பேச்சு:ம. கோ. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ம. கோ. இராமச்சந்திரன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

எம்.ஜி.ஆர். நாத்திகத்தைப் பின்பற்றியதாகக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சரியா? அரசியல் கட்டுரைகளில் வெளி மேற்கோள்களின் இன்றியமையாமைய இது உணர்த்துகிறது. -- Sundar \பேச்சு 09:15, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

அவர் கோயில்களுக்கு சென்று வழிபட்டதுண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இறுதி வரை நாத்திகத்தை பின்பற்றினாரா என்பது கேள்விக்குறியது--ரவி 10:26, 1 ஆகஸ்ட் 2006 (UTC).

பெயர் தலைப்பை ம.கோ.இராமச்சந்திரன் என மாற்ற பரிவு. ஆங்கில பேச்சை தமிழெழுத்தில் கலக்கக் கூடாது.--விஜயராகவன் 11:56, 14 பெப்ரவரி 2007 (UTC).

எம்.ஜி.ஆர். கேரளாவிலுள்ள மூகாம்பிகை கோவிலின் பக்தர் [1]. அவர் அப்படி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார் [2]. அதனால் மூகாம்பிகை வழிபாடு ரொம்ப பிரபலமாகி, தமிழ்நாடு அரசு 'மூகாம்பிகை ஸ்பெஷல்' என்று பஸ் ஓட்டியதாக ஞாபகம். எம் ஜி ஆர் மூகாம்பிகை கோயிலுக்கு வைரவாள் அளித்தார் எனவும் சொல்லப் படுகிறது [3] . இந்த சம்பவங்களை மேலும் உறுதிப் படுத்தி கட்டுரையில் சேர்க்க வேண்டும். இணைகளிலேயே எவ்வளவோ தகவல் இருக்கு.

ம.கோ.ரா.வின் மூகாம்பிகை பக்தியை சேர்த்தால்தான், வாழ்க்கைக் குறிப்பு முழுமையாகும்.--விஜயராகவன் 12:50, 14 பெப்ரவரி 2007 (UTC)

எ.ஜி.ஆர். நாத்திகரல்ல என்றே நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தகுந்த சான்றுகளுடன் மாற்றுங்கள்.

பிற விவரங்களுக்கான சான்று: (http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/) "திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து.

எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்."-- Sundar \பேச்சு 07:56, 15 பெப்ரவரி 2007 (UTC)

நாத்திகம்[தொகு]

கடவுள் நம்பிக்கையற்ற என்ற முன் தொடர் நாத்திகம் என்னும் சொல்லுக்கு முன் வருவது நல்லது. இது தேவை. நாத்திகம் என்னும் சொல்லுக்கு ஒரு சிறு விளக்க, முன்னுரை போல் இருப்பதால் பயன் குன்றாது. சில இடங்களில் இப்படி எழுதுவது வேற்கத்தக்க மரபு. நாத்திகம் என்பது நா+ அஸ்தி = நாஸ்தி என்பதில் இருந்து பிறந்தது. அஸ்தி என்றால் உள்ளது, நாஸ்தி என்றால் ஒன்றானது இல்லை என்னும் பொருள். கடவுள் இல்லை என்னும் பொருள் மரபாகப் பெற்றது (எல்லா இடத்திலும் இப்பொருள் செல்லாது). நாஸ்தி >நாஸ்திகம் > நாத்திகம். கடவுள் நம்பிக்கையற்ற என்னும் முன் அடைமொழி இருப்பது நல்லது.--செல்வா 15:30, 15 பெப்ரவரி 2007 (UTC)

நாம் மிகைச் சொற்களை தவிற்க வேண்டும். நாத்திகம் பக்கத்திற்க்கு போனால் அதையே திருப்பி சொல்கிறது. நாத்திகத்தின் பொருளே அதுதானே !! சொல் சிக்கனத்தை கடைபிடிப்பது விகிக்கு உகந்தது.--விஜயராகவன் 15:36, 15 பெப்ரவரி 2007 (UTC)
விஜயராகவன், அவை பொருள் உணர்த்தும் முன் அடைமொழி, மிகைச் சொற்கள் அல்ல. நாத்திகம் என்னும் கட்டுரை விரிவாக கருத்தும் வரலாறும் கூறவல்லது. நாத்திகத்தின் பொருள் எல்லா இடத்திலும் அதுவல்ல. இங்கு கடவுள் நம்பிக்கை அற்ற என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. மேலும் நாஸ்திகம், நாத்திகம் என்பது 10% மக்களுக்கு வேண்டுமானால் புரியும் (ஓரளவிற்காவது). 90% மக்களுக்கு அந்த அடைமொழி வலு சேர்க்கும். நாத்துகம் என்பதை நீக்கி இறைமறுப்பு என்று எழுதினால் அந்த முன் அடைமொழி தேவை இல்லை. அப்படிச் செய்யலாமா?--செல்வா 15:45, 15 பெப்ரவரி 2007 (UTC)

