பொட்டாசியம் பென்சோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொட்டாசியம் பென்சோயேட்டு
Potassium benzoate.png
Potassium benzoate ball-and-stick.png
Potassium benzoate.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பென்சோயேட்டு
இனங்காட்டிகள்
582-25-2 Yes check.svgY
ChemSpider 10921 Yes check.svgY
EC number 209-481-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23661960
UNII 763YQN2K7K Yes check.svgY
பண்புகள்
C7H5KO2
வாய்ப்பாட்டு எடை 160.21 g·mol−1
தோற்றம் வெண்மை நீர் உறிஞ்சும் திறன் கொண்ட திண்மம்
மணம் நெடியற்றது[1]
அடர்த்தி 1.5 கி/செ.மீ3
உருகுநிலை
69.87 கி/100 மி.லி (17.5 °செ)
73.83 கி /100 மி.லி (25 ° செ )
79 கி /100 மி.லி (33.3 ° செ )
88.33 கி/100 மி.லி (50 ° செ )[2][1]
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் எத்தனாலில் கரையும்
மெத்தனாலில் சிறிதளவு கரையும்
ஈதரில் கரையாது
தீங்குகள்
S-சொற்றொடர்கள் S22-S24/25
Autoignition
temperature
950 °C (1,740 °F; 1,220 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பொட்டாசியம் பென்சோயேட்டு (Potassium benzoate) என்பது C7H5KO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பென்சாயிக் அமிலத்தினுடைய பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் பென்சோயேட்டு எனப்படுகிறது. சில வகை பூஞ்சை, ஈசுட்டு மற்றும் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் உணவு பாதுகாப்புப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் பென்சோயேட்டுக்கு உணவு பாதுகாப்புப் பொருள்களுக்கு வழங்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய குறியீடாக இ212 என்ற அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) 4.5 என்ற அளவுக்கு குறைவாக உள்ள பொருள்களில் இச்சேர்மம் சிறப்பாகச் செயல்படுகிறது. இத்தகைய பொருள்களில் பென்சாயிக் அமிலமாக இது காணப்படுகிறது.

சிட்ரிக் அமிலம் கொண்ட பழச்சாறுகள், கார்பானிக் அமிலம் கொண்ட நுரைக்கும் மது பானங்கள், பாசுபாரிக் அமிலம் கொண்ட மென் குளிர்பானங்கள், வினிகர் கொண்ட ஊறுகாய் வகைகள் போன்ற அமில உணவுகள் மற்றும் பானங்கள் பொட்டாசியம் பென்சோயேட்டு மூலம் பாதுகாக்கப்படுகின்றன. கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பொட்டாசியம் பென்சோயேட்டை ஓர் உணவு பாதுகாப்பானாகப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொட்டாசியம் பென்சோயேட் பல வகை பட்டாசுகளில் சீழ்க்கை அடிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது [3]. வெண்மை நிறத்துடன் நெடியேதுமற்ற பொட்டாசியம் பென்சோயேட்டு எத்தனாலில் நன்றாக கரைகிறது. மெத்தனாலில் சிறிய அளவிலும், டை எத்தில் ஈதர் போன்ற கரைப்பானில் முற்றிலும் கரையாமலும் உள்ளது.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் பென்சோயேட்டு தயாரிப்பதற்கான ஒரு பொதுவான வழி தொலுயீனை பென்சாயிக் அமிலமாக ஆக்சிசனேற்றி அதை தொடர்ந்து பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நடுநிலைப்படுத்தப்படுவதாகும் [4]. பொட்டாசியம் பென்சோயேட்டை ஆய்வக அமைப்பில் உற்பத்தி செய்வதற்கான மற்றொரு வழி மெத்தில் பென்சோயேட்டுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவதாகும்.

