உள்ளடக்கத்துக்குச் செல்

மகளிர் டென்னிசு சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டபிள்யூடிஏ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகளிர் டென்னிசு சங்கம்
WTA
100
விளையாட்டு தொழில்முறை டென்னிசு
நிறுவபட்ட நாள் 1973
அவைத்தலைவர் ஸ்டேசி அல்லாஸ்டர்
தலைமை நிர்வாகி ஸ்டேசி அல்லாஸ்டர்
அலுவல்முறை இணையதளம்
www.wtatennis.com

1973ஆம் ஆண்டு பில்லி ஜீன் கிங்கால் நிறுவபட்ட மகளிர் டென்னிசு சங்கம் (Women's Tennis Association (WTA), மகளிருக்கான தொழில்முறை டென்னிசு போட்டிகளை ஒழுங்கமைக்கும் முதன்மையானதொரு அமைப்பாகும். உலகெங்கும் நடத்தப்படும் டபிள்யூடிஏ சுற்று எனப்படும் மகளிருக்கான டென்னிசு போட்டிகளை மேலாண்மை செய்கிறது. இதன் இணையான ஆடவருக்கான அமைப்பு டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் (ATP) ஆகும். 1974ஆம் ஆண்டு இதன் செயல் இயக்குனராக பொறுபேற்ற சான் பிரான்சிஸ்கோவின் ஜெர்ரி டயமண்ட் 1985ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். பெண் விளையாட்டுக்காரர்களுக்கான இந்த அமைப்பின் புள்ளிமுறைமையை இவரே உருவாக்கியதாக கருதப்படுகிறது. இதன் நிறுவன தலைமையகம் புளோரிடாவின் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் அமைந்துள்ளது ஐரோப்பிய தலைமையகம் லண்டனிலும் ஆசிய-பசிபிக் தலைமையகம் பீஜிங்கிலும் அமைந்துள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகளிர்_டென்னிசு_சங்கம்&oldid=3917864" இலிருந்து மீள்விக்கப்பட்டது