உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்புக் கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகில் பாம்புகளுள்ள இடங்கள்

பாம்புகள் பொதுவாக இரையைக் கடித்துக் கொன்று உண்ணும். பெரும்பாலான பாம்புக்கடிகள் விடமற்ற பாம்புகள் மூலமாகவே நிகழ்கின்றது. எடுத்துகாட்டாக சாரைப்பாம்பு. பாம்பு கடித்தலும் விடத்தைப் பாய்ச்சுதலும் வெவ்வேறான செய்கைகள். மேலும் சில சமயம் தற்காப்புக்காக மனிதர்களையும் கடிக்கக் கூடும். விடப்பாம்புகூடக் கடித்து விடத்தைப் அடிக்காமல் இருக்கக்கூடும். தவிரப் பாம்பின் விடம் பல்லில் இல்லை. சரியான முதலுதவிகள் செய்வதன் மூலம் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளைத் தவிர்க்க முடியும்.

உலகத்தின் பல பாகங்களில் நச்சுப் பாம்புக்க்கடியால் மக்களுக்கு ஏற்படும் இறப்பு மற்றும் உடற்குறைபாடுகளின் எண்ணிக்கை காட்டும் வரைபடம்

பாம்புக்கடியால் நஞ்சு பாய்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் 8,000 பேர் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் .[1] உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது [2][3] [4][5] [6] .

பாம்புக் கடிக்குச் செய்யவேண்டாதவை

[தொகு]
 1. கட்டுப் போடலைத் தடுத்தல் - கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் நஞ்சு (விஷம்) ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும்.
 2. வாய்வைத்து உறிஞ்ச வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.
 3. பாதிக்கப்பட்டவரை பதற்றமடைய செய்யவேண்டாம் - பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தேற்றவும். கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தால் அவர்களை மதிநுட்பமாக பாம்புபைத் தேடிவருமாறே அல்லது பணிகளையோ கொடுத்தனுப்பவும்.
 4. காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். - ஒன்று கூரிய ஆயுதங்களால் கிழித்தால் வைத்தியரினால் பாம்பை கடித்த இடத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் தவிர பாம்புக் கடியினால் இறப்பைதை விட ,குருதிப் பெருக்கினால் இறக்ககூடும். தவிர கிழிக்கும் ஆயுதங்கள் துருப்பிடித்திருந்தால் இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
 5. வேறேதேனும் மருந்துகளைக் கொடுக்க வேண்டாம்.

பாம்புக் கடிக்குச் செய்யவேண்டியவை

[தொகு]
 1. காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் (குழாயடி நீர் அல்லது குளியலை நீர் போன்றவை. கவனிக்க ஓடும் நீர் கிடைக்காவிடின் ஓர் வாளியில் நீரை எடுத்து காயத்தில் ஊற்றி நீரை ஓட விடவும்) சவர்காரம் (சோப்பு)(soap) போட்டு மூன்று முறை கழுவவும்.
 2. இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரைத் தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
 3. இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் பாம்பின் தலையில் அடித்துக் கொலை செய்யவேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை. பாம்பைத் தேடுவதில் நேரத்தை விரயம் பண்ண வேண்டாம். வைத்திய உதவி நோயாளிக்கே கடித்த பாம்பிற்கு அல்ல. விடப் பாம்புகளின் தலையில் <> வடிவத்தில் இருக்கும். சாதாரண விடம் அற்ற பாம்புகளின் தலை சாரைப் பாம்பு போன்றிருக்கும்.
 4. ஆண்டி-வெனம் என்கின்ற நச்சு எதிர்ப்பு மாத்திரைகள் பொதுவாக அரச வைத்தியசாலைகளில் வைத்தியரூடாகவே வழங்கப்படும். இவை சில அலுவலகங்களிலும் குளிர் சானதப் பெட்டிக்குள் இருக்கக்கூடும். இவை இருந்தால் அதையும் எடுத்துச் செல்லவும். எனவே வைத்தியசாலையில் இல்லாவிடின் உதவும்.
 5. பாம்பு கொத்திய இடத்தைத் இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து வைத்திய சாலைக்குத் தூக்கிக் கொண்டோ அல்லது வாகனமூடாகவோ 6 மணித்தியாலங்களுக்குள் எடுத்துச் செல்லவும். எவ்வளவு விரைவாகக் கொண்டு செல்லாலமோ அவ்வளவு நல்லது. 6 மணித்தியாலக் கணக்கென்பது காலில் கடித்தி்ருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு கணக்கிடப்படுவது. இதயத்திற்கு அருகில் கடித்தால் விரைவில் மரணம் சம்பவிக்கலாம்.. நடக்கும் போது குருதிச் சுற்றோட்டம் கூட விடம் உடலில் பரவும் வாய்ப்புக் கூடுவதால் நடத்தித் கொண்டு செல்ல வேண்டாம்.
 6. வைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்.

