மக்பூப் அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்பூப் அலி கான் பகதூர்
1903 இல் கான்
ஐதராபாத் இராச்சியத்தின் ஆறாவது நிசாம்
ஆட்சிக்காலம்26 பிப்ரவரி 1869 – 29 ஆகஸ்ட் 1911
முன்னையவர்அப்சல் உத்-தௌலா, ஐந்தாம் ஆசப் ஜா
பின்னையவர்ஓசுமான் அலி கான்
பிறப்பு17 ஆகஸ்ட் 1866
புராணி அவேலி, ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய தெலங்காணா, இந்தியா)
இறப்பு29 ஆகஸ்ட் 1911 (வயது 45)
பாலாக்ணுமா அரண்மனை, ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய தெலங்காணா, இந்தியா)
புதைத்த இடம்
துணைவர்அமத்-உசு-செகிரா பேகம்
மரபுஆசப் ஜாகி வம்சம்
தந்தைஅப்சல் உத்-தௌலா, ஐந்தாம் ஆசப் ஜா
மதம்சுன்னி இசுலாம்

ஆறாம் ஆசப் ஜா (Asaf Jah VI) (17 ஆகஸ்ட் 1866 - 29 ஆகஸ்ட் 1911) சர் மிர் மக்பூப் அலி கான் சித்திகி பயஃபண்டி என்றும் அழைக்கப்படும் இவர் ஐதராபாத்தின் ஆறாம் நிசாம் ஆவார். இவர் 1869 மற்றும் 1911 க்கு இடையில் இந்தியாவின் சமஸ்தானங்களில் ஒன்றான ஐதராபாத்து மாநிலத்தை ஆட்சி செய்தார்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிறுவயது மக்பூப் அலி கான்
ஐதராபாத்தின் நிசாமாக மக்பூப் அலி கான் பதவியேகும் விழாவில் இந்தியத் தலைமை ஆளுநர் கலந்து கொண்ட ஓர் ஓவியம்

மக்பூப் அலி கான் 1866 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஐதராபாத் இராச்சியத்தில், (தற்போதைய ஐதராபாத்து ) உள்ள புராணி அவேலியில், 5 வது நிசாம், அப்சல்-உத்-தௌலாவின் இளைய மகனாகப் பிறந்தார்.[3] பிப்ரவரி 29 அன்று, மக்பூப் அலி கான், தனது தந்தை அப்சல்-உத்-தௌலாவின் இறப்பிற்கு ஒரு நாள் முன்னதாக அரியணை ஏறினார். அப்போது திவான் முதலாம் சலார் சங் மற்றும் மூன்றாம் சம்சு-உல்-உம்ரா ஆகியோர் அரசப் பிரதிநிதியாக இருந்தனர். அப்போது அலி கானுக்கு இரண்டு வயது ஏழு மாதங்களே ஆகியிருந்தது.[4] முதலாம் சலார் சங்குடன் இணைந்து, மூன்றாம் சம்சு-உல்-உம்ரா இணை-அரசப் பிரநிதியாகப் பணியாற்றினார்.[5]

மேற்கத்திய கல்வியைப் பெற மக்பூப் அலி கானுக்கு, சௌமகல்லா அரண்மனையில் தளபதி ஜான் கிளார்க்கின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டது. சலார் சங், சம்சு-உல்-உம்ரா மற்றும் கிஷான் பிரசாத் ஆகியோரின் குழந்தைகளும் இங்கு இவருடன் படித்தனர். ஆங்கிலம் தவிர, இவருக்கு பாரசீகம், அரபு மற்றும் உருது மொழிகளும் கற்பிக்கப்பட்டன. 1874 ஆம் ஆண்டில், எடின்பர்க் டியூக்கின் முன்னாள் ஆசிரியரான கேப்டன் ஜான் கிளார்க், இவருக்கு ஆங்கிலம் கற்பிக்க நியமிக்கப்பட்டார். [5] கிளார்க் "இளம் மக்பூப் உயர் ஆங்கில சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை" உள்வாங்கினார் எனக் கூறுகிறார்.[6] நிசாமின் கல்வியை மேற்பார்வை செய்வதில் பங்கு கொண்டவரும், இறுதியில் நிசாமுக்கு நெருக்கமான மற்றும் ஆலோசகராவும் மாறிய[7] ஒரு இந்திய ஆசிரியரான நவாப் ஆகா மிர்சா சர்வார் அல்-முல்க் என்பவருடன் கிளார்க் நெருக்கமாக பணியாற்றினார்.