நாத்திகம் என்பது இறைமறுப்பை விட தெரிந்த சொல். அதன் பொருள் இறைமறுப்பாக இருந்தாலும், பரவலாக நாத்திகம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு 'கலைச்சொல்' ஆகி விட்டது. அதனால்தான் நாத்திகம் என செய்தித்தாளே இருக்கிரது. நாத்திகம் கலைச் சொல், இறைமறுப்பு விளக்கச் சொல்.

அகராதிப் படி நாத்திகம் (p. 2214) [ nāttikam ] n nāttikam . < nāstika. 1. Atheism; கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 2. Blasphemy; தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந் தேனை (காஞ்சிப்பு. கழுவா. 28).

அதே அகராதியில் இறைமறுப்புக்கு பதில் இல்லை.--விஜயராகவன் 16:04, 15 பெப்ரவரி 2007 (UTC)

கூகிளில் போட்டால் நாத்திகம் - 1860 பக்கங்கள், இறைமறுப்பு 32 ப. --விஜயராகவன் 16:11, 15 பெப்ரவரி 2007 (UTC)

(1) கூகிள் தேடலின் விடைகள் விக்கிக்கு முக்கியமில்லை. இதுபற்றி பயனர் சுந்தர் ஓரிடத்தில், ஆங்கில விக்கியின் கொள்கை உரையாடலில் இருந்து எடுத்தெழுதினார். எனவே கூகிள் தேடல் விடைகளை ஒரு வலுசேர்க்கும் கருத்தாக வைக்காதீர்கள் (2) தமிழ்மொழி வாழும் மொழி. செத்த மொழி இல்லை. புதுச் சொற்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய சொற்கள் சில வழக்கற்றுக்கொண்டே இருக்கும். இன்று வழங்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களானவை நீங்கள் காட்டும் பழம் அகராதியில் காணவியலாது. அண்மைக் காலத்தில் க்ரியா என்னும் ஒரு புது அகராதி வெளி வந்தது, அதில் வழக்கில் உள்ள ஏராளமான சொற்கள் விடுபட்டு இருந்தன. Tamil Lexicon ஓர் அரிய படைப்பு என்பதை யாரும் மறுக்க இயலாது, ஆனால் அதில் ஏராளமான குறைகள் இருப்பது பற்றி தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் எழுதியுள்ளனர். மேலும் அது பழைய அகராதி, வழக்கில் உள்ள பல சொற்கள் அதில் இல்லாதது வியப்பில்லை. அதில் தேடுவது மிகவும் நல்லது, ஆனால் அதில் உள்ளதால் பயன்படுத்த வேண்டும் என்பதில் வலு இல்லை. அகரமுதலிக் கலையில் பல செல்லாச் சொற்களும், வரலாற்று நோக்கில் சேர்ப்பது உண்டு. --செல்வா 16:59, 15 பெப்ரவரி 2007 (UTC) ஒரு சோதனைக்காக "கடவுள் மறுப்பு" என கூகிளில் இட்டுத் தேடினால் இன்று 1320 பக்கங்கள் சுட்டுகின்றது. கூகிள் தேடலின் விடைகள் ஒரு சொல்லின் தேர்வுக்கு வலு சேர்பதல்ல.--செல்வா 17:05, 15 பெப்ரவரி 2007 (UTC)

கடவுள் மறுப்பும் விளக்கச் சொல்தான். எவ்வளவோ விளக்கச் சொற்களை சாதுர்யமாக அமைக்கலாம். ஆனால் மாணிக்கவாசகர் காலத்திலிருந்து (அதற்கு முன்னாடியும் இருக்கலாம்) பயனாகும் சொல் நாத்திகம். ஆங்கிலத்தில் atheism என்றழைக்கிறோம். அது கிரேக்க வேர், ஆனாலும் ஆங்லேய வேரில்லை என யாரும் சொல்லி மற்ற கலைச் சொற்க்களை கண்டுபிடிப்பதில்லை.