குறிப்பு: பாம்பின் விடம் பல்லில் இல்லை. கொத்தும் போது பாம்பின் விடம் பாம்பின் வாய்ப் பகுதியில் இருந்து பீச்சியடிக்கப்படும். இது பாம்பின் நிலையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் காட்டாக ஆண் பாம்பும் பெண்பாம்பும் இணையும் நிலையில் கொத்துமானால் கூடுதல் விடத்தைக் கக்கும்.

முற்காப்பு நடவடிக்கைகள்

[தொகு]

மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டாம் என்பது முற்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படுவதாகும். இதற்குக் காரணம் மூன்று பேர் ஒன்றன் பின் ஒன்றாக ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது முதலாதாகச் செல்பவர் பாம்பை மிதித்தால் இரண்டாவதாகச் செல்பவர் அடிஎடுத்து வைக்கும் பொழுது படம் எடுப்பது போன்ற செய்கையை பாம்பும் பின்னர் மூன்றாவது ஆள் போகும் போது கொத்தும் நிலையில் இருப்பார். எனவே தான் மூன்று பேராகச் செல்லாமல் நான்கு பேராகவோ அல்லது இரண்டு பேராகவே ஒற்றையடிப் பாதையில் செல்லவும். பாம்புக் கடிக்குள்ளாகாத சப்பாத்துக்களையும் அணியலாம்.

பாம்புக்கடி மருந்து செய்யும் முறை

[தொகு]
 1. பாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர்.
 2. அதனால் அக்கால்நடைகளின் எதிர்ப்பு திரவங்கள் இரத்தத்தில் சுரக்க ஆரம்பிக்கும்.
 3. அந்த எதிர்ப்பு திரவத்தை இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்துவிடுவர்.
 4. அந்த எதிர்ப்பு திரவமே பாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாக செயல்படுகிறது.[7][8] [9][10][11] [12]

மூடநம்பிக்கை

[தொகு]
 1. திரைப்படங்களின் வாயிலாக கடித்த பாம்பே மனிதனிடமிருந்து தன் நஞ்சை உறிந்து விடுவது போல் காட்டுவதால் மக்களிடம் பாம்பு நஞ்சே நஞ்சுக்கு மருந்தாக செயல்படுவது போல் மூடநம்பிக்கை உள்ளது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "First Aid Snake Bites". University of Maryland Medical Center. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
 2. "Snake-bites: appraisal of the global situation" (PDF). Who.com. பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
 3. "Definition of Snakebite". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
 4. Gold, Barry S.; Richard C. Dart; Robert A. Barish (1 April 2002). "Bites of venomous snakes". The New England Journal of Medicine 347 (5): 347–56. doi:10.1056/NEJMra013477. பப்மெட்:12151473. 
 5. Daley, BJ; Torres, J (June 2014). "Venomous snakebites.". JEMS : A Journal of Emergency Medical Services 39 (6): 58–62. பப்மெட்:25109149. https://archive.org/details/sim_jems-a-journal-of-emergency-medical-services_2014-06_39_6/page/58. 
 6. "Venomous Snakes". U.S. National Institute for Occupational Safety and Health. 24 பெப்பிரவரி 2012. Archived from the original on 29 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2015.
 7. "பாம்புக்கடி மருந்து தயாரிக்கும் முறை". p. 1. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் மே 22, 2012.
 8. "Identifying the biting species in snakebite by clinical features: an epidemiological tool for community surveys". Trans R Soc Trop Med Hyg 100 (9): 874–8. 2006. doi:10.1016/j.trstmh.2005.10.003. பப்மெட்:16412486. 
 9. Chris Thompson. "Treatment of Australian Snake Bites". Australian anaesthetists' website. Archived from the original on 23 March 2007.
 10. Currie, Bart J.; Elizabeth Canale; Geoffrey K. Isbister (2008). "Effectiveness of pressure-immobilization first aid for snakebite requires further study". Emergency Medicine Australasia 20 (3): 267–270(4). doi:10.1111/j.1742-6723.2008.01093.x. பப்மெட்:18549384. 
 11. Patrick Walker, J; Morrison, R; Stewart, R; Gore, D (January 2013). "Venomous bites and stings". Current Problems in Surgery 50 (1): 9–44. doi:10.1067/j.cpsurg.2012.09.003. பப்மெட்:23244230. https://archive.org/details/sim_current-problems-in-surgery_2013-01_50_1/page/9. 
 12. Wall, C (September 2012). "British Military snake-bite guidelines: pressure immobilisation". Journal of the Royal Army Medical Corps 158 (3): 194–8. doi:10.1136/jramc-158-03-09. பப்மெட்:23472565. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்புக்_கடி&oldid=3901290" இலிருந்து மீள்விக்கப்பட்டது