உணவு பாதுகாப்பின் வழிமுறை[தொகு]

பென்சோயிக் அமிலத்தை கலத்திற்குள் உறிஞ்சுவதன் மூலம் உணவுப் பாதுகாப்பின் வழிமுறை தொடங்குகிறது. கலத்திற்குள் ஒருவேளை காரக் காடித்தன்மை சுட்டெண் அளவு 5 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் பாசுப்போபிரக்டோகினேசு வழியாக நிகழும் குளுக்கோசின் காற்றில்லா சுவாசம் 95% என்ற அளவிற்கு குறைந்துபோகிறது.

பாதுகாப்பு[தொகு]

பொட்டாசியம் பென்சோயேட்டை வாய்வழியாக உட்கொள்வதாலும், தோல் மீது வெளிப்படுவதாலும் குறைவன நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது[5]. இங்கிலாந்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுக்காக பிரச்சாரம் செய்யும் உணவு ஆணையம், பொட்டாசியம் பென்சோயேட்டால் தோல், கண்கள் மற்றும் சளி சவ்வுகளுக்கு லேசான எரிச்சல் ஏற்படும் என்று விவரிக்கிறது [6]. பென்சாயிக் அமிலம் மற்றும் அதன் உப்புகளை எலிகள் மற்றும் சுண்டெலிகளை விட பூனைகள் குறைவான சகிப்புத்தன்மையை கொண்டுள்ளன [7].

அசுகார்பிக் அமிலம் முன்னிலையில் சில சூழ்நிலைகளில் பென்சோயேட் உப்புகள் குளிர்பானங்களில் பென்சீனை உற்பத்தி செய்யலாம். அளவிடப்பட்ட பென்சீனின் அளவு நுகர்வோருக்கு பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தாது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது [8].

அலைமாலை[தொகு]

கார்பன் 13[தொகு]

கார்பன் -13 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு ஐந்து தனித்துவமான உச்சங்களை காட்டுகிறது. பென்சீன் வளையத்தில் உள்ள கார்பன் அணுக்களில் மில்லியனுக்கு 130-140 பகுதிகளுக்கு இடையே நான்கு உச்சங்கள் உள்ளன. கார்பனைல் குழுவிலிருந்து கிடைக்கும் கார்பன் அணுவில் மில்லியனுக்கு 178 பகுதிகளில் கூடுதலான உச்சம் உள்ளது [9].

அகச்சிவப்பு நிறமாலை[தொகு]

அகச்சிவப்பு நிறமாலையின் முக்கிய உச்சங்கள் பின்வருமாறு.உள்ளன [9]

 • 1610: கார்பனைலில் கிடைக்கும் C=O f
 • 1580: பென்சீன் வளையத்திலிருந்து கிடைகும் C=C

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Potassium Benzoate". Emerald Kalama Chemical. பார்த்த நாள் 2014-06-02.
 2. Seidell, Atherton; Linke, William F. (1952). Solubilities of Inorganic and Organic Compounds. Van Nostrand. https://books.google.com/books?id=k2e5AAAAIAAJ. பார்த்த நாள்: 2014-05-29. 
 3. Press Release from Defense Technical Information Center; article- Potassium Benzoate for Pyrotechnic Whistling Compositions: Its Synthesis and Characterization as an Anhydrous Salt
 4. Preparation of potassium benzoate, US 3867439 
 5. "Benzoates". United Nations Environment Programme. மூல முகவரியிலிருந்து 2018-03-07 அன்று பரணிடப்பட்டது.
 6. [1], The Food Magazine, Issue 77, Food Commission UK
 7. Bedford PG, Clarke EG (1972). "Experimental benzoic acid poisoning in the cat". Vet Rec 90 (3): 53–58. doi:10.1136/vr.90.3.53. பப்மெட்:4672555. 
 8. "Questions and Answers on the Occurrence of Benzene in Soft Drinks and Other Beverages". Food and Drug Administration. "...the levels of benzene found in beverages to date do not pose a safety concern for consumers."
 9. 9.0 9.1 SciFinder - Carbon-13 NMR Spectrum for 582-25-2