செ.ப.அ. . ஒவ்வொரு தெரிந்த தமிழ் சொல்லுக்கும், தமிழர்களால் ஆளப்பட்ட சொல்லும் தற்காலத்திலேயும், எல்லா தமிழ் இலக்கியத்திலும் எப்படி பொருளாகிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தை உள்ளது. அந்த வேலையை அது பிராமாதமாக செய்கிரது. அதற்கு நிகர் இதுவரை வேறொரு அகராதியும் தமிழில் இல்லை. இதுவரை அதன் கோட்பாடுகளை கொடுத்ததை மறுக்கமுடியாது. உதாரணமாக 'நாத்திகம்' திருவாசகத்தில் பயனாகிரது என சொல்கிறது; அதை மறுக்கப் போகிறீர்களா? பொதுவாக அறியும் அர்த்ததை (கடவுள் இல்லை என) கொடுக்கிரது, அதை மறுக்கிறீர்களா? தேவநேய பாவாணரை சுட்டிக் காட்டி அதையெல்லம் மறுக்கப் போகிறீர்களா? உங்கள் நோக்கம் புரியவில்லை.

நாம் பொதுவான அகராதியை நம்பாவிட்டால் - அதுவும் தக்க காரணமின்றி - , பொதுவாக தெரியும் சொற்களுக்கு அது தரும் பொருள்களை புறக்கணித்தால், பொது சம்மதம் இல்லாமல் சுய வெறுப்பு/விறுப்பு படி தன்னிச்சையாக எழுதுவோம்..--விஜயராகவன் 17:34, 15 பெப்ரவரி 2007 (UTC)

விஜய், சொல்புழக்கத்தில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. மாணிக்கவாசகரும் தொல்காப்பியரும் பின்னர் வந்தோரும் பயன்படுத்தியிருந்தாலும் ஒரு கலைக்களஞ்சியத்தில் நல்ல தமிழ்வேர்ச்சொற்களைப் பயன்படுத்துவதால் நல்லதுதானே? (பொதுவழக்கு மற்றும் பழைய அகராதியில் உள்ள சொற்களையும் மாற்றுச் சொற்களாகத் தரலாம்). சில பொதுப்பயன்பாட்டுச் சொற்கள் முதன்மையாக வடமொழியிலும் தமிழ்வேர்ச்சொற்கள் அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது தொடர்பான நமது பழைய உரையாடலை ஒருமுறை பாருங்கள். -- Sundar \பேச்சு 17:45, 15 பெப்ரவரி 2007 (UTC)
நீங்கள் ஏற்கெனவு அங்கு உங்கள் கருத்தைப் பதிந்துள்ளதை இப்போதுதான் பார்த்தேன்ன். தவறாகக் கொள்ள வேண்டாம். -- Sundar \பேச்சு 17:53, 15 பெப்ரவரி 2007 (UTC)


ஏன் விஜயராகவன், தேவை இல்லாத கருத்துக்களை இங்கே இடுகிறீர்கள்? நான் நாத்திகம் வேண்டாம் என்றா சொன்னேன்? எங்கே என்று காட்டுங்கள்! முன் அடைமொழி தேவை என்று மீண்டும் இட்டேன். நாத்திகம் என்னும் சொல்லை நீக்கவில்லை. தமிழில் எல்லாச் சொற்களும் ஒருவகையான விளக்கச்சொற்கள்தாம். சில நுட்பமாய்ச் சுட்டும் சில சற்று விளக்கமாய்ச் சுட்டும். அவ்வளவே. இது பிறமொழிகளுக்கும் சற்றேறக் குறையப் பொருந்தும். நாத்திகம், இறைமறுப்பு ஆகிய இரண்டும் போதிய அளவு சுருகமான சொற்கள்தாம். நாத்திகம் என்பதைக் காட்டிலும், இறைமறுப்பு (இறைமறுப்பர், இறைமறுப்பி = நாத்திகர்) என்பது இன்னும் தெளிவான சொல் (மிகப் பலருக்கும்) என்பது என் துணிபு. கட்டுரை ஆக்கத்தில் நேரத்தை செலவிடுவது நல்லது. இத்தகு உரையாடல்களைத் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து. நான் முதலில் தலையிட வேண்டாம் என எண்ணித்தான் ஒதுங்கியே இருந்தேன். வளம் பெருக்குமாறு பணியாற்றுவது நல்லது. நான் எல்லாவற்றுக்கும் மறுமொழி தருவேன் என சொல்ல இயலாது. எனவே மறுமொழி தராவிடால் தவறாக எண்ணாதீர்கள். உங்கள் வரவு நல்ல ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுமாறு அமைய வேண்டுகிறேன்.--செல்வா 18:05, 15 பெப்ரவரி 2007 (UTC)

நீக்கப்பட்ட பகுதி[தொகு]

"இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது."

