. October 3, 2009. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  53. "Tired Maria Sharapova knocked out of China Open by Peng Shuai". தி கார்டியன். October 7, 2009. பார்க்கப்பட்ட நாள் June 9, 2013.
  54. Mark Hodgkinson (January 18, 2010). "Australian Open 2010: Maria Sharapova dumped out by Maria Kirilenko". த டெயிலி டெலிகிராப். London. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010.
  55. "Maria Sharapova beats Sofia Arvidsson in Memphis final". BBC Sport. January 21, 2010. http://news.bbc.co.uk/sport2/hi/tennis/8526723.stm. பார்த்த நாள்: February 22, 2010. 
  56. "Sharapova suffers fresh setback after elbow injury". CNN. March 18, 2010. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010.
  57. "Serena Williams, Sharapova withdraw from Family Circle Cup". United States Tennis Association. April 9, 2010. Archived from the original on ஏப்ரல் 13, 2010. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  58. "Sharapova wins second 2010 title at Strasbourg". The China Post. Taiwan (ROC). May 24, 2010. Archived from the original on செப்டம்பர் 25, 2012. பார்க்கப்பட்ட நாள் June 12, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  59. "Sharapova tests Serena". Sky Sports. June 29, 2010. Archived from the original on ஜூலை 1, 2010. பார்க்கப்பட்ட நாள் July 3, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  60. "Azarenka rolls past Sharapova to win Bank of the West title". USA Today. February 8, 2010. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  61. "Clijsters Storms Back to Win 2010 Women's Open". WTA. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  62. "Maria Sharapova loses in 4th round". ESPN. September 7, 2010. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  63. "Japan's Date Krumm ousts Sharapova at Pan Pacific Open". USA Today. September 29, 2010. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  64. "Tired Maria Sharapova knocked out of China Open by Peng Shuai". தி கார்டியன். October 7, 2010. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  65. "2010: Year-End Top 20". WTA. November 10, 2010. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  66. Matthew Cronin (December 4, 2010). "Sharapova hires Hogstedt to co-coach with Joyce". TENNIS.com. பார்க்கப்பட்ட நாள் December 8, 2010.
  67. "Maria & Vera In Monterrey". WTA. December 7, 2010. Archived from the original on ஜூன் 15, 2013. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  68. Official Mariah Sharapova Website (January 16, 2011). "Maria Sharapova Australian Open 1st round Interview". Official Mariah Sharapova Website. Archived from the original on மார்ச் 7, 2012. பார்க்கப்பட்ட நாள் January 18, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  69. Anton Denisov (January 23, 2011). "Russia's Sharapova loses out to Germany's Petkovic in Australian Open". பார்க்கப்பட்ட நாள் July 5, 2011.
  70. Ravi Ubha (February 16, 2011). "Work to do for Roddick and the Americans". ESPN. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  71. Beth Harris (March 20, 2011). "Wozniacki Wins BNP Paribas Open, Beats Marion Bartoli In Finals". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  72. "Russia's Sharapova moves into semis at Miami tennis tournament". RIA Novosti. March 30, 2011. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  73. "Victoria Azarenka routs Sharapova". ESPN. January 29, 2011. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  74. "Sharapova's Greatest Clay Court Triumph". WTA. May 15, 2011. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  75. Louisa Baker (June 2, 2011). "Li sweeps Sharapova aside for tilt at title". Archived from the original on மார்ச் 22, 2012. பார்க்கப்பட்ட நாள் June 4, 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  76. Piers Newbery (July 2, 2011). "Wimbledon 2011: Petra Kvitova beats Maria Sharapova to title". BBC. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  77. "Serena Shines In QFs, Lisicki Awaits In SFs". WTA. July 29, 2011. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  78. Shannon Russell (August 22, 2011). "Sharapova wins women's title". Cincinnati.com. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  79. "Ranking Watch: Maria Moves Up To No. 4". WTA. August 22, 2011. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  80. Musall, Jeff (April 20, 2011). "Maria Sharapova Withdraws from Brisbane, Still on for Australian Open: Fan Reaction – Tennis – Yahoo! Sports". Sports.yahoo.com. Archived from the original on ஜூன் 21, 2013. பார்க்கப்பட்ட நாள் January 25, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  81. Greg Heakes (May 17, 2012). "Ivanovic sweats on extent of hip injury". Google. Archived from the original on June 15, 2013. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013.
  82. "Maria Sharapova". BBC. May 20, 2013. பார்க்கப்பட்ட நாள் May 21, 2012.
  83. "Sharapova savours her 'sweetest triumph' as reward for comeback". The Independent. June 11, 2012. http://www.independent.co.uk/sport/tennis/sharapova-savours-her-sweetest-triumph-as-reward-for-comeback-7834856.html. பார்த்த நாள்: June 11, 2012. 
  84. Reid Cherner (June 14, 2012). "Maria Sharapova to carry Russian flag in opening ceremony". CBS Sports. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  85. "Serena, Maria Sharapova in final". ESPN. August 3, 2012. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  86. "London 2012 Olympics: Serena Williams storms to gold medal as she thrashes Maria Sharapova in women's final". பார்க்கப்பட்ட நாள் August 4, 2012.
  87. Jane McManus (September 6, 2012). "Maria Sharapova reigns after rain". ESPN. Archived from the original on செப்டம்பர் 7, 2012. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  88. "Sharapova and Azarenka out in Tokyo". ESPN. September 27, 2012. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013.
  89. "Azarenka overwhelms Sharapova to win China Open". China Central Television. October 8, 2012. Archived from the original on ஜனவரி 4, 2013. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  90. "Scores". WTA. Archived from the original on ஆகஸ்ட் 10, 2013. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  91. "WTA Awards". WTA. பார்க்கப்பட்ட நாள் April 29, 2013.
  92. 92.00 92.01 92.02 92.03 92.04 92.05 92.06 92.07 92.08 92.09 92.10 "Players: Maria Sharapova". WTA. பார்க்கப்பட்ட நாள் April 29, 2013.
  93. "Communiqués de presse" (in French). Prix Orange. Archived from the original on நவம்பர் 13, 2008. பார்க்கப்பட்ட நாள் September 6, 2011. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  94. "Women's Tennis". Hickock Sports. Archived from the original on பிப்ரவரி 23, 2002. பார்க்கப்பட்ட நாள் September 6, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  95. Richard Langford (July 12, 2012). "2012 ESPY Awards Winners: Results, Recap and Top Moments". Bleacher Report. பார்க்கப்பட்ட நாள் May 4, 2013.
  96. "Указ Президента Российской Федерации от 28.04.2012 № 529 "О награждении государственными наградами Российской Федерации"" (in Russian). Government of Russia. Archived from the original on மே 17, 2012. பார்க்கப்பட்ட நாள் May 5, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  97. "Указ Президента Российской Федерации от 13 августа 2012 года № 1165 "О награждении государственными наградами Российской Федерации"" (in Russian). Government of Russia. Archived from the original on ஏப்ரல் 23, 2013. பார்க்கப்பட்ட நாள் May 5, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_சரப்போவா&oldid=3791869" இலிருந்து மீள்விக்கப்பட்டது