இளம் நிசாம் தனது இரண்டு ஆட்சியாளர்கள் மற்றும் பிற பிரபுக்களுடன்
ஐதராபாத்துமக்கா பள்ளிவாசலின் தொழுகை மண்டபத்திற்கு அருகில் உள்ள 6வது நிசாம் மீர் மக்பூப் அலிகானின் கல்லறை -

மக்பூப் அலிகானுக்கு பதினாறு வயது அடைந்தவுடன் சலார் ஜங் இவருக்கு மாநிலத்தின் நிர்வாக செயல்முறைகளுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார். பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் இவருக்கு துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கற்பிப்பார்கள்.[8] மக்பூப் அலி கான் வயது முதிர்ந்தவுடன் சலார் சங்கும் மற்றும் சம்சு-உல்-உம்ரா ஆகியோரின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. இவரது பதவியேற்பு விழா 5 பிப்ரவரி 1884 அன்று நடந்தது. இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த ரிப்பன் பிரபு அங்கு வந்து வைரங்கள் பதித்த தங்க வாளை இவருக்கு வழங்கினார்.[6] மக்பூப் அலி கான் , ஹிஸ் எக்ஸால்ட்டட் ஹைனஸ் ஆசஃப் ஜா, முசாபர்-உல்-முல்க், நவாப் மஹ்பூப் அலி கான் பகதூர், பதே ஜங் எனப் பட்டம் பெற்றார்.[9]

இரயில்வேயின் வளர்ச்சி[தொகு]

நிசாம்களுக்குச் சொந்தமான நிசாம்களின் உத்திரவாத மாநில இரயில்வே என்ற ஒரு இரயில்வே நிறுவனம், 1879 இல் நிறுவப்பட்டது [10] ஐதராபாத் மாநிலத்தை பிரித்தானிய இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்க இது செகந்திராபாத் தொடருந்து நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் கட்டுமானம் 1870 இல் தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, செகந்திராபாத்-வாடி பாதை முடிக்கப்பட்டது. 1879 இல், நிசாமின் அரசுக்கு சொந்தமான இரயில்வேயால் நிர்வகிக்கப்பட்டது.[11]

சுதந்திரத்திற்குப் பிறகு, இது இந்திய ரயில்வேயுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இரயில்வேயின் அறிமுகம் ஐதராபாத்தில் தொழில்துறை தொடங்க ஆரம்பித்தது. இதையொட்டி மேலும் உசேன் சாகர் ஏரியின் தெற்கு மற்றும் கிழக்கில் நான்கு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன.[12]

கல்வி வளர்ச்சி[தொகு]

மகபூப் அலி கான் இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரியான ஐதராபாத்து மருத்துவக் கல்லூரியை நிறுவினார். இது உலகிலேயே முதன்முறையாக குளோரோபாரம் கையாளும் கல்லூரியானது. 1873 ஆம் ஆண்டில், ஐதராபாத்து நகரத்தில் 14 பள்ளிகளும், பிற மாவட்டங்களில் 141 பள்ளிகளும் துவங்கப்பட்டன. இவர் இறக்கும் போது இது 1000ஐ எட்டியது.[13]

ஆர்ச்டியூக் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் 1893இல் பிரான்ஸ் பேர்டினண்ட் ஐதராபாத்து வந்திருந்தபோது நிசாமைச் சந்தித்தபோது எடுக்கப்பட்டப் புகைப்படம்.
1889 , இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸில் வெளியிடப்பட்ட மக்பூப் அலி கான், ஆறாம் ஆசப் ஜாவின் படம்.

ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகள்[தொகு]

பஞ்சம்[தொகு]

1876-1878 ஆம் ஆண்டில் ஒரு பெரும் பஞ்சம் இவரது ஆட்சியின் போது ஏற்பட்டது. ஐதராபாத்து உட்பட முழு தக்காணமும் உணவுப் பற்றாக்குறையால் பேரழிவிற்கு உட்பட்டது. இது பிரித்தானியர்களின் கொள்கைகளால் பெரிதும் மோசமடைந்தது. நிசாம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார். இது சோலாப்பூர் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐதராபாத்துக்குத் தப்பி வந்தனர்.[14]

தர்பார்[தொகு]

இந்தியாவின் பேரரசராக ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு பதவியேற்றதைக் குறிக்கும் வகையில் 1903 ஆம் ஆண்டு நடந்த தில்லி தர்பார் கொண்டாட்டங்களில் நிசாம் மக்பூப் அலி கான் கலந்து கொண்டார்.[15]

1908 வெள்ளம்[தொகு]

1908 ஆம் ஆண்டின் ஏற்பட்ட முசி ஆற்றின் பெரு வெள்ளம் ஐதராபாத்து நகரத்தை அழித்தது. [16] குறைந்தது 200,000 மக்களைப் பாதித்தது. மேலும், 15,000 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளம் இயல்பான நிலைமை திரும்பும் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தனது அரண்மனையில் தங்க வைத்தார்.[17][18][19] கட்டா மைசம்மா கோயிலின் பூசாரியின் வழிகாட்டுதலின் பேரில், இவரும் ஒரு வேள்வியில் பங்கேற்றார். மேலும் வேள்வி தொடங்கிய சில மணிநேரங்களில் தண்ணீர் குறையத் தொடங்கியது என்று நம்பப்படுகிறது.[20]

சதி தடை[தொகு]

உடன்கட்டை ஏறுதல் என்பது கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு பாரம்பரியமாகும். இது குறித்து கவலைக் கொண்ட நிசாம் தனது ராச்சியத்தின் சில பகுதிகளில் தடை செய்தார். மேலும், அது தொடர்வதை தீவிரமாகக் கவனித்தார். இவர் 12 நவம்பர் 1876 அன்று ஒரு "கட்டளையையும்" (பிர்மான்)[21] வெளியிட்டார்.[22]

சொந்த வாழ்க்கை[தொகு]

தனது மகன் மீர் ஓசுமான் அலி கானுடன் நிசாம் மக்பூப் அலி கான்

இந்தியத் தலைமை ஆளுநர், லிட்டன் பிரபுவின் கூற்றுப்படி, திவான் முதலாம் சலார் ஜங் நிசாமை வைத்து அரசின் அதிகாரத்தை தன் கைகளில் குவித்து வைத்திருக்க விரும்பினார்.[23]

திருமணம்[தொகு]

இவர் 18 வயதில் படிக்கும் போது காதலித்த சலார் ஜங்கின் மகள் அமாத் உசு சக்ரா பேகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[24][25] இவர்களுக்கு ஏழு மகன்கள் மற்றும் ஏழு மகள்கள் இருந்தனர். மீர் ஓசுமான் அலி கான் இவரது வாரிசானார்.

வாழ்க்கை முறை[தொகு]

நிசாம் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் உடைகள் மற்றும் தானுந்து வாகனச் சேகரிப்புக்காக நன்கு அறியப்பட்டவர். இவரது ஆடை சேகரிப்பு அந்த நேரத்தில் உலகின் மிக விரிவான ஒன்றாகும். இவர் தனது அரண்மனை முழுவதையும் தனது அலமாரிக்காக அர்ப்பணித்தார். மேலும், ஒரே ஆடையை இரண்டாம் முறை அணிய மாட்டார். இவர், உலகின் ஐந்தாவது பெரிய ஜேக்கப் வைரத்தை வாங்கினார். இது இப்போது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிசாம்களின் நகைகளில் தனித்து நிற்கிறது.

நிசாம் உருது, தெலுங்கு மற்றும் பாரசீக மொழிகளிலும் சரளமாகப் புலமை பெற்றிருந்தார் . இவர் தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் கவிதைகள் எழுதினார். அவற்றில் சில உசேன் சாகர் ஏரியின் சுவர்களில் "ஒரு தீவிர வேட்டையாடுபவன்,[26] குறைந்தது 30 புலிகளைக் கொன்றவன்"[27] எனப் பொறிக்கப்பட்டுள்ளன.

இறப்பு[தொகு]

நிசாம் மக்பூப் அலிகான் 29 ஆகஸ்ட் 1911 அன்று தனது 45வது வயதில் இறந்தார். இவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் தனது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர், இவரது இரண்டாவது மகன் மீர் உஸ்மான் அலி கான் நிசாமாகப் பதவியேற்றார். [28]

மாய சக்திகள்[தொகு]

பாம்புக்கடிக்கு எதிரான குணப்படுத்தும் சக்தி தனக்கு இருப்பதாக நிசாம் கூறினார். பொதுமக்களில் யாரேனும் பாம்பு கடித்தால் தன்னை அணுகலாம் என்று உத்தரவும் இட்டார். இதன் விளைவாக, பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்காக இவர் மீண்டும் மீண்டும் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார்.[29][30] to cure people of snakebites.[31]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Law, John (1914), Modern Hyderabad (Deccan), Thacker, Spink & Company, pp. 27–28
  2. Balfour, Edward (1885). The cyclopædia of India and of Eastern and Southern Asia. B. Quaritch. பக். 897. https://archive.org/details/bub_gb_3U0OAAAAQAAJ. 
  3. Luther, Narendra (2003), Raja Deen Dayal: Prince of Photographers, Hyderabadi, p. 41, ISBN 9788190175203
  4. "A brief history of the Nizams of Hyderabad". Outlook. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  5. 5.0 5.1 Luther 2003, ப. 45.
  6. 6.0 6.1 Seshan, K.S.S. (2 February 2017). "Mahboob Ali Pasha: Legend with a lavish lifestyle". தி இந்து. https://www.thehindu.com/society/history-and-culture/Mahboob-Ali-Pasha-Legend-with-a-lavish-lifestyle/article17138528.ece. 
  7. Server ul-Mulk, Nawab (1931). My Life. London: Stockwell. பக். ix. 
  8. Lynton, Harriet Ronken; Rajan, Mohini (1974). The Days of the Beloved. University of California Press. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-02442-7. https://books.google.com/books?id=DhYjiciXlwwC. 
  9. M. Hassan (2002). HISTORY OF ISLAM (2 Vols. Set). Adam Publishers. பக். 674. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174350190. 
  10. Law 1914, ப. 26–28.
  11. Lynton & Rajan 1974, ப. 56–57.
  12. "Staying at Falaknuma is like holding a mirror up to our past". 2012-09-16.
  13. Bhangya, Bhukya (2013). "Between Tradition and Modernity: Nizams, Colonialism and Modernity in Hyderabad State". Economic and Political Weekly 48 (48): 120–125. 
  14. Davis, Mike. "Late Victorian Holocausts: El Niño Famines and the Making of the Third World". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 10 November 2018.
  15. "Latest intelligence - The Delhi Durbar". The Times (London) (36976): p. 3. 13 January 1903. 
  16. Lynton & Rajan 1974, ப. 13–20.
  17. "Seven Loaves - Seven Asaf Jahs".
  18. Law 1914, ப. 84–86.
  19. "Hyderabad to observe 104th anniversary of Musi flood | The Siasat Daily". archive.siasat.com (in அமெரிக்க ஆங்கிலம்). 20 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2018-07-31.
  20. Siddique, Mohammed (29 September 2008). "Hyderabad observes 100th anniversary of Musi flood". Rediff. https://www.rediff.com/news/2008/sep/29hyd.htm. 
  21. "Letters leave a rich legacy of rulers". https://m.dailyhunt.in/news/india/english/deccan+chronicle-epaper-deccanch/letters+leave+a+rich+legacy+of+rulers-newsid-89750998. 
  22. "Proclamation on the abolition of Sati issued by the Nizam VI, Mir Mahbub Ali Khan.". https://www.deccanchronicle.com/nation/current-affairs/100618/letters-leave-a-rich-legacy-of-rulers.html. 
  23. Keen, Caroline (2003). The power behind the throne: Relations between the British and the Indian states 1870-1909. SOAS University of London. p. 82. https://eprints.soas.ac.uk/29223/1/10731318.pdf. 
  24. Journal of the Pakistan Historical Society, Volume 46, Issues 3-4. Pakistan Historical Society. 1998. https://books.google.com/books?id=xfptAAAAMAAJ. பார்த்த நாள்: 28 July 2020. 
  25. Zubaida Yazdani; Mary Chrystal (1985). The Seventh Nizam: The Fallen Empire. Author. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780951081907. https://books.google.com/books?id=oXluAAAAMAAJ. பார்த்த நாள்: 28 July 2020. 
  26. "Hyderabad remembers 6th Nizam Mahbub Ali Pasha".
  27. "Staying at Falaknuma is like holding a mirror up to our past". 2012-09-16.
  28. Law 1914, ப. 28.
  29. Lallana Rāya. Tulasī kī sāhitya-sādhanā: The Legacy of the Nizams. H.E.H The Nizam's Urdu Trust Hyderabad. 
  30. "Picturing the 'Beloved'". https://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/180816/picturing-the-beloved.html. 
  31. Varma, Dr Raj. "Man of many talents". Telangana Today.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்பூப்_அலி_கான்&oldid=3847937" இலிருந்து மீள்விக்கப்பட்டது