கட்டுரையில் இருந்து மேலேயுள்ள பகுதியை நடுநிலை மீறியதாகக் கருதி நீக்கியிருக்கிறேன்:--Kanags \பேச்சு 21:09, 25 ஜனவரி 2010 (UTC)

இந்தப் பகுதியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உண்மைதான், சென்ற பொது தேர்தலில் கூட என் தாத்தா எம்.ஜி.ஆரின் சின்னத்தில் தான் ஓட்டுபோட வேண்டும் என்றார். இன்றளவும் நடைமுறையில் இருக்கின்ற உண்மைதான் இது. விக்கி அன்பர்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்!. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

அப்பகுதியை மீள்வித்திருக்கிறேன். சான்றுகள் ஏதாவது நம்பத்தகுந்ததாக இருந்தால் கட்டுரையில் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 10:18, 10 ஜூலை 2010 (UTC)
சான்று சேர்க்கப்பட்டுள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 16:27, 10 பெப்ரவரி 2011 (UTC)
மிக்க நன்றி சோடாபாட்டில் அவர்களே.. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:24, 3 ஏப்ரல் 2012 (UTC)ஈழம்[தொகு]

எம்.ஜி.ஆர் ஈழம் அமைய உதவியதை குறிப்பிட்டிருக்கிறேன்.தனிபக்கமாக அமைத்தால் நன்றாக இருக்கும்.

ஆதாரங்கள் - ஈழமும் எம்.ஜி.ஆரும் - பழ.நெடுமாறன்

பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ் காந்தி!

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தனி பக்கம் தேவையில்லை; இக்கட்டுரையில் ஒரு ”ஈழமும் எம்ஜியாரும்” என்ற தனி தலைப்பாக எழுதலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 02:46, 6 சனவரி 2011 (UTC)

செய்திகள் அதிகம் உள்ளது. அவை தனிப்பக்கத்திற்கு தகுந்தவையாக இருக்கும் என நினைத்தேன். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை பகுதியில் அவர் அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்ற கழகத்தினை தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கட்சி ஆரமித்த போது வெறும் அண்ணா திராவிர முன்னேற்ற கழகம் என்றே இருந்தது. கட்சி பெரியதாகி, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் பரவிய போதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. விரைவில் இதற்கான ஆதாரத்தினை சமர்ப்பிக்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

கட்டுரை 25kb அளவு உள்ளது. பொதுவாக 40-50kb அளவு வரை பெரிதானால் பிரிப்பது பற்றி ஆலோசனை செய்வது வழக்கம். எனவே இதனை விரிவுபடுத்துங்கள், மிகவும் பெரிதாகி விட்டதென்றால், திரைப்படம்/அரசியல் வாழ்க்கை என்று பிரித்துவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:26, 11 சனவரி 2011 (UTC)

தனிப்பக்கம்[தொகு]

எச்சரிக்கை: இந்தப் பக்கம் 31 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும்.

என்ற எச்சரிக்கை வந்தமையால் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையை தனிப் பக்கமாக மாற்றியிருக்கிறேன். இப்போதைக்கு தகவல்களை மட்டுமே சேர்த்திருக்கிறேன். விரைவில் மிகச்சரியான பக்கமாக மாற்றுகிறேன்.

இந்தக் கட்டுரையில் திரையுலக வாழ்க்கைப் பற்றிய சிலவற்றை அகற்றி விட்டு, எம்.ஜி.ஆரின் தாய்ப்பாசம், அரசியல் திட்டங்கள் என விரிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.

விக்கியன்பர்கள் உதவ வேண்டும்.

நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

கட்டற்ற படிமம் தேவை[தொகு]

எம்ஜிஆரின் பிறந்த நூற்றாண்டு நாள் கொண்டாடப்படும் வேளையில், அவரது படிமம் எதுவும் விக்கிப்பீடியாவில் இல்லாதிருப்பது வியப்பாக உள்ளது. முதல் பக்கத்தில் நாளை காட்சிப்படுத்த வேண்டும். @Selvasivagurunathan m, Uksharma3, மற்றும் Jagadeeswarann99:. ஜகதீசுவரன், நீங்கள் வரைந்த படம் ஏதாவது உள்ளதா?--Kanags \உரையாடுக 10:48, 16 சனவரி 2017 (UTC)

http://mgrperannews.blogspot.in/ என்ற பக்கத்திலுள்ள http://1.bp.blogspot.com/_p5qnsQgFfIw/SKKLNugCL5I/AAAAAAAAAKg/g0Nxu5LsAeQ/S410/mgramachandran7.jpg படிமம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்--UKSharma3 12:27, 16 சனவரி 2017 (